752 சம அழுத்தச் செயல்முறைகள்
752 சம அழுத்தச் செயல்முறைகள் B படம் 4 கடிகாரத் திசையிலும் (clockwise) உள்ளன. விதம் திசையில் மாற்றமேற்படுகிறது. ஆகையால் பிரதிபலித்தல் ஓர் எதிர்ச் சம அளவியலாகும். -எல். சம அழுத்தச் செயல்முறைகள் ராஜகோபாலன் ஒரு வளிம அமைப்பில் வெப்பம் வெளியேற்றப்படும் போதோ, உட்செலுத்தப்படும்போதோ, அழுத்தத்தில் மாற்றம் எதுவுமின்றிப் பருமன் மட்டும் மாறுகிற ஒரு வெப்ப இயக்கவியல் நிகழ்ச்சி சம அழுத்தச் செயல் முறை (isobaric process) எனப்படும். ஒரு பொருளின் வெப்ப நிலையை உயர்த்தும்போது அது விரிவடை கிறது. அந்த அமைப்பு, தன்னைச் சுற்றியுள்ள வற்றின் மேல் ஓரளவு செயலாற்றும் திறன் பெற்று விடுகிறது. சுற்றுப்புறங்கள் இந்த அமைப்பின் மேல் செலுத்துகிற அழுத்தமும், இந்த அமைப்பு, சுற்றுப் புறங்களின் மேல் செலுத்துகிற அழுத்தமும் சமமாக இருக்கும்போது இச்செயல்பாடு பெருமமாக இருக் கிறது. அமைப்பின் பருமன் V எனில், செயலின் பெரும் அளவு 2 2 W = P dv = P dv = P(v,-v1) சம அழுத்தச் செயல்முறைகளை ஆய்வு செய்யும் போது வெப்ப அடக்கம் (enthalpy) என்ற அளவைப் பயன்படுத்தி விளக்க முயல்வது எளிதாகின்றது. ஓர் அமைப்பில் உள்ள மொத்த வெப்ப இருப்புக்கு வெப்ப அடக்கம் என்று பெயர். வெப்ப அடக்கம் H=U + PY. இதில் U என்பது உள்ளிட ஆற்றல்; P என்பது அழுத்தம்; V என்பது பருமன். மாறாத அழுத்தத்தில் இடம் மாற்றப்பட்ட வெப்பம் எனில், 2 Q=H,-H, = m { C, dT இதில் m என்பது அமைப்பின் நிறை ; Cp என்பது அழுத்த மாறா வெப்ப எண். வெப்ப இயக்கவியலின் முதல் விதியின்படி எந்த ஒரு செயல்முறையிலும் உள் ளிட ஆற்றலில் ஏற்படுகிற மாற்றம், அமைப்புடைய வெப்பத்திற்கும், அது செய்த செயலுக்கும் இடையி லுள்ள வேறுபாடு ஆகும். எனவே Q=U,-U,+W இயல்பாற்றலில் (entropy) ஏற்படும் மாற்றம் ds எனில், Q =1 2 [T ds S அமைப்பின் இயல்பாற்றல், T- அமைப்பின் வெப்ப நிலை ஆகும். சம அழுத்த நிகழ்வை வரைபடத்தில், அழுத் தத்தை Y - அச்சிலும், பருமனை X - அச்சிலும் குறித் தால், X - அச்சிற்கு ணையான ஒரு நேர்கோடு கிடைக்கும். இந்தக் கோட்டின் தொடக்க புள்ளி T; வெப்பநிலையிலும், இறுதிப் புள்ளி T, வெப்ப நிலையிலும் இருக்கும். இந்த அழுத்தம் மாறாக் கோடு, சம அழுத்தக் கோடு (isobar) எனப்படும். கே.என். ராமச்சந்திரன் நூலோதி. D.S. Mathur, Heat and Thermodyna mics, Third edition, Suitan Chand & sons, New Delhi, 1983. சம இரவுப் புள்ளிகள் சூரியன் தோற்றப் பாதையும் (ecliptic) வான நடு வரையும் (celestial. cquator) வெட்டிக்கொள்ளும் இரு புள்ளிகளுள் எந்தப் புள்ளியிடத்துச் சூரியன் தன் ஆண்டு இயக்கத்தில் தெற்கிலிருந்து வடபாதிக் கோளத்திற்கு நுழையுமுன் நடுவரையைக் கடக் கிறதோ அப்புள்ளி ஒ-மேட முதற்புள்ளி (first point of Aries) எனவும், அவ்வாறே வடக்கிலிருந்து தென்பாதிக் கோளத்திற்கு நுழையும்முன் நடுவரையைக் கடக்கும் புள்ளி - துலாம் முதற்புள்ளி (first point of Libra) எனவும் குறிப்பிடப்படும். இவ்விரு புள்ளிகளும் சம இரவுப் புள்ளிகள் (equinoctial points) எனப்படும். சூரியன் தன் ஆண்டு இயக்கத்தில் அதன் பாதையில் மார்ச் 21 ஆம் நாள் மேட முதற்புள்ளி ஒக்கு வரு