சந்தி திரிதடையம் 739
சந்தி திரிதடையம் 739 ஃபரஸ், ஆன்ட்டிமனி அல்லது ஆன்ட்டிமனித் தனிமங்களை ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் கலக்கும் பொழுது N, P வகைக் குறை கடத்திகள் கிடைக்கும். காட்டாக ஜெர்மானியத்துடன் பாஸ்ஃபரசை 10:1 என்னும் விகிதத்தில் கலந்தால் N வகைக் குறை கடத்திகள் கிடைக்கும். N வகைக் குறைகடத்தி களில் எதிர்மின் அணுக்களே பெரும்பான்மையான மின்னூட்டக் கடத்திகளாகும். மின்துளைகள் சிறு பான்மைக் கடத்திகளாகும். ஜெர்மானியத்துடன் இண்டியம் என்ற கனிமத்தைக் கலக்கும் பொழுது P வகைக் குறை கடத்திகள் கிடைக்கும். P வகையில் மின்துளைகள் பெரும்பான்மையான கடத்திகளாகும். உமிழ்வானில் தனிமங்கள் மிக அதிகமாகக் கலக்கப் பட்டிருக்கும். உமிழ்வான் பெரும்பான்மை மின் னூட்டக் கடத்திகளை அடிவாய்க்கு அனுப்ப வேண்டியிருப்பதால் இவ்வாறு தனிமம் கலக்கப்படு கிறது. அடிவாயின் அகலம் 0.025 மி.மீ. குறுகியதாக அமையும். அடிவாய்க் குறைகடத்தியில் மிகக் குறை வாகவே தனிமம் சேர்க்கப்பட்டிருக்கும். இதை எளிய முறையில் கலக்கப்பட்ட பகுதி (lightly doped) என்றும் கூறலாம். ஏற்பான் எப்பொழுதும் மிகுதி யான பரப்பைக் கொண்டிருக்கும். ஏற்பானில் முக்கிய மாக வெப்பம் வெளியிடப்படுவதால் அதன் பரப்பு மிகுதியாகத் தேவைப்படுகிறது. கிரிதடையத்தின் இரண்டு சந்திக்கும் சார்பு மின்னழுத்தம் கொடுக்கும் வகையில் அதன் செயல் பாடு அமையும். பொதுவான திரிதடைய இயக்கத் தில் உமிழ்வானும் அடிவாய்ச் சந்தியும் முன்னோக்குச் சார்பு மின்னழுத்தம் கொண்டிருக்க வேண்டும். ஏற்பானும் அடிவாய்ச் சந்தியும் பின்னோக்குச் சார்பு மின்னழுத்தம் கொண்டிருக்க வேண்டும். படம் 2 இல் திரிதடையத்தில் மின்கலத்தால் கொடுக்கப் படும் சார்பு மின்னழுத்த முறை காட்டப்பட்டுள்ளது. குறைந்த அளவு மின்னோட்டத்தை அதிக அளவு மின்னோட்டமாகப் பெருக்க, சந்தி திரிதடையம் பயன்படும். மிகைப்பிகளில் சந்தி திரிதடையங்கள் பயன்படுகின்றன. உமிழ்வானின் மின்னோட்டமும், ஏற்பானின் மின்னோட்டமும் ஏறக்குறைய சமமாக இருக்கும். அடிவாயின் மின்னோட்டம் மிகக் குறை வாக இருக்கும். படம் 2(ஆ) வில் அடிவாய், உமிழ் வான் சந்தியில் முன்னோக்குச் சார்பு மின்னழுத்தத் தால் மின்னோட்டம் ஏற்படும் N வகைத் தனிமத்தில் எதிர்மின் அணுக்கள் மிகுதியாக இருப்பதால் அடி வாயை நோக்கி நகர்கின்றன. வை அடிவாயை அடைந்தவுடன் மின்துளை கிடைப்பதால் அவற் றுடன் சேர்ந்து சமன்பாடு பெறும். அடிவாயில் போதுமான அளவு மின்துளை இல்லாததால் ஏற் பானில் உள்ள மின்னழுத்த ஈர்ப்பால் ஏற்பானை அடையும். ஏற்பான் வழியாக மின்சுற்றில் சுற்றி வரும். அ. க. 9 47 அ Le Ic PNP EBE EcB EBE NP N + (அ) E BET Ie FECB ECB () A படம். 2. திரிதடையத்தின் சார்பு மின்னழுத்தங்கள் அடிவாய் வழியாக மிகக்குறைந்த மின்னோட்டமே ஏற்படுகிறது. ஆனால் ஏற்பானில் அடிவாய் மின்னோட்டத்தை விடப் பல மடங்கு மின்னோட்டம் ஏற்படுகிறது. அடிவாயில் குறை மின்னோட்டத்தை ஏற்படுத்தினால் ஏற்பானில் பல மடங்கு மின்னோட்ட மாக மாறும். இதுவே மின்னோட்டத்தை மிகைப் படுத்தும் சந்தி திரிதடையத்தின் மிகச் சிறப்பான பண்பாகும். ஏற்பான் மின்னோட்டத்திற்கும், அடிவாய் மின்னோட்டத்திற்கும் உள்ள விகிதத்தைச் சந்தி மும்முனையத்தின் B என்று கூறலாம். எச். டபிள்யூ. பிராட்டயன். ஜெ.பாடீன் என்போர் பெல் தொலைபேசி ஆய்வகத்தில் 1948 இல் இக்கருவியைக் கண்டுபிடித்த பின்னரே மின் அணு வியல் கருவிகளின் கன அளவு மிகவும் குறைந்தது. தொடர்பியல் துறை, கணிப்பொறித்துறை போன்ற பெரிதும் வற்றில் பயன்படுபவை மும்முனையங் களேயாகும். இவை நீண்ட காலத்திற்கு உழைக்க வல்லவை: தனியாகச் சூடேற்ற மின்னாற்றல் தேவையில்லை; மிகவும் குறைந்த மின்னழுத்தத் துடன் பணிபுரிபவை: மிகவும் சிறிய வடிவமும், உறுதியும் படைத்தவையாதலால் திரிதடையங்கள் குழாய்களைவிடச் சிறந்தவையாகும். 1951 இல் சந்தி திரிதடையம் உருவாக்கப் பட்டது. இதையே இருதுருவ திரிதடையம் (bipolar transistor) என்பர்.சாக்லி என்பார் 1952 இல் புல விளைவு திரிதடையத்தைக் (field effect transistor) கண்டுபிடித்தாலும் 1961 ஆம் ஆண்டு வரை இது வெற்றிகரமாக வடிவமைக்கப்பட வில்லை. புல விளைவு திரிதடையம் ஒருதுருவ திரிதடையம் எனப்படும். சந்தி திரிதடையங்கள் தட்ப வெப்பத்தால் பாதிக்கப்படும் தன்மை கொண்டவை. வெப்பநிலை வெப்பநிலை மாறும்பொழுது மும்