சந்திரன் 741
சந்திரன் 741 நெட்டாங்கைப் பெறும்போது, ஒரே திசை நிலையில் (conjunction) உள்ளன. அப்போது புவியில் உள்ள பார்வையாளர்களுக்குச் சந்திரன் தெரியாததால் அந்நாளை அமாவாசை அல்லது இருள்மதி நாள் என்பர். ஏறத்தாழ 15 நாள்களுக்குப் பின்னர் சூரிய னும், சந்திரனும் 180' நெட்டாங்கில் நெட்டாங்கில் வேறுபடும் போது, புவி இரண்டிற்கும் இடையில் இருப்பதால், அந்நாளைப் பௌர்ணமி அல்லது முழுமதி நாள் என்பர். இதிலிருந்து சூரிய வழி மாதத்தை, அடுத் தடுத்த இருள்மதிக்கோ, முழுமதிக்கோ இடைப் பட்ட காலம் என்றும் வரையறுக்கலாம். இருள்மதி நாளிலிருந்து கடந்துள்ள நாள்களின் எண்ணிக்கை சந்திரனின் வயது ஆகும். இருள்மதிக் குப் பின்னர் மூன்றாம் நாள் மேற்கு வானில் சூரியன் மறைந்தவுடன் சந்திரன் ஒரு சிறு கோடாகத் தோன் றும். இதைப் பிறை {erescent) என்பர். நாளுக்கு நாள் பிறை வளர்ந்து முழுமதியாக, 14.75 நாள் கழித்துக்கீழ்வானில் தோன்றும், இருள் மதியிலிருந்து முழுமதி வரை உள்ள காலம் வளர் பிறைக் காலம் அல்லது சுக்கிலபட்சம் (waxing period) என்றும், முழுமதியிலிருந்து மீண்டும் குறைந்து கொண்டே வந்து 14.75 நாள் கழித்து இருள் மதியாகும் காலம் தேய்பிறைக் காலம் அல்லது கிருஷ்ணபட்சம் (waning period) என்றும் பெயர் பெறும். சந்திரன் வளர்பிறை மூன்றாம் நாள் பிறை என்றும்,7.5 ஆம் நாள் அரைமதி என்றும் (dichoto - mised moon). 11 ஆம் நாள் குமிழ் மதி (gibbous moon) என்றும் அமைவது போலவே தேய்பிறையிலும், குமிழ், அரை, பிறையாக மாறி இருள் மதியாகும். விண்மீன்களையொட்டிச் சந்திரன் புவியை ஒரு மீன் வழி மாதத்தில் சுற்றுகையில் தன்னைத் தானே, தன் அச்சைக் கொண்டு ஒரு முறை சுழலுவதால், எக்காலத்திலும் சந்திரனின் ஒரு பகுதியே புவியை நோக்கியுள்ளது. சந்திரன் புவிக்கு அண்மை நிலையில் வரும்போது அதன் இயக்கச் சுழல் வேகம், தன்னைத் தானே சுற்றும் சுழல்வேகத்தை விட மிகுதியாக இருப்பதால், சந்திரனின் மேற்குப் பக்கம் சிறிது மிகுதியாகவும், கிழக்குப் பக்கம் குறைவாகவும் காணப்படும். இவ்வாறே சேய்மை நிலையில் உள்ள போது கிழக்குப் பக்கம் மிகுதியாகவும் மேற்குப் பக்கம் குறைவாகவும் தெரியும். ஆனால் குறிப்பிட்ட எந்த நேரத்திலும் சந்திரனின் அரைப் பகுதி மட்டுமே தெரியும். இந்த அசைவுகளுக்குச் சந்திரனின் கீழ், மேல் அசைவுகள் (liberations in தேய்குமிழ் O புவி வளர் பிறை பௌர்ணமி அமாவாசை சூரியக் இரவு பகல் கதிர்கள் வளர்குமிழ் தேய்பிறை சந்திரனின் பிறைகள்