பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/732

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

712 சணல்‌, நார்‌ இழைகள்‌

712 சணல், நார் இழைகள் மிகையாக தலால் உயரும். முதிர்வதற்கு முன் தண்டிலிருந்து இழை பிரித்தல் கடினமாகும்; மாறாக, ஊறவைத்தல் இழையை வலிமையிழக்கச் செய்யும். நீர் மெல்லச் செல்லும் அருவியில் ஊறவைத்தல் பரிந்துரைக்கப்படுகிறது. சணல் நூலின் குறுக்களவையும் இழைச்சிணுக்கு எண்ணையும் குறிக்கும் அலகு 12,740 மீட்டர் நூலின் எடை. சணல் இழை வலிமை குன்றியது. நீட்சி, மீள்தன்மை குறைவாகவும். சொரசொரப்பு, விறைப்புத்தன்மை, நொறுங்கும் இயல்பு கூடுதலாக இந்தியச் வும் உள்ளன. சணலில் 58-63a- செல்லுலோசும், 21 24% வரை ஹெமி செல்லு லோகம், 12 14% விக்னினும் உள்ளன. லிக்னினின் தாக்கத்தால் (சூரிய ஒளி படுமாறு வைத்திருந்தால்) சணல் மஞ்சளாகவோ, பழுப்பாகவோ நிறமாற்றம் அடையும். நீர்த்த அமிலங்கள் சணலைப் பளபளப் பாக்குகின்றன. அடர் அமிலங்கள் நீராற் சிதைவு தோற்றுவிக்கின்றன. அடர் எரிகாரம் இழையைப் பருக்க வைக்கும். தயாரிக்கப்படும் சணலில் 75% வரை கோணிகளும் பைகளும் தயாரிக்கப் பயன்படும். கயிறு, தரைவிரிப்பு ஆகியனவும் இந்தியச்சணலில் தயாரிக்கப்படுகின்றன. உலகின் மொத்தச்சணல் உற்பத்தியில் 60% கல்கத்தா சணல் தொழிலில் பயன்படுகிறது. ரமி (ramie). பொமேரியா நீலியா (Bochmeri.1 Nivea) எனும் புதர்ச் செடியிலிருந்து பெறப்படும் தண்டு இழை சைனாப் புல் என்று குறிப்பிடப் படும். இப்பயிர் அதன் இழைக்காக நூறாண்டு களுக்கும் மேலாக வளர்க்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு நான்கு போகம் வரை இப்பயிரை வளர்க்கலாம். பயிர்க்கழிவை மீண்டும் மண்ணினுள் செலுத்தினா வன்றி, ரமி பருத்தியைவிட 16 மடங்கு வாகச் சத்து இழக்க வல்லது. விளைச்சல் ஆண்டுக்கு ஏக்கருக்கு 360 - 900 கி.கிராம் ஆகும். பசுந்தண்டுகளின் எடையில் 2.5 - 3.5% வரை கச்சா இழை கிடைக்கும். ராஸ்படார் (raspador) எனும் எந்திரத்தினால் செடியின் தண்டிலிருந்து பட்டையும், மரப்பொருளும் அகற்றப்படுகின்றன. விரை கச்சா இழையில் இடம் பெறும் கோந்து, மெழுகு ஆகியவற்றை நூற்புக்கு முன்பு அகற்றுதல் தேவை. சோடியம் ஹைட்ராக்சைடைக் கொண்டு இவ் வகற்றம் நிகழ்த்தப்படுகிறது. 24 மணி நேரம் ஊற வைத்து. 4 மணி நேரம் கொதிக்க வைத்து, கழுவி, நடுநிலையாக்கி, மீண்டும் கழுவி உலர்த்தப் படும். ரமி ஒரு பளபளப்பான வெண்ணிற இழை. நுண்ணுயிர்களும், பூசணங்களும் ரமியைப் பாதிப் பதில்லை. உயர் ஈர உறிஞ்சலும், விரைவான உலர்தலும் இத்துணியின் சிறப்பியல்புகளாகும். கற்சணலையும் விளன் சணலையும் விட ரமியின் ழையுறைச் செல்கள் நீளமானவை. நீள்வெட்டு முகத்தில் நோக்கினால் சிறிய கணுவைப் போன்ற மேடுகளும், கோடுகளும் முறுக்கின்றிக் காணப்படும். விட்ட அளவு தனி நாரிழைகளின் 25 - 75 மைக்ரான் ஆகும். கோந்து நீக்கப்பட்ட இழையில் 96-98% வரை & செல்லுலோஸ் இருக்கும். - ஆகிய தாள் வலிமையுடைய ரமி ஏனைய சணல்வகை நாரிழைகளைப் போன்றே கித்தான், கொசுவலை, மேசை விரிப்பு, அறைகவன் உறை, குல்லாய் வற்றைத் தயாரிக்க உதவுகிறது. கப்பல்களில் உந்து தண்டுகளை உறையிடுவதற்கும், சிகரெட், நாணயம் ஆகியவற்றின் தயாரிப்புக்கும் உயர்வகைச் சன்ன ரமி பயன்படுகிறது. பெரிய அளவில் தயாரிப் பதற்குச் செலவு கூடுமாதலாலும் மிகச் சன்னமான நூல்களாக நூற்க இயலாதாகையாலும் ரமி ஏனைய தண்டு இழைகளைப் போன்று விரிவடையவில்லை. பயன்படுத்தப்படும் கம்பளியுடன் நிரப்பு நூலாகப் இந்நூல் ஈரத்தால் பாதிப்புறுவதில்லை; எளிதில் சாயம் ஏற்கிறது. கற்சணல் (hemp). இயற்கையான மர இழை கொண்ட ஓங்கி வளரும் இப்பயிரில் சுமார் 30 வகைகள் அறியப்பட்டுள்ளன. கானாபிஸ் சடைவா (Cannabis sativa) எனப்படும் தாவரமே இவற்றுள் முதன்மையானது. நீண்ட தண்டும் குறைவான எண்ணிக்கையில் கிளைகளும் விதைகளும் கொண்ட வகையே இழைத் தயாரிப்புக்கு ஏற்றது. (கிளை மிகுந்த வகைக் கற்சணல் போதைப் பொருள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது). பூக்கள் விரிந்து மகரந்தத்தூள் உதிரத்தொடங்கியவுடன் அறுவடை செய்தால் சன்னமான வலிமை குறைந்த இழை களும், தாமதமாக அறுவடை செய்தால் கடின மான, நொறுங்கக்கூடிய இழைகளும் கிடைக்கும். அறுவடை செய்யப்பட்ட கற்சணல் இழையாகப் பிரிக்கப்படும் வரை ஏனைய தண்டு ழைகளுக்கு உரிய வழிமுறைகளே பின்பற்றப்பட்டு வருகின்றன. ஈர நூற்பு முறை மிகவும் சன்னமான நூல்களை அளிக்கிறது. லினன், சணலைவிட நெகிழ்வு குறைந் தது. சலவை செய்யும் முறையைக் கடினமாக்கக் கூடியதாகவும் உள்ளது. மிகவும் சன்னமான வகை வெள்ளியைப் போன்ற பளபளப்பையும், 15 செ.மீ. வரை புரிநீளத்தையும் கொண்டது. சுற்சணல் இழையில் 67% செல்லுலோசும், 16% ஹெமி செல்லு லோசும் அடங்கியுள்ளன. லினன் சணலில் S வகைத் திரிப்புக்கு எதிர்மாறாகக் சுற்சணலில் Z திரிப்பு -(Z twist) இடம் பெறுகின்றது. கற்சணல் கயிறு, கட்டு நூல், மின் வடம், வலை, கித்தாள், சாக்கு. மூடு விரிப்பு ஆகியவற்றின் தயாரிப்பில் பயன்படுகிறது. சன் (Sunn). பட்டாணி வகையைக் சார்ந்த இப் பயிர் இந்தியாவில் பெரும்பாலும் சத்துக் குறைவான மண்ணிலும், வறண்ட நிலப்பகுதியிலும் பயிரிடப்படு கிறது. வெண்ணிற நுண்வகை, பசுமையான, வலிமை யுற்ற வகை, நீளமான வெளிர் மஞ்சள் வகை என