சணல் புரியிழை 713
மூன்று வகைகள் அறியப்பட்டுள்ளன. ஏனைய சணல் வகைகளைப் போன்றே இழைப் பிரிப்பு வழிமுறை அமைக்கப்பட்டுள்ளது. மீன்பிடிப்பு வலை, கட்டுக் கயிறு. தடித்த கித்தான் ஆகியவற்றைத் தயாரிப் பதற்கு இச்சணலைப் பயன்படுத்தலாம். கெனா ஃப் ரோசலி (roselle). யூரேனா (urcha) ஆகியன மாலோ இனத்தைச் சார்ந்த தண்டு இழைகளாகும். இவை முறையே ஹைபிஸ்கஸ் கன்னாபினஸ். சப்டரிஃபா ( Hibiscus cannabinus. sabdariffa). யூரேனா லொபாடா ஆகிய தாவரங்களிலிருந்து பெறப்படு கின்றன. அபுடிலான் எனும் தண்டு இழை சீனாவில் தயாரிக்கப்படுகிறது. - மே.ரா.பாலசுப்பிரமணியன் நூலோதி. B.P. Corbman, Textiles - Fibre to Fabric, Sixth Edition, McGraw-Hill Book Com- pany, Singapore, 1985. சணல் நூல் இந்தியாவிலும், பங்களாதேஷிலும் பயிராகும் சணலின் தண்டு இழையிலிருந்து நூற்கப்படும் நூல் சணல் நூல் (jute yarn) ஆகும். பொதுவாக, சணல் நூல்களை வணிக அடிப்படையில் வகைப்படுத்தும் விரிலான வழிமுறைகள் இல்லையெனினும், தரவாரியாகப் (தோராயமாக) பிரிக்கப்பட்ட இழைகளிலிருந்து தயாரிக்கப்பட்ட சன்னமான நூல்களின் தன்மைகளுக்கும் அளக்கக்கூடிய இழை இயல்புகளான நீளம், நுண்மை, வலிமை ஆகியவற்றுக்கும் தொடர்பை நிறுவுவதற்கு இந்தியாவிலும், இங்கிலாந்திலும் சணல் தொழிலில் வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. நூல்களைத் தரக்கூடிய இழைகளே உயர்ந்தவை. நூல் தயாரிக்குமுன்பே இழையின் வண்ணம், நீளம், நுண்மை, வலிமை, பளபளப்பு, மென்மை, தூய்மை. அடித்தண்டு அல்லது வேர்க் கலப்பு ஆகியவற்றை இயன்ற அளவுக்குக் கட்டுப்படுத்துதல் தேவை. எனினும், அடக்க விலையைக் கருத்திற்கொண்டு பல வகைச் சணல் இழைகளை ஆய்வினால் நிறுவப்பட்ட விகிதங்களில் கலந்து, தன்மைகளில் ஒருவிதச் சீர்மையை (uniformity) ஏற்படுத்துதல் வழக்கம். பயன் இயற்பியல் இயல்புகளில் இணக்கமான இழைக் கட்டுகளைத் (bales) திறந்து இரண்டறக் கலத்தல் வேண்டும். இதைக் செயல்படுத்துவதற்குப் படும் பொதிக் கிளரி (bale opener or breaker) எனும் கருவியில் வெவ்வேறு வலையமைவுகளை ஒன்றாக அமைக்கும் வரை 2 ளைகள் (fluted rollers) பொருத்தப்பட்டுள்ளன. மென்மை யும். நெகிழ்வும் உடையனவாகச் செய்கின்றன. கலவையின் மேல்பகுதியைச் (heads) சிறு சிறு கட்டு களாகக் (stricks) கட்டி. பெரிய பலகையின்மீது இலை சணலை சணல் புரியிழை 713 பரப்பவேண்டும். இங்கு ஒரு கட்டின் அடிப்பகுதி மற்றொன்றின் மேல் பகுதியுடன் பொருந்தி இருக்கும். ஒரு தட்டியில் செருகப்பட்ட ஆணிகளில் இக் கட்டுகள் சுற்றப்படுகின்றன. துணியாக்சு முறையில் செயல்திறன் உயர்வதற்கு உதவியாக இக்கட்டத்தில் சணலுடன் எண்ணெய், நீர், பால்மமாக்கி (emulsi- fier) ஆகியன கலக்கப்படுகின்றன. பரப்பியமைப்பு (spreader) OUT IN QU இழைபுரியாக (sliver) மாற்றி, இணைப்புரியாக்கியில் (carding machine) புகுத்து கிறது. அடுத்த கட்டமான மெலிந்த நூல் தயாரித்தல் (roving) பருத்தியையும், வினனையும் முறைப்படுத்து வது போன்றதேயாகும். சணல் க நூலின் குறுக்களவு, அதாவது, இழைச் சிணுக்கு எண் (count) ஒரு சிறப்பு அலகால் குறிப்பிடப் படுகிறது. 13,160 மீட்டர் நீளங் கொண்ட ஒரு நூல் கதிரின் (spindle) எடை கிலோகிராம் அலகில் எவ்வளவோ, அதுவே சணல் நூலின் இழைச் சிணுக்கு எண்ணாகும். பருத்தி மற்றும் பலவகை நூல்களின் நுண்மையைக் குறிப்பிட வகுக்கப்பட்டுள்ள நவீன பன்னாட்டு அலகான டெக்ஸ் (tex) எனும் அளவையையும் சணலின் நுண்மையைக் குறிப்பிடு வதற்குப் பயன்படுத்தலாம். சணல் நூலை வெண்மையாக்குவது எளிதன்று. ஈரவகை நூற்புக்கும் சணல் ஏற்றதன்று. சணல் நூல் பெரும்பாலும் சாக்கு, கோணிப் பை, தரை விரிப்பு ஆகியவற்றைத் தயாரிக்கவே பயன்படு கிறது. -மே .ரா.பாலசுப்பிரமணியன் நூலோதி. B. P. Corbman, Textiles - Fibre to Fabric, Sixth Edition, McGraw - Hill Book Company, Singapore, 1985. சணல் புரியிழை இது கன்னாபிஸ் சடைவா எனும் ஒரு வகைத் தாவரத்திலிருந்து தயாரிக்கப்படும் நாரிழையாகும். இச்சணல் லகைச் (hemp bast fibre) செடியின் தண்டுப் பகுதியிலிருந்து இந்நாரிழை பிரித்தெடுக்கப் படுகிறது. 30 வகைகளுள்ள இவ்விழை சோவியத் ஒன்றியக் குடியரசு, இத்தாலி, யூகோஸ்லோவாகியா ஆகிய நாடுகளில் பயிரிடப்படும். சணல் வகையி லிருந்தே பெரிதும் பிரித்தெடுக்கப்படுகிறது. முற்றிய நிலையில் இச்செடியின் தண்டுப் பகுதி வழவழப்பாக மனித விரலளவுக்குத் தடித்திருக்கும்; தண்டு உள்ளீ டற்றது. மெலிந்த திசுப்பகுதியைச் சுற்றி மரப் பகுதியும் அதனை நார்ப் பகுதியுடன் இணைக்கும் கோந்தும் உள்ளன.