730 சந்தன வேங்கை
730 சந்தன வேங்கை ஆற்றி, அந்தப் புகையை மூக்கில் பிடிக்க 2-3 வேளையில் தலைநோய்கள் தீரும். ஆவின் நெய், பால் வகைக்கு 2 லி. கலந்து, அதில் முடக்கொத்தான், சர்க்கரைக் சந்தனம். கிழங்கு. செங்கழுநீர்க் கிழங்கு, அதிமதுரம், அலரிவேர். தாமரைக்கிழங்கு இவற்றை வகைக்கு எலுமிச்சங்காய் அளவு அரைத்துப் போட்டும் பதமாகக் காய்ச்சி வடித்து விழியில் தீட்டிவர நீலகாசம், கண்வலி ஆகியவை தீரும். ஆவின் நெய், பால், முருங்கைப்பூச்சாறு, உத்தம தானிச்சாறு வகைக்கு 500 மி. வி. வீதம் ஒன்றாகக் கலந்து, சந்தனம், மஞ்சள் அதிமதுரம், சீரகம் ஏலம் அரைத்துப் போட்டுக் காய்ச்சி வடித்து விழியிற் கட்டினால் சுக்கிரன் போகும். இளநீர், ஆவின்நெய் வகைக்கு 502 மி.லி. சுலந்து, அதில் நன்னாரி, இருவேலி, நெய்தற்கிழங்கு, சந்தனம், மஞ்சிட்டி வகைக்கு 3.5 கிராம் அரைத்துப் போட்டுக் காய்ச்சி வடித்து விழியிற் கட்டினால் கண்ணில் புண் சீழ்வடிதல் மாறும். சந்தனம், ஈச்சங்குருத்து. நெய்தற்கிழங்கு, வெட்டிவேர், விளாமிச்சம் வேர், அதிமதுரம், வில்வவேர், சிற்றாமுட்டிவேர். தாமரைக்கிழங்கு. இலுப்பைப்பூ இவற்றை ஒரு நிறையாயிடித்துக் கஷாயம் செய்து கொடுக்க, பித்தக்காய்ச்சல் தீரும். சந்தனம், பேய்ப்புடல், கடுக்காய், நெல்லி முள்ளி. ஆடாதொடை, கண்டங்கத்தரி. மரமஞ்சள், ரோகணி, செம்முள்ளிவேர், கட்டுக் கொடிவேர், வேலிப் பருத்தி, திப்பிலி வகைக்கு 10 கிராம் இடித்து. மூன்று கூறு செய்து, வேளை ஒன்றுக்கொ காரு பங்கை 5 வி. நீரில் போட்டுக் கஷாயஞ் செய்து கொடுக்க சளிக்காய்ச்சல் மலபந்தம் நீங்கும். நன்னாரி கஞ்சாங் வேர், சந்தனம், பொன்னாங்கண்ணிவேர். வேர். பற்படாகம், கோரைக்கிழங்கு, கோரை, வெட்டிவேர், விளாமிச்சம் மல்லி, சுக்கு ஒரு நிறையாகக் கஷாயஞ் செய்து கொடுக்க அதிசாரக் காய்ச்சல் தீரும். சந்தனம், ஆடா தொடை, தூதுவளை, முத்தக்காசு, சிறுவழுதலை பற்படாகம், பங்கம்பாளை, சுக்கு, நன்னாரிவேர் வகைக்கு 35 கிராம் இடித்து 5லி. நீரில் போட்டு, 500 மி.லிட்டராக வற்ற வைத்து 8 வேளை கொடுக்க, குளிர் காய்ச்சல் தீரும். சந்தனம், எலம். இலவங்கம். பூசணித் தண்டு, சுரைத்தண்டு, தூது வளை வேர், சுக்கு வகைக்கு 10 கிராம் வீதம் இடித்து 2 லி. நீரில் போட்டு 500 மி.லிட்டராக வற்ற வைத்துக் கொடுக்க சீதாங்க ஈன்னி தீரும். சந்தனம், நொச்சியிலை, பற்படாகம், கடுகு ரோகணி, லெட்டிவேர், விளாமிச்சம்வேர், பச்சை நாறூக் கரந்தை, பாவட்டை, நன்னாரி, கூவிளம் இவறயில் வேளை ஒன்றுக்கு 15 கிராம் வீதமிடித்து 500 மி.லிட்டராக வற்ற 5லி. நீரில் போட்டு வைத்துக் கொடுக்க, சன்னி தீரும். சந்தனம், முத்தக்காசு, சுக்கு, பற்படாகம், விளாமிச்சை, இருவேலி இவை வகைக்கு 10 கிராம் வீதமிடித்து 10லி, நீரில் போட்டு 2 லிட்டராக வற்ற வைத்து அதில் 500 மி.லி. பொரித்த அரிசி போட்டுக் கஞ்சி காய்ச்சிக் கொடுத்த பின், அதில், சந்தனம், குங்கிலியம், சாம்பிராணி, தேற்றாவிதை, தகரவிதை, தேவதாரம், சுற்பூரம், தேன் இவற்றை ஒரு நிறையாக நெருப்பிற்போட்டுப் புகைபிடிக்க, தாந்திரிக சன்னி தீரும். 250 மி.லி. வெந்நீரில் சந்தனம் ஆவின் வெண்ணெய் வகைக்கு ஒரு கொட்டைப் பாக்குப் பிரமாணம் போட்டுச் சாப்பிட நீர்க்கடுப்பு, எரிச்சல் உடனே நிற்கும். சந்தன மரத்தின் பச்சைப் பட்டை யைப் புன்னைக்காயளவு அரைத்துப் பாலிற்கலந்து காலை மாலை கொடுக்க இரத்தக் சுக்கல், வெள்ளை வை தீரும்.உடல் அழகு பெறும். சந்தனக்கட்டையை, எலுமிச்சம் பழச்சாறு விட்டரைத்து, நமைச்சல், சொறிசிரங்கு, அக்கி, படர்தாமரை, தேமல், வீக்கம் இவற்றின் மேல் பூசலாம். காய்ச்சலில் காணும் தலைவலி, புருவத்தின் வலி இவற்றிற்குத் தேனில் அரைத்து நெற்றியில் பற்றுப் போடலாம். அரைத்த சந்தனத்தைக் கலக்கித் தெளிந்த நீரில் 25 கிராம், தண்டுலநீர். தேன், சர்க்கரை கலந்து உட்கொள்ள, வயிற்றுப் பொருமல், சீதக் கழிச்சல், வெப்பம், நீர் வேட்கை இவை தணியும். சந்தனத்தூள் 2 பங்கு, நீர் 16 பங்கு இவற்றை நான்கில் ஒன்றாக வற்ற வைத்துக் குடிநீராக்கி, எடைக்கு 3 பங்கு கற்கண்டு கூட்டிக் காய்ச்சி வடிகட்டிக் கொண்டு, தேவையான அளவு பன்னீர் சேர்த்து 500-1000 மி.லி உட்கொள்ள, மூலச்சூடு, பிரமேகம், காய்ச்சல் தீரும். பா. அண்ணாதுரை சே. பிரேமா நூலோதி.க.ச. முருகேச முதலியார், குணபாடம் வகுப்பு), அரசினர் அச்சகம், சென்னை, (மூலிகை 1951. சிந்தன வேங்கை இதன் தாவரவியல் பெயர் டெரோகார்பஸ் சான்ட லினன் Pterocarpus santalins) என்பதாகும். இது இருவித்திலைத் தாவரத்தில் ஃபேபேசி குடும்பத்தைச் சார்ந்ததாகும். நடுத்தர வளர்ச்சியுற்ற இலை யுதிர் காடுகளில் வளரும் இம்மரம் 10-11 மீ. உயரமும், 1.5 மீ. குறுக்களவும் கொண்டது. ஆந்திரத்