சப்கிராவேக் 743
சந்திரனில் பெரும்பெரும் கடல் போன்ற பரப்பு களும், ஏரி போன்ற குறிகளும், பள்ளத்தாக்குகளும், குன்றுகளும் அரை மில்லியனுக்கு மேல் உள்ளன என மதிப்பிட்டுள்ளனர். கடல், ஏரி போன்றவற்றில் நீர் இல்லை. இவற்றில் ஒன்றான மிகப்பெரிய புயற் கடல் (ocean of storms-oceanus Pracellarum) இலட்சக் கணக்கான ச.கி.மீ. பரப்புடையது. இம்பிரியம் தளம் (Imbrium basin) என்னும் பெரிய குழி 1100 கி.மீட்டருக்கு மேல் அகலம் உடையது. குழிகளை அடுத்தோ விளிம்புகளின் மேலோ பலவிதமான குன்று கள் உள்ளன. அபினைன் (Apenine) குன்று சுமார் 6100 மீட்டர் உயரமும், சந்திரனின் தென் துருவத்தி னருகில் உள்ள லெபினீட்ஸ் குன்று 7920 மீட்டர் உயரமும் உடையவையாகும். க பல சந்திரனைப் பற்றி அறிந்து கொள்ளப் நாட்டு விண்வெளி ஆய்வுக்கூடங்களிலிருந்து அனுப்பப் பட்ட செயற்கைக்கோள்கள், ஏவூர்திகள் ஆகியவற் றின் மூலம் பல முக்கிய விவரங்கள் தெரியலாயின. 1969 ஆம் ஆண்டு ஜூலைத் திங்கள் 20 ஆம் நாள் விண்வெளி ஆய்வில் ஒரு குறிப்பிடத்தக்க நாளாகும். அன்றுதான், அமெரிக்க நாட்டைச் சேர்ந்த விண் வெளிவீரர் நெயில் ஏ.ஆம்ஸ்டிராங் என்பார் சந்திரனில் முதன் முதலில் இறங்கினார். அதன் பின்னர் சோவியத் ஒன்றியக் குடியரசும் அமெரிக்கா வும் மாறி மாறி விண்வெளி வீரர்களை அனுப்பி, சந்திரனின் மண்வளம், சூழ்நிலை ஆகியவை பற்றி ஆய்வுகள் நடத்தி வருகின்றன. சந்திரன் பரப்பில் வெவ்வேறு இடங்களிலிருந்து காண்டுவரப்பட்ட மண், சாம்பல் கலந்த செந்நிறமாகவும், சிறு கற் களாகவும், கண்ணாடித் துகள்களாகவும் உள்ளது. சில குன்றுகளிலிருந்து எடுக்கப்பட்ட மண் வகையில் அலுமினியம், டிடானியம், ஆக்ஸிஜன், ஹைட்ரஜன், ஹீலியம் போன்றவை உள்ளன. புவியின் எடையை விடச் சந்திரனின் எடை சுமார் 81 மடங்கு குறைவாக உள்ளதால், ஈர்ப்பு ஆற்றல் மிகவும் குறைவாகவே உள்ளது. சந்திரனின் மையப் பகுதி வெப்பநிலை பகல்காலங்களில் 127°C யிலிருந்து இரவுக் காலங்களில் -173°C வரை மாற்ற மடையும்; துருவப் பகுதிகளில் -240°C க்கும் கீழே செல்கிறது. தொன்றுதொட்டே சந்திரன் மனிதவாழ்வில் இடம் பெற்றுள்ளது. இலக்கியம், இனச, புராணம். ஆருடம் ஆகியவற்றிலும் பங்கு பெற்றுள்ளது. மறைப்புகள் ஏற்படுவதால், தீய விளைவுகள் ஏற்பட லாம் என்று இன்னமும் சுருதப்படுகிறது. இரவு முழுதும் நிலாவொளியில் படுத்தால். பைத்தியம் பிடிக்கும் என்ற மூட நம்பிக்கை பாமர மக்களிடம் உள்ளது. எவ்வாறாயினும்,சந்திரன், இந்து, இஸ் லாம். கிறிஸ்தவ மதங்கள் மூன்றிலும் பெரும் பங் கேற்றுள்ளது உண்மையாகும். மார்ச் மாதம் 21 ஆம் சப்கிராவேக் 743 நாளுக்குப் பின்னர் வரும் முழுமதி நாளை அடுத்து வரும் ஞாயிறு, ஈஸ்டர் (Easter) என்றும் அதற்கு முந்திய வெள்ளிக்கிழமை, பெரிய வெள்ளி (Good Friday) என்றும் கிறிஸ்தவரால் குறிப்பிடப்படும். சந்திரனின் பிறையையொட்டியே இஸ்லாமிய நோன்புகளும் விழாக்களும் குறிக்கப்படுகின்றன. தமிழ் ஆண்டில் உள்ள 12 மாதங்களிலும் வரும் முழுமதி நாளன்று இந்துக்களுக்கு ஏதேனும் ஒரு பண்டிகையோ, விழாவோ இருக்கும். சித்திரை மாதம் சித்ரா பௌர்ணமி, மாசி மாதம் மகம், கார்த்திகை மாதம் கார்த்திகைத் தீபம், மார்கழி மாதம் திருவாதிரை. தைமாதம் பூசம். மாதம் உத்திரம் போன் று ஒவ்வொரு மாதமும் முக்கியநாளாகும். பங்கஜம் கணேசன் சப்கிராவேக் . பங்குனி கிராவேக்குக்கும், ஆர்த்தோ குவார்ட்சைட்டுக்கும் இடைப்பட்ட உட்கூறுகளையுடைய களிமணற்கல் (argillaceous sandstone) சப்கிராவேக் (Subgraywacke) எனப்படும். அதாவது குறைதரமான கிராவேக்குக்கும் கல் சார்ந்த மணற்கல்லுக்கும் (lithic sandstone) இடை ப்பட்டதாகும். இதில், களிமண் 15%க்கும் குறைவாகக் காணப்படும். பாறைத் துண்டுகளும், நிலையற்ற கனிமங்களும் 25%க்குக் குறைவாகக் காணப்படும். நிலவியலார்களிடையே சப்கிராவேக் கின் உட்கூறுகளைப் பற்றிய கருத்து வேறுபாடு காணப்பட்டாலும், இதில் குறைந்தளவிலிருந்து மிகுந் தளவு வரை பாறைத் துண்டுகளும், சிறிதளவு களிமண்ணும், மிகவும் குறைந்தளவு ஃபெல்ஸ்பாரும் உள்ளன என்னும் பொதுவான கருத்து நிலவுகிறது. சப்கிராவேக்கில் காணப்படும் பாறைத் துண்டுகளின் உருமாற்ற மற்றும் அனற் பாறைகளைத் தவிர, படிவுப் பாறை வகைகளும், செர்ட்டும் மிகுதி யாகக் காணப்படும். இதில் காணப்படும் துளையிடை வெளிகள், களிமண் கனிம சிமெண்ட்டான குவார்ட்ஸ், கார்போனேட் முதலியவை கலந்த கலவையால் நிரப்பப்பட்டுள்ளன. களிமண் கூழ்மத்தில் அதிகமான மஸ்கோவைட்டும் (இல்லைட்) குறைந் தளவு கயோலினைட்டும் உள்ளன; சில சமயங்களில் பயோடைட்டும், குளோரைட்டும் காணப்படுகின்றன. குறைந்தளவு காணப்படுவதாலும், மணல்துகள்கள் சீராகப் பிரிக்கப்பட்டுள்ளதாலும் கிராவேக்குகளைவிடச் சப்கிராவேக்குகள் சிறப்பாகப் பிரிக்கப்பட்டுள்ளன. களிமண் அனைத்துக் காலப் படிவுகளிலும் காணப்படும் சப்கிராவேக் மிக அதிகமாகக் காணப்படும் மணற்கல்