738 சந்தி திரிதடையம்
738 சந்தி திரிதடையம் செறிவுற்ற குறியீடுகளை வெளிவிடுகின்றன. அத் துடன் அவற்றிலிருந்து வரும் ஓர் இரண்டாம் குறியீட்டின் உதவியுடன் அயனியாக்கப் படுகதிர் துலக்கியின் எந்த இடத்தில் பட்டது என்பதையும் நுட்பமாக முடிவு செய்துவிட முடியும். கோணம் சார்ந்த பரவீடுகளை அளக்கிற எளிய அமைப்புகளை உருவாக்குவதற்கு இத்தன்மை பெரிதும் உதவும். இத்தகைய தல உணர் துலக்கிகள் ஒரு தலுக்குட்படும் இலக்கைச் சுற்றி நிறுவப்படுகின்றன. தாக்கு பெரிய அணுக்கருக் காந்த நிறமாலை வரைவி களின் குவியத் தளங்களில் மும்முனைய துலக்கிகள் அமைந்து பெரும் பயன் தருகின்றன. குவியத் தளத்தில் ஒரு துகளின் இடத்தையும், ஆற்றலையும் கண்டுபிடித்து, காந்தத்தின் மூலமாகவே சுண்டு பிடிக்கப்பட்ட துகள் உந்தத்தையும் பயன்படுத்தித் துகளின் நிலையையும் ஆற்றலையும் ஐயத்திற்கிட மின்றிக் கணக்கிட்டுவிட முடியும். இத்தகைய கருவிகளில் நேரடித் தொடர்புள்ள கணிப்பொறி களின் துணையும் இருப்பதால் க்கணக்கீடுகளை உடனடியாகச் செய்து, கூடுதலான வாதமுறைக் கட்டுப்பாடுகளை ஏற்படுத்தி ஆய்வு செய்யவும் முடிகிறது. இத்தகைய வசதி, புகைப்படத்தட்டு களைப் பயன்படுத்திய முன்னாளைய குவி தளத் துலக்கிகளில் முற்றிலும் இல்லை. மும்முனைய துலக்கிகளை வளைய வடிவிலும் அமைக்க முடியும். துலக்கியின் துளையின் மேல், கோணத்துடன் துகள் ஆற்றல் விசை, நிறை சாரா இயக்கத் தன்மையில் (kinematic) மாறுவதற்கான திருத்தங்களை வளை துலக்கியின் ஆரத்திசை நிலை ணர்வின் உதவியுடன் உடனடியாக ஒவ்வொரு துலக்கியின் ஒவ்வொரு மோதலுக்கும் செய்ய முடியும். இவ்வசதி இல்லாது போனால் துலக்கி யின் நிறமாலை வரைபடத்திலுளள அனைத்துத் துகள் குழுக் கட்டமைப்புகளும் புரிந்து கொள்ள முடியாத அளவுக்குக் குழம்பிவிடும். கே.என். ராமச்சந்திரன் நூலோதி. A. Klimov, Nuclear Physics and Nuclear Reactors, Mir Publishers, Moscow, 1981. சந்தி திரிதடையம் இது மின்னணுவியலில் முக்கியமான திண்ம நிலைக் கருவி(solid state device)ஆகும். சந்தி திரிதடையத்தில் (junction transistor) இரண்டு சந்திகள் உள்ளன. படம் 1 இல் குறை கடத்தியாலான சந்தி திரிதடை யத்தை உண்டாக்கும் விதம் காட்டப்பட்டுள்ளது. மூன்று முனைகளும் உமிழ்வான் (emitter) அடிவாய் (base) ஏற்பான் (collector) என்று கூறப்படும். படம் 1இல் PNP, NPN சந்தி திரிதடையங்கள் காட்டப்பட்டுள்ளன. PNP திரிதடையத்தில் உமிழ் வானில் மின்னோட்டம் சந்தியை நோக்கியும் NPN இல் வெளிநோக்கியும் அமையும். உமிழ்வானில் மின்னோட்டத் திசை அம்புக் குறியால் காட்டப் பட்டுள்ளது.உமிழ்வான் அடிவாய்ச் சந்தியும் (E/B) ஏற்பான் அடிவாய்ச் சந்தியும் (C/B} முக்கிய பானலை. அறையின் வெப்ப நிலையில் குறை க டத்திகள் மின்சாரத்தைக் கடத்தா. ஆனால் ஜெர்மானியம் அல்லது சிலிக்கான் போன்ற தனிமங்களுடன் பாஸ் உமிழ்வான் NPN ஏற்பான் உமிழ்வான் 0 PNP ஏற்பான் அடிவாய் EO Q C E B படம் 1. இருவகைச் சந்தி திரிதடையங்கள் அடிவாய் C E