பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/737

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சதகுப்பை 717

சத்துணவுச் சுழற்சி இல்லையென்றால் வளி மண்டலத்தில் உள்ள வளிமங்களின் அளவில் மாறுதல் ஏற்பட்டுச் சுற்றுப்புறச் சூழ்நிலையில் சமச்சீர் நிலை கெட்டுவிடும். எடுத்துக்காட்டாக, வளிமண்டலத்தில் கார்பன் டைஆக்சைடின் அளவு அதிகமானால் வெப்பம் மிகுந்து உயிர்களின் வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படலாம். எனவே மரங்களை வளர்த்துச் சுற்றுப் புறச் சூழ்நிலையைப் பாதுகாத்தல் இன்றியமை யாதது. கொ.பாலகிருட்டிணன் நூலோதி.K. Mcngel, and E.A. Kirkby, Prinici ples of Plant Nutrition. International Potassh Insti- tute, Switzerland, 1982. சதகுப்பை இதற்குச் சோயிக்கீரை விதை,மதுரிகை என்ற தமிழ்ப் பெயர்களுண்டு. சதகுப்பையின் (dill) தாவரப் பெயர் அனிதம் கிராவியோலென்ஸ் (Anethum graveolens) என்பதாகும். இதற்குப் பாய்சிடானம் கிராவியோ லென்ஸ் (Peucedanum graveolens) என்னும் இணைப் பெயர் உண்டு. இச்செடி அப்பெல்லிஃபெரே குடும் பத்தைச் சேர்ந்தது. இதன் தாயகம் யூரேஷியா ஆகும். இந்தியா, கிரீஸ், ருமேனியா. ஹங்கேரி போலந்து, மேற்கு ஜெர்மனி போன்ற நாடுகளில் து விளைகிறது. . இது ஒரு களைச்செடி என்பதால் இதற்கு டில்வீட் (dill weed) என்ற பெயருண்டு. இச்செடியை டில் ஹெர்ப் (dill herb) என்றும் கூறுவர். மற்றும் முற்றாத காய்களிலிருந்து எண்ணெய் (dill herb oil) எடுக்கப்படுகிறது. முற்றிய காய்களி லிருந்தும் வாலை வடி முறையில் எண்ணெய் (dill sced oil) எடுக்கப்படுகிறது. இந்திய சதகுப்பையின் விதைகள் சற்றுப் பெரியனவாக இருக்கும். இதுவே உலகச் சந்தையில் மிகுதியாக விற்பனைக்கு வருகிறது. ஆனால் இவ்விதைகளை இந்தியர்கள் பிற நாட்டி. னரைவிட மிகக் குறைவாகவே பயன்படுத்துகின்றனர். ச்செடி செடியும் சாகுபடியும். இச்செடி ஒருபருவச் செடியாகும். இதனை வளர்ப்பது மிக எளிது. குறைந்த கவனத்துடன் நன்கு வளரும் 50-190 செ.மீ. உயரம் வளரும். தண்டி இலைகள் மாற்றடுக்கத்தில் இருக்கும். இவைகள் பெரணி இலை போன்று பிரிந்திருக்கும். தண்டு தடிப் பாக இருக்கும். பூக்கள் மஞ்சள் நிறமானவை. மஞ்சரி 15 செ.மீ. குறுக்களவைக் கொண்டிருக்கும். காய்கள் முட்டை வடிவில் தட்டையாகவும் மேல் பகுதியில் மேல்நோக்கிய வரிகளைக் கொண்டும் குறுகிய இறக்கைகளைக் கொண்டும் இருக்கும். காய் சதகுப்பை 717 கள் 4 மி.மீ. நீளத்திலிருக்கும். கனிகள் மஞ்சள் பழுப்பு நிறமாக இருக்கும். சாதாரணமாகக் கனிகளை நீள் வாக்கில் இரண்டாக உடைத்தே விற்பனை செய்வர். விதை மூலமாக இனப்பெருக்கம் செய்யப்படு கிறது. வடிகால் வசதியுள்ள மணல் நிலத்தில் சூரிய ஒளி படும் இடத்தில் செடி நன்கு வளரும். செடிக் காசுவோ, எண்ணெய்க்காகவோ பயிரிடப்படும் பொழுது பூக்கும் முன்பு அறுவடை செய்ய வேண்டும். லிதைக்காகப் பயிரிடப்படும்பொழுது விதைகள் முற்றியபின்பு அறுவடை செய்யப்படும். விதைகள் கனியிலிருந்து சிதறுவதற்கு முன்பே அறுவடை செய்யவேண்டும். வெயில் நேரத்தில் அறுவடை செய்தால் கனிகள் வெடித்து விதைகள் சிதறும் என்பதால் காலை அல்லது மாலை நேரத்தில் அறுவடை செய்லர். விதையில் 3 - 3.5% ஆவியாகும் எண்ணெய் உள்ளது. இதில் கார்வோன் என்னும் பொருள் மிகுதியாக உள்ளது. ஐரோப்பிய சதகுப் பையின் தோற்றம்,மணம் முதலியவை இந்திய சதகுப் பையின் குணங்களிலிருந்து மாறுபடும். இந்திய சத குப்பையில் அதிகமான டில்லபியோல் (dillapiole) சத்தும் குறைவான அளவில் கார்வோனும் உள்ளன. சதகுப்பைக்கு. கார்வோன் என்னும் பொருளே மணம் தரக் காரணமாகிறது. இந்தியாவில் இதனை ரபி (rabi) பருவத்தில் காத்துமல்லியைப்போல் சாகுபடி செய்கின்றனர். விதைகளை வரிசையாக விதைத்தோ வரப்போரங் களில் ஊன்றியோ சதகுப்பையைச் சாகுபடி செய் கின்றனர். விதைத்த 40ஆம் நாளில் இடைவெளி கிடைக்குமாறு செடிகள் கலைத்து விடப்படுகின்றன. இப்பயிருக்கு ஹெக்டேருக்குத் தழைச்சத்து, மணிச் சத்து, சாம்பல் சத்து ஒவ்வொன்றும் 40 கி.கி அடியுர மாகவும் தழைச்சத்து 40 கி.கி மேலுரமாகவும் டவேண்டும். வடஇந்தியப் பகுதிகளில் பயிராகும் இப்பயிர் ஏப்ரல் மாத இறுதியில் அறுவடைக்கு வரும். பூக்களை 10-25 நாளில் சிறிது சிறிதாக அறுவடை செய்கின்றனர். ஒரு ஹெக்டேரில் ஒரு டன் கனி கிடைக்கும். உண் பூச்சிகளும் நோய்களும். சதகுப்பைப் பயிரில் குறிப்பிடும் அளவில் சாம்பல் நோய் அழிவை உண்டாக்குகிறது. இது எரிசிஃபே அம்பெல்லிஃ பெர்ரம் வகை அளிதி (Erysiphe umbelliferum var anethi) என்னும் பூசணத்தால் உண்டாகிறது. இலை, பூக்களின் மீது சாம்பல்நிறப் பூசணப் படிவை டாக்கி ஒளிச்சேர்க்கையைக் குறைத்து விதை உற்பத் தியைப் பாதிக்கிறது. இதனைக் கட்டுப்படுத்த செடி பூத்திருக்கும்பொழுது 2-3 முறை கந்தகத்தூளை ஹெக்டேருக்கு 25 கி.கி வீதம் தூவ வேண்டும். அவ்வப்பொழுது அசுவுணிகளும் இப்பயிருக்குக் கேடு விளைவிக்கின்றன. இப்பூச்சியைக் கட்டுப்படுத்து வதற்கு மாலத்தியான் 0.05% பூக்சிக்கொல்லியை 2-3 முறை தெளிக்க வேண்டும்.