பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/804

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

784 சமபடித்தான பண்பு

784 சமபடித்தான பண்பு நூலோதி. Jerry March Advanced Organic Chemistry, Third Edition, McGraw Hill Book Company, Tokyo, 1986. சமபடித்தான பண்பு 4 அனைத்துத் திசைகளிலும் ஒரு பொருளின் இயற் பியல் பண்புகள் ஒரே அளவாக அமைந்திருந்தால் அது சமபடித்தான பண்பு (isotropy) அல்லது திசை யொத்த பண்புடைய பொருளரசுச் சொல்லப்படும். பொருளின் திசையொத்த பண்புடைய ஒரு இயற்பியல் பண்புகள், அவை அளக்கப்படுகிற திசை களைச் சார்ந்திரா. எடுத்துக்காட்டாக இத்தகைய பொருள்களுக்கு ஓர் ஒளிவிலகல் எண்ணே இருக்கும். அதாவது ஒளிக்கதிர் இந்தத் திசையிலிருந்து பொருளின் மேல் பட்டாலும் அது ஒரே அளவில் விலக்கப்படும். அப்பொருளுக்குள் ஒளி அனைத்துத் திசைகளிலும் ஒரே அளவான திசைவேகத்துடன் செல்லும். திசையொத்த பண்புடைய பொருள்கள் மின் கடவா மாறிலி, மின்தடை, மின் கடத்துந்திறன் போன்ற அளவுகளுக்கும் ஒரே ஒரு மதிப்பையே பெற்றிருக்கும். பெரும்பாலான நீர்மங்களும், பல்வேறு திசைகளில் தன்னிச்சையாக நிலைகொண்ட நுண்ணிய படிகங்கள் கூடி உருவான பொருள்களும் திசையொத்த பண்புடையவையாகவே இருக்கின்றன. ஒற்றைப் படிகங்கள் திசையொத்த பண்புடையவை யாக இருப்பதும் இல்லாமலிருப்பதும் அவற்றின் சமச்சீர்மையைப் பொறுத்திருக்கும். அவை சில பண்புகளில் திசையொத்தவையாகவும், பிற பண்பு களில் திசையொவ்வாதவையாகவும் இருக்கலாம். எடுத்துக்காட்டாக. கள சதுரக் கட்டமைப்புள்ள ஒற்றைப் படிகங்கள் மின் தடையைப் பொறுத்த வரை திசையொத்த பண்புடையவையாக இருக் கின்றன. அதாவது அவற்றின் மின்தடையை எந்தத் இசையில் அளந்தாலும் ஒரு மதிப்பே கிடைக்கும். ஆனால் மீள்திறன் திரிபைப் பொறுத்தவரை அவை திசையொத்த பண்புடையவையாக இருப்பதில்லை. அதாவது அவற்றை வெவ்வேறு திசைகளில் மீள்திறன் விசைகளுக்கு உட்படுத்தினால் தோன்றும் திரிபுகளின் அளவுகள் வெவ்வேறாக இருக்கும். கே, என். ராமச்சந்திரன் சம பரும வெப்ப நிகழ்வு ஓர் அமைப்பு உறுதியான எந்திரவியல் எல்லை களுக்குள் கட்டுப்படுத்தப்பட்டிருக்கும்போது, அதன் பருமன் மாறாத வகையில் அதற்குள் நிகழும் வெப்ப இயக்கவியல் நிகழ்வுகள் சம பரும அல்லது பருமன் மாறா வெப்ப நிகழ்வுகள் (isometric process) எனப் படும். உறுதியான எல்லைகளுக்குள் கட்டுப்பட்டிருக் கிற ஓர் அமைப்பு, சுற்றுப்புறத்தின்மேல் நேரடியான எந்திரவியல் விசைகளைச் செலுத்திச் செயல் விளை விக்க முடியாது. எனவே அந்த அமைப்பிலிருந்து வெளியேறுகிற அல்லது அந்த அமைப்புக்குள் நுழைகிற வெப்பம் அமைப்பிற்குள் தேக்கி வைக்கப்பட்டிருக்கிற உள்ளிட ஆற்றலில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. அமைப்பிலிருந்து இழக்கப்பட்ட அல்லது அமைப் புக்கு அளிக்கப்பட்ட வெப்ப ஆற்றலின் அளவு அதன் உள்ளிட ஆற்றலில் ஏற்பட்ட மாற்றத்திற்குச் சம மாயிருக்கும். உள்ளிட ஆற்றலில் ஏற்பட்ட மாற்றம் அமைப்பின் வெப்ப எண். வெப்ப நிலையில் ஏற் பட்ட மாற்றம் ஆகியவற்றைப் பொறுத்த ஒரு சார்பெண் ஆகும். பருமன் மாறாத நிலையில் அமைப்பால் பெறப் பட்ட அல்லது இழக்கப்பட்ட வெப்பம் Q, உள்ளிட ஆற்றல் U, நிறை m, மாறாப்பரும வெப்ப எண் Cv, தனி வெப்பநிலையில் ஏற்பட்ட மாற்றம் dT எனில் Q U, - U, = J Cv dT வெப்ப அமைப்பு ஒரு தொடர்ச்சியான சமநிலை வரிசையில் மாறிக்கொண்டேயிருக்குமானால் இயல் பாற்றலையும் (entropy) கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். இயல்பாற்றலில் ஏற்பட்ட சிறு மாற்றம் ds எனில், Q ds. பருமன் மாறாதிருக்கும் வகையில் ஓர் அமைப்புக்குள் வெப்பத்தைச் செலுத் தினால், அதன் வெப்பநிலையும், அழுத்தமும் அதி கரிக்கின்றன. கே.என். ராமச்சந்திரன் நூலோதி.D.S. Mathur, Fundamentals of Heat, Sultan Chand and Sons, Delhi, 1970. சம மின்சுற்று மின்னியல் மற்றும் மின்னணுவியல் சுற்றுகளில் மின் தடை, மின்தேக்கி, மின் தூண்டம் ஆகியன பொது வானவையாகும். ஒவ்வொரு மின்சுற்றின் பண்புகளும் இவற்றைக் கொண்டே அமையும். இப்பண்புகளை அறிய, அக்கருவிகளின் சம மின் சுற்றுகள் (equi- valent circuit) பயன்படும். வெற்றிடக் குழாய்கள், இரு முனையம், மும் கொண்ட மின்னணுவியல் சுற்றுகளின் முனையம்