பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/734

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

714 சத்துணவின்மை

714 சத்துணவின்மை நார்களை மூடியிருக்கும் பட்டை, தண்டுப் பகுதி யின் வெளிச் சுவராகும். நீர் அல்லது பனியில் இச் சணல் ஊற வைக்கப்பட்டு மென்மையாக்கப்படுகிறது. 7-10 நாளுக்கு நீரில் ஊறிய மென்மையான துண்டுகள் உலர்த்தப்படுகின்றன. இத்தண்டின் இழை மஞ்சள் கலந்த பழுப்பு நிறங்கொண்டது; மிக மென்மை வானது; நுண் யாப்புடையது. பணியில் ஊறவைத்தல் முறையில் தண்டுகள் நிலத்தில் பரப்பப்படுகின்றன. வெப்பம், பனி, மழை ஆகியவற்றால் நொதித்தல் நிகழ்ந்து கோந்து வகைத் திசு அகன்றுவிடுகின்றது. பின்பு காம்புகள் உலர்த்தப்பட்டு நார் பிரிக்கப் படுகிறது. காடி பொருத்தப்பட்ட உருளைகளின் வழியே காம்புகள் செலுத்தப்பட்டு, தண்டு சிறு துண்டுகளாக வெட்டப்படும். இழைகளில் ஒட்டிக் கொண்டிருக்கும் மரப்பொருள் துருசினால் அகற்றப் படும். இத்தாலியில் சணற்புரியிழைகள் போலோனா (bologna), நேபிள்ஸ் (naples) என ரண்டாக வகையிடப்படுகின்றன. போவோனாவில் 9 உட்பிரிவு களும், நேபிள்சில் 4 உட்பிரிவுகளும் இருக்கும். சோவியத் ஒன்றியக் குடியரசில் தயாரிக்கப்படும் இழைகள் தூய்மையாக்கப்பட்டவை, தூ ய்மையாக்கப் படாதவை என இரண்டாகப் பிரிக்கப்படும். சணல் புரியிழைகள் 100-500 செ. மீ. நீளமும், 0.5-5 மி.மீ. அகலமும் கொண்ட தட்டையான பட்டைகளரகும். சணல் புரியிழை கடினமாகவும். விறைப்பாகவும் உள்ளதால் வெளுத்தல் நிகழ்த்துகை யில் இழை தாக்கமடைகிறது. வளையத் தகாத மீள் தன்மையற்ற இவ்விழையைக் கொண்டு சன்ன மான துணி நெய்ய இயலாது. திடம் மிக்கதாகை யால் தரைவிரிப்பு, பாய்மரக் கப்பல் கயிறுவடம் ஆகியவற்றைத் தயாரிக்க இது ஏற்றது. க மே. ரா. பாலசுப்பிரமணியன் நூலோதி. Bernard P. Corbman, Textiles, - Fihre to Fabric, Sixth Edition, McGraw-Hil! Book Com. pany, New York, 1985. சத்துணவின்மை குறை ஊட்டச்சத்து தவறான ளட்டச் சத்து, கொழுத்த உடல், உணவு நச்சு ஆகியவையே சத்துண வின்மைக்குக் காரணங்களாகும். குறை ஊட்டச்சத்து. ஆற்றல் தரும் போதிய கலோரிகள் கொண்ட உணவுப் பற்றாக்குறை நீண்ட நாள் பட்டினியாக இருத்தல் ஆகியன சூம்பிப் போன குழந்தைகளிடமும், பஞ்ச காலங்களிலும் ஏற்படலாம். தவறான ஊட்டச்சத்து. புரதக் குறைபாடு அல்லது இன்றியமையா 35 ஊட்டப் பொருள்களில் ஒன்றிரண்டின் குறைபாடுகளால் குவாசியார்கார். ரிக்கட்ஸ் போன்ற நோய்கள் தோன்றலாம். கொழுத்த உடல் தேவைக்கு மேல் உணவருந்து தலும் ஒரு நோய் நிலையாகும். ஒரு குறிப்பிட்ட உணவுப் பொருளை மிகுதியாக ப அருந்துதல் மிகை ஊட்டத்திற்குக் காரணம் ஆகும். எ.கா. வைட்ட மின் D அயச்சத்து, தெவிட்டிய கொழுப்புப் பொருள் போன்றவை. உணவு நச்சுகள். குறிப்பிட்ட உணவுப் பொருள் களில் நச்சு இருப்பதால் நச்க விளைவுகள் உண்டாக லாம். பொருளாதார அமைப்புகளும் ஊட்டப் பொருள் குறைபாட்டில் பங்கு பெறுகின்றன. நோய் அறிகுறிகள். பசியின்மை. இரைப்பைப் புற்று நோய், காரணமறியாமல் அடிக்கடி வாந்தி எடுத்தல், மிகையான மது. சரிவிகித உணவின்மை ஆகியவை நோய் அறிகுறிகளாகும். செரிமான, உள்ளேற்புக் கோளாறுகள். ஹைட் ரோகுளோரிக் அமிலக் குறைவு. தனால் அயச் சத்துக் குறைந்து சோகை உண்டாகிறது), ஸ்டியட் டோரியா. இரைப்பை அறுவை, நாட்பட்டு எடுத்துக் கொள்ளப்படும் எதிர் மருந்துகள் ஆகியன வைட்ட மின் K தொகுப்பைப் பாதிக்கின்றன. கவ்லீரல் சுருக்க நோயில், அமினோ அமிலங்கள் மற்றும் வைட்டமின் K. உறிஞ்சல் தடைப்படுகிறது. புற்றுநோய், நாட்பட்ட நோய் நிலைகள், சிறுநீரசுத் தளர்வு, வலிப்பு எதிர் மருந்துகள், ஹார்ட்நப் நோய் போன்றவை வளர்சிதை மாற்றப் பிறவிக் கோளாறு கள் ஆகும். சிறுநீரக நோயியத்தில் புரத இழப்பு, சர்க்கரை நோய், மிகையான மாதவிடாயின் போது இரத்த இழப்பால் அயச்சத்து குறைந்த சோகை, நாட்பட்ட வயீற்றுப்போக்கு என்பவை ஊட்ட இழப்பிற்கான காரணங்களாகும். மிகை ஊட்டச் சத்துத் தேவை. சூலுற்ற நிலை, பாலூட்டும் நிலை, குளிர்காலத்தில் அதிகமான உடல் உழைப்பு, காய்ச்சல், தைராய்டின் மிகையான பணி தீப்புண்கள், அடிபட்ட காயம், அறுவை மருத்துவம் ஆகியவற்றின்போது மிகையான ஊட்டம் தேவைப் அ. கதிரேசன் படும். நூலோதி: Davidson, Sir Staneley et, al, Human Nutrition and Dietetics, Seventh Edition, Churchill Livingstone, Edinburgh, 1979. சத்துணவுச் சுழற்சி மனித உடல் வளர்ச்சிக்குச் சமச்சீர் சத்துணவு எந்த அளவிற்குத் தேவைப்படுகிறதோ அந்த அளவிற்குப்