740 சந்திர மாதம்
740 சந்திர மாதம் முனையத்தில் மின்னோட்டங்கள் மாறுபாடடையும். பொதுவாகக் குறை கடத்திகளால் தயாரிக்கப்படும் கருவிகள் வெப்பநிலையால் பாதிக்கப்படும். க. அர.பழனிச்சாமி நூலோதி. Millman and Halkias, Electronic Devices and Circuits, International Student Edition, McGraw-Hill Book Company, Singapore, 1985. சந்திரமாதம் சந்திரன், புவியை ஒரு முறை சுற்றி முடிப்பதற்கு எடுத்துக்கொள்ளும் காலம் சந்திரமாதம் (lunar month) எனப்படும். இருள்மதிக்குப் (அமாவாசை- new moon) பின்னர் இரண்டு நாள் கழித்து, மேற்குத் திசையில் சூரியன் மறைந்தவுடன், சந்திரன் ஒரு சிறு பிறை வடிவத்தில் சிறிது நேரத்திற்குத் தென்படும். இதன்பிறகு நாளுக்கு நாள் இப்பிறை வளர்ந்து, முழுமதியன்று (பௌர்ணமி - full moon) சூரியன் மேல்திசையில் மறையும்போது, கீழ்த்திசையில் சந்திரன் முழுமையாகத் தோன்றும் காலத்தைச் சந்திரனின் வளர்பிறைக்காலம் (waxing period of the moon) என்பர். இதைச்சுக்கிலபட்சம் என்றும் கூறுவர். முழுமதி நாளுக்கு அடுத்த நாளிலிருந்து சந்திரன் தேய்ந்துகொண்டே வந்து, மீண்டும் இருள் மதியாகும். இக்காலம் சந்திரனின் தேய்பிறைக்காலம் (waning period of the moon} ஆகும். இதைக் கிருஷ்ண பட்சம் என்பர். இருள்மதியன்று சூரியனும் சந்திரனும் ஒரு சை நிலையிலும் (conjunction) முழுமதியன்று இரண்டும் எதிர்த்திசை நிலையிலும் (opposition) உள்ளன. இரண்டு அடுத்தடுத்த இருள்மதிக்கோ, முழு மதிக்கோ, சந்திரனின் இரண்டு அடுத்தடுத்த ஒரு திசை நிலைக்கோ இடைப்பட்ட காலம் சந்திரமாதம் அல்லது சந்திரனின் சூரிய வழி மாதம் (synodic month) என வரையறுக்கப்படும். ஒரு சந்திர மாதம் என்பது 29.5 நாள் கொண்டதாகும். காக சந்திரன் தன் பாதையில் மேற்கிலிருந்து கிழக் ஒரு நாளைக்கு ஏறக்குறைய 13' நகரும்; சூரியனும் 1° நகர்கிறது. எனவே நாளைக்கு சந்திரன், சூரியனிடமிருந்து ஏறக்குறைய 12° விலகு கிறது. இதனைத் திதி என்பர். ஓர் இருள்மதியிலிருந்து முழுமதி வரை 15 திதிகளும் முழுமதியிலிருந்து இருள்மதி வரை 15 திதிகளும் ஆக ஒரு சந்திர மாதத்தில் 30 திதிகள் அடங்கும். சந்திரன் புவிக்கு அண்மையில் (perigee) வரும்போது வேகமாகவும், சேய்மையிலிருக்கும்போது (apogee) மெதுவாகவும் நகர்வதால் திதியின் நேரம் சில நாள்களில், ஒரு நாளைவிட மிகுதியாகவும், சில சமயங்களில் குறை வாகவும் இருக்கும். மேலும் நாளின் எந்தப் பகுதி யிலும் திதி தொடங்கலாம் அல்லது முடிவுறலாம். பங்கஜம் கணேசன் சந்திரன் ஏறக்குறைய 3,84,000 கி.மீ. தொலைவில் புவிக்கு மிக மிக அருகில் இருக்கும் ஒரே துணைக்கோள் சந்திரனாகும். புவியிலிருந்து சந்திரனுக்கு ஏவூர்தியில் சென்று வர சுமாராக 6 நாளாகும். சந்திரனின் சுற்றளவு 10927 கி.மீ பரப்பளவு 37,943,000 ச.கி.மீ. விட்டம் 3476 கி.மீ; எடை புளியின் எடை யில் 1/81 பகுதி; கன அளவு புவியின் கன 1/50 பகுதி ஆகும். அளவில் சந்திரன், விண்மீன்களைப் பொறுத்துப்புவியை மேற்கிலிருந்து கிழக்காகச் சுற்றி வர 271 நாள்களா கும். இதைச் சந்திரனின் மீன் வழி மாதம் {sidereal month of the moon) என்பர். இதிலிருந்து சந்திரன் நாளொன்றுக்கு 13.2 மேற்கிலிருந்து கிழக்காகச் செல்கி றது எனக் கணக்கிட்டுள்ளனர். சூரியனைப் பொறுத்துச் சந்திரன் புவியைச் சுற்றிவர 29.5 நாள் களாகும். தனைச் சந்திரனின் சூரிய வழி மாதம் (synodic month-lunation) என்பர். சந்திரனின் வானக்கோளப்பாதை சூரியனின் தோற்றப் பாதைக்குச் (ecliptic) சுமார் 5°9' கோண அளவில் சாய்ந்திருக்கும் வான் கோளப் பெரு வட்ட மாகும். சந்திரன் பாதையும், சூரியனின் தோற்றப் பாதையும் ஒன்றையொன்று வெட்டிக் கொள்ளும் ரு புள்ளிகள் கணுக்கள், கோள்சந்திகள் (nodes) எனப்படும். ஒன்று ஏறுகணு என்றும் (ascending node) மற்றொன்று இறங்கு கணு (descending node) என்றும் குறிப்பிடப்படுகின்றன. இவற்றை முறையே இராகு. கேது என்று ஆரூடத்தில் குறிக்கின்றனர். சந்திரனும் சூரியனும் இக்கணுக்களுக்கருகில் வரும்போது முழு மதி அல்லது இருள்மதி நாளாக இருப்பின் முறையே சந்திரன் மறைப்பும் (lunar eclipse) சூரியன் மறைப் பும் (solar eclipse) நிகழக்கூடிய வாய்ப்பு உண்டு. கெப்ளர் விதிக்குட்பட்டுச் சந்திரன் புவியை ஒரு குவிமையமாகக் கொண்ட நீள்வட்டப் பாதையில் செல்கிறது. சூரியன், புவி ஆகியவற்றின் ஈர்ப்பு ஆற்ற வால், சந்திரனின் இயக்கப்பாதை, வேகம் ஆகியவை பல மாறுதல்களுக்கு உட்படுகின்றன. இதை உலைவு கள் அல்லது தடுமாற்றங்கள் (perturbations) என்று கூறுவர். சந்திரனின் பிறைகள். புவியிலிருந்து பார்க்கும் போது சூரியனும் சந்திரனும் ஒரே திசையில், ஒரே