748 சப்போட்டா
748 சப்போட்டா மரம் இளம் மரங்கள் வட இந்தியப் பகுதிகளில் பனியால் பாதிக்கப்படுகின்றன. ஆனால் முற்றிய பனியைத் தாங்கவல்லது. நன்கு மழை பெய்து நனைந்த மண், சப்போட்டா வளர்வதற்கு ஏற்றது. செம்புரை வண்டல் மண், மணல் நிலம். (red lateritic soil), களிமண் போன்றவை சப்போட்டா வளர்வதற்குத் துணை புரியும். வேர்கள் மேலோட்ட மாகப் பரவி இருக்கும். மண் தண்டின் சோற்றுத் திசுவில் திசுவில் பால் இருக்கும். இலைகள் மாற்றடுக்கத்தில், காகிதம் போன்றோ, தோல் போன்றோ இணை நரம்பமைப்புடன் காணப் படும். மஞ்சரி (cymose) கோணத்தில் இலைக் காணப்படும். பூக்கள் ஒழுங்கானவை. இருபால் மேல் மட்டச் சூலக மலர்கள். முதலில் செங்குத்தாகவும் பின் தொங்கியும் காணப்படும். புல்லிகள் 6; இரண்டு சூலகமுடி கண் அடுக்குகளில் காணப்படும். அல்லிகள் 6, இணைந் தவை; ஓர் அடுக்கில் காணப்படும். மகரந்தக்கம்பிகள் குறுகியவை. மகரந்தப்பைகள் ஈட்டி வடிவமானவை. வெளிநோக்கிக் காணப்படும் மலட்டு மகரந்தத் தாள்கள் சுருங்கிக் காணப்படும். ணுக்குத் தெரியாமல், ஒட்டுவது போல் இருக்கும். சூலகத்தண்டு சீரானது. சூலக இலைகள் (carpels) அல்லிகளுக்கு இருமடங்கில் இருக்கும். 10 சூல்கள் அச்சொட்டு முறையில் (axile'piacentation) இருக்கும். கனி. சதைக்கனி (berry) வகை; விதைகள் குறைவாகவோ, ஒன்றாகவோ இருக்கும். பறவை, நீர் மூலம் விதை பரவும். சாகுபடி. விதைகளில்லாமல் சப்போட்டாவை ஒட்ட வைத்துப் பெருக்க முடியும். இதை, கிரினி Mimusops hexandra) வேர்களுடன் இணைத்துக் கட்டி 2 3 6 1.கிணை 2. புள்ளிவட்டம் 3. அல்லிவட்டம் 4. சூலகம் 5. மகரந்தக் கோரம் 6. சூல்பை