சமச்சீர்மை விதிகள் 763
உந்தம் p மியுவானின் தற்சுழற்சி இன் திசைக்கு 1 கோணத்தில் அமைந்திருப்பதற்கான நிகழ்தகவு பின் வரும் வடிவத்தில் இருக்கும். p+ = a + b Cos i (1) + குறி நேரின மியுவானுக்கும், - குறி எதிரின் மியு வானுக்கும் பொருந்தும், தலைகீழாக்கப்பட்ட ஓர் ஆய அமைப்பில். P. இன் குறி தலைகீழாகிவிடும். ஆனால் இன் குறி தலைகீழாகாது. ஏனெனில் தற் சுழற்சி ஓர் அச்சுத்திசைத் திசையன், எனவே Cos f குறிமாறும். அப்போது பின்வரும் சமன்பாடு கிடைக்கும். p + = a + b Cost (2) எனவே சிதைவின் விவரிப்பு வெளி தலைகீழா தலின்போது மாறவே செய்கிறது. மின் தலைகீழாகும் போது, அதாவது நேரின மின், எதிரின மின் என்ப வற்றைப் பரிமாற்றம் செய்யும்போது P+, முதற் சமன்பாட்டிலிருந்து (2) ஆம் சமன்பாட்டுக்கு மாறும். இவ்வாறு வெளி தலைகீழாதலும் மின் தலைகீழா தலும் சேர்ந்து வரும்போது P+ மாறாமல் இருக் கிறது. எனவே சிதைவு CP -ஐ அழியாமல் வைப்ப தாகச் சொல்லப்படுகிறது. காலம் தலைகீழாகும்போது மாறாமை ஏற்படு வதைச் சோதிக்க நியூட்ரானுக்கு இருக்கக்கூடிய மின் இருமுனைத் திருப்புத்திறனின் பரிமாணம் ஓர் உணர்வு நுட்பமுள்ள அடிப்படை ஆகும். நியூட் ரானின் தற்சுழற்சியின் திசையிலேயே இத்தகைய திருப்புத்திறன் அமையமுடியும். காலம் தலை கீழாகும்போது தற்சுழற்சியும் தலைகீழாகும். எனவே ஒரு மின்புலத்துடன் திருப்புத்திறன் நிகழ்த்தக்கூடிய இடை வினையின் ஆற்றலும் தலைகீழாகும். ஏனைய வகை ஆற்றல்கள் அனைத்தும் இவ்வாறு தலைகீழாவதில்லை. 1980ஆம் ஆண்டு வரையான ஆய்வுகளின்படி நியூட்ரானின் மின் இரு முனைத் திருப்புத்திறனின் பரிமாணம். எலெக்ட்ரானின் மின்னைப்போல 2× 10-24 செ.மீ மடங்கு கணக்கிடப்பட்டிருக்கிறது. . எனக் CP-இன் மாறாமைக்கு ஓர் உணர்வு நுட்பமுள்ள சோதனையை K. சிதைவு அளிக்கிறது. நடுநிலை K மெசான்கள் வலிமைமிக்க பரிமாற்று வினைகளால் உண்டாக்கப்படுகின்றன. எனவே அவை K மெசான் களாகவோ K. மெசான்களாகவோ உண்டாக்கப்படு கின்றன. ஆனால் அவை வலிமையற்ற பரிமாற்று வினைகளின் மூலம் வெவ்வேறு விதங்களில் சிதை கின்றன. எனவே K.. K. ஆகியவற்றின் நேரியல்புக் கூட்டுகள் (KL K3) திட்டவட்டமான ஆயுட்காலங் களில் சிதைகின்றன. L என்பது நீடித்த ஆயுளையும் S என்பது குறைந்த ஆயுளையும் குறிக்கும். சமச்சீர்மை விதிகள் 763 Ka எல்லாவிதமான இடை வினைகளும் CP-யை மாறாமல் வைக்குமானால். KL. KSஆகியவை (P-யின் தற்சிறப்பியல்பு நிலைகளாயிருக்கும். அவற்றில் ஒன்று மட்டுமே இரண்டு பையான்களாகச் சிதையும். அது CP-இன் ஒரு தற்சிறப்பியல்பு நிலையாகும். உண்மையில் Ks இரண்டு பையான்களாக மட்டுமே சிதைகிறது. ஆனால் KL இவ்வாறு சிதைவதற்கு ஒரு மிகச் சிறிய நிகழ் தகவு உள்ளது. இவ்வாறு Ko சிதைவின்போது CP மாறாமலிருக்கும் என்று உறுதி யாகச் சொல்ல முடியாது. ஆனால் இந்த மாறாமை மீறல் சிறிய அளவிலானதுதான். வலிமையற்ற பரிமாற்று வினைகளின்போது C,P ஆகியவற்றின் தனித்தனியான மாறாமைகள் பெருமளவில் மீறப்படு கின்றன. CP மாறாமை மீறப்படுவதை ஏனைய அனைத்து அமைப்புகளையும் விட நடுநிலை K மெசான்கள் மிகுதியான உணர்வு நுட்பத்துடன் உணர்கின்றன. K மெசான்கள், பன்மை நிலைகள் கொண்ட (degenerate) ஓர் இரட்டை, சிறிய குழப்பம் கூட அதை எளிதாகக் கலக்கிவிடும். 1980ஆம் ஆண்டு செய்யப்பட்ட ஆய்வுகளில் CP, T ஆகியவற்றின் மாறாமை வேறெங்கும் மீறப்பட்ட தாகக் கண்டுபிடிக்கப்படவில்லை. இதன் காரணமாக மாறாமை மீறல்கள் நிகழ்கின்ற முறைகளைப் பற்றி வெளியிடப்பட்டிருக்கிற பல விரிவான கருத்துகளைப் பகுப்பாய்வு செய்வது கடினமாயிருக்கிறது. வரை (PT தேற்றம்.லூடர்ஸ் (Luders) என்பார் வெளியிட்ட CPT தேற்றம், பல்வேறு எதிர்பவிப்புச் சமச்சீர்மைகளுக்கிடையிலான உறவுகளை நிர்ண யிக்கிறது. அத்தேற்றத்தின்படி ஒரு லாரண்ட்சின் மாறாப் புலக் கொள்கை மின் பரிமாற்றம் C, வெளி தலை கீழாதல் P. காலம் தலை கீழாதல் T ஆகிய மூன்று எதிர்பலிப்புகளின் பெருக்குத் தொகையிலும் மாறாமலே இருக்கும். எடுத்துக்காட்டாக CP மாறாமையைக் கடைப்பிடிக்காத K. சிதைவு I என்ற காலம் தலைகீழாதலின் மாறாமையையும் கடைப் பிடிக்கக்கூடாது என்று CPT தேற்றம் கூறுகிறது. கொள்கை அளவில் CPT தேற்றத்தைப் பரி சோதனைகளின் மூலம் சரிபார்க்கவாம். குறிப்பாக K மெசான் சிதைவுகள் இதற்கு உதவும். ஆனால் இது வரை உறுதியான முடிவுகள் எதுவும் கிடைக்கவில் லை. CPT மாறாமை மீறப்படுவது தெரிய வந்தால் அடிப்படைத் துகள் கொள்கையின் அடிப்படை தகர்ந்துவிடும். வலிமைமிக்க பரிமாற்ற வினைகளின் மாறாமை. இரண்டு புரோட்டான்களுக்கிடையிலான அணுக்கரு விசை இரண்டு நியூட்ரான்களுக்கு இடையில் உள்ள அணுக்கரு விசையை ஒத்ததாகவே இருக்கிறது. இதற்கு அணுக்கரு விசையின் மின் சமச்சீர்மை என்று பெயர். பொதுவாகக் கூறினால் நூக்ளியான்களும் பையான்களும் அடங்கிய ஓர் அமைப்பின் இயக்கம்.