பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 குவானோ

58 குவானோ தாலும் குவார்ட்ஸ் கடிகைகள் பெருமளவில் பயன் படுகின்றன. பிற படிகங்களை நோக்கும்போது குவார்ட்ஸ் படிகங்களால் பிழை மிகுதியாக ஏற்பட் டாலும், குறுகிய கால இடைவெளிகளுக்கு அவை பெரும்பான்மையாகப் பயன்படுகின் றன. வா. அலுசுயா நூலோதி. W. Landcc, C. Davis, P. Albercht, Electronics Designer's Hand Book, Second Edition, MeGraw-Hill Book Company, New York, 1977. குவானோ கடற்பறவைகளின் எச்சங்கள் குவானோ எனப்படும். குவானோ என்பது இன்கா மொழியில் அதிக நைட் ரஜன் உள்ளது என்று பொருள்படும். இயற்கை யாக உருவாகி விளைநிலங்களில் உரமாகப் பயன் படும் இப்பெருமதிப்புள்ள குவானோ பல சிக்கலான வேதிய இடைச்செயல்களுக்குட்பட்டு (complex interaction) உருவாகிறது. தென் அமெரிக்கா, தென் ஆஃப்ரிக்கா ஆகிய பகுதிகளில் உருவாகும் குவானோ தரத்தில் சிறந்ததாகக் கருதப்படுகிறது. பிற தீவு களிலுள்ள குவானோ, அங்குள்ள காற்றின் அதிக ஈரப்பதத்தின் விளைவாகச் சிறிதளவு நைட்ரஜனை இழந்து.பாஸ்ஃபரஸ் அளவில் அதிகரித்துமிருப்பதால் இது தரத்தில் குறைந்த உரமாக இருக்கிறது. இப் பகுதிகளில் பறவைகள் பெருமளவு காணப்படுவதற்கு இப்பகுதியிலுள்ள கடலின் அமைப்பும், தட்பவெப்ப நிலையும் காரணங்களாகின்றன. . பெரு நாட்டுப் பகுதியிலுள்ள கடல் படுகையின் அமைப்பினால் அங்கு மிக வேகமாக ஓடும் ஹம் போல்ட் நீரோட்டம் உள்ளது. அதுபோல மேற்கு ஆஃப்ரிக்கப் பகுதியில் பென்குவா நீரோட்டம் இதன் விளைவாக . குழுக்களாகக் உள்ளது. இந்நீரோட்டங்களால் ஏற்படும் மேலெழுச்சி யினால் செறிவூட்டப்படும் இக்கடற்பரப்பில் மிதவை யுயிரிகள் மிகப்பலவாக வளர்கின்றன. இம்மிதவை யுயிரிகளை உண்ணும் பொருட்டு நெத்திலி மீன்கள் (anchories) பெரும் கூடுகின்றன. நெத்திலி மீன்களைத் தங்கள் முக்கிய உணவாகக் கொள்ளும் பல இனக்கடல் பறவைகள், இக்கடல் பகுதியைச் சார்ந்து வாழ் கின்றன. இப்பறவைகளின் எச்சமும் பிற சுழிவுப் பொருள்களும் படிந்து ஆண்டுக்குச் சுமார் மூன்று அங்குவம் உயர்கின்றன. பெரு பகுதியிலுள்ள குவானோ படிவுகளை ஆராய்ந்த ஒரு சில அறிவிய லார் அவை சுமார் கி.மு. 500 ஆண்டுகளுக்கு முன்னரே படியத் தொடங்கியவை என்றும், வேறு சிலர் இப்படிவுகள் 2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரே படியத் தொடங்கின என்றும் கருத்துத் தெரிவித்துள்ளனர். தென் அமெரிக்காவின் குவானோவைப் பெரு வாரியாக உருவாக்கும் ஆற்றலுடைய பறவையினங் கள் பெலிகானஸ் ஒக்சிடென்டாலிஸ் (pelecanus oecidentalis), ஃபலாக்ரோகோரக்ஸ் போகன்வில்லே (plalacrocorax bougainville ). சுலா வேரிகேடா (sula varicgata) முதலியவையாகும். இப்பறவைகள் முன்னரே படிந்து இறுகியுள்ள குவானோவின் மீது கூடமைக்கின்றன. ஸ்பினிஸ்கஸ் ஹம்போல்டி (sphe- niscus humboldi ). பெலிகனொய்டஸ் கார்னோட்டி (pelecanoides garnotii) போன்ற வேறுசில குவானோ வில் ஆழமற்ற குழிகளை அமைத்து முட்டை இடுகின்றன. ஃபலாக்ரோகோரக்ஸ் கேப்பென்சிஸ் (phalacre- corax capensis), சுலா கேப்பென்சிஸ் (sula capensis) ஸ்பினிஸ்கஸ் டெமேர்கஸ் (spheniscus demercus) எனும் இனங்கள் தென் ஆஃப்ரிக்கக் கடலோரப் பகுதிகளில் காணப்படுவன. இப்பறவைகள் இக் கண்டத்தின் தென்மேற்குப் பகுதியிலேயே பெரும் பாலும் காணப்படுகின்றன. இப்பறவைகள் வேட்டை யாடப்பட்டுக் கொல்லப்படாமல் பாதுகாப்பதற்கும் இவற்றால் உண்டாக்கப்படும் குவானோவை வணிக நோக்கில் விற்பனை செய்வதற்கும் ஆஃப்ரிக்க அரசு நடவடிக்கை எடுக்கிறது. குவிதல் 10.அ. மோகன் கணித வரலாற்றில் குவிதல் (convergence) என்ற சொல்லை முதன் முதல் பயன்படுத்தியவர் ஜேம்ஸ் கிரிகரி (1638-1675) என்பார் ஆவார். இவருக்குப்பின் தோன்றிய நீயூட்டன் (1642) தம் கண்டுபிடிப்பான நுண்கணிதத்தில் குவிதல் கொள்கையைப் பெரிதும் பயன்படுத்தியுள்ளார். இவர்களுக்குப் பின்னர் வந்த கணித மேதைகள் அனைவருமே குவிதல் கொள்கை யைப் பயன்படுத்தினர் என்பதற்குத் தக்க சான்றுகள் உள்ளன. தற்காலத்தில் கணிதததின் பல்வேறு முக்கிய கொள்கைகளுள் சிறப்பிடம் பெறுவது குவிதல் ஆகும். ஒரு ரப்பர் பந்தைத் தரையை நோக்கி எறிந் தாள், அது உடனே அமைதி நிலையை அடைந்து விடுவதில்லை. மாறாகப் பல முறை மேலும் கீழும் குதித்த பின்னரே அமைதி நிலையை எய்தும். இந் நிலையில் அப்பந்து ஒவ்வொரு முறையும் மேலே சென்று கீழே லருகையில் அது பயணம் செய்த உயரத்தைக் கணக்கிட்டு ஆராயின் அவற்றின் மதிப்பு கள் குறைந்துகொண்டே வந்து இறுதியில் பூஜ்ஜி யத்தை நெருங்குவதால் பந்து அமைதி நிலையை அடைகிறது என்பதை அறியமுடியும். தனைக் கணித வாயிலாகச் சொல்வதாயின் பந்து பல்வேறு