788 சம வெப்பநிலை நிகழ்வு
788 சம வெப்பநிலை நிகழ்வு கும்போது பிரிகை ஊடகத்தின் (dispersion medium pH இன் மதிப்பைச் சமமின் புள்ளி (isoclectric point) என்பர். சமமின் புள்ளியின்போது கூழ்மப்பொருள் ஒரு குறிப்பிட்ட மின் முனையை நோக்கி நகரும் ஆற்றலை இழந்துவிடுகிறது. சமமின் புள்ளியைப் பூஜ்ய முன் னேற்றமுடைய புள்ளி எனக் கூறலாம். இந்நிலையில் ஒரு கூழ்மப் பொருளின் புறப்பரப்புக் கவர்ச்சிப் படலத்தில், நேர்மின்னேற்றத் துகள்களின் எண்ணிக் கை எதிர்மின்னேற்றத் துகள்களின் எண்ணிக்கைக்குச் சமமாயிருக்கும். சீட்டா (zeta) மின் அழுத்தத்தின் மதிப்பு. சமமின் புள்ளியின் போது பூஜ்யமாகும். கரைப்பான் வெறுக்கும் (lyophobic) கூழ்மப் பொருளின் நிலைத்தன்மை, துகள்களின் மின்னேற் றத்தைப் பொறுத்திருப்பதால், pH இன் மதிப்பு, சம மின் புள்ளியை ஒட்டி வரும்போது, கூழ்மப் பொருள் திரிந்துவிடுகிறது. ஆனால் கரைப்பான் சுவர் (Iyophilic) கூழ்மப் பொருளின் நிலைத்தன்மை, கரையும் தன்மையைப் பொறுத்திருப்பதால், இப்பொருள் சம மின் புள்ளியில் திரிபு அடைவதில்லை என்றாலும், இதன் நிலைத்தன்மை மிகவும் குறைந்துவிடுகிறது. எனவே, கரையும் தன்மையைக் குறைக்கும் ஒரு பொருள், மிகக் குறைந்த செறிவில் சேர்க்கப்படும் போதே கூழ்மப் பொருள் திரிந்துவிடும். சமமின் புள்ளியின் போது பாகுநிலையில் (visco- sity) ஏற்படும் மாற்றங்களும் மிகக் குறைவாகவே இருக்கும். கூழ்ம நிலையிலுள்ள புரோட்டீன், DNA போன்ற பெரிய மூலக்கூறுகள் நீரில் கரையும்போது, அவை நேர்மின்னேற்றத்தையோ எதிர் மின்னேற்றத் தையோ பெற்றிருக்கும். புரோட்டீனில் அடங்கியிருக்கும் அமினோ அமிலங்கள் அமிலத் தொகுதியையும் காரத்தொகுதி யையும் கொண்டிருக்கும். ஓர் ஆல்ஃபா அமினோ அமிலத்தின் அயனி நிலைகளைப் பின்வருமாறு குறிப் பிடலாம். RCH (NH, ) COOH = RCH (NH,-) Coo (அமிலத்தன்மை உடைய நிலை) எனவே, K₁ (COOH) = K (NH*) = (நடுநிலை) -H+(K.) 11- + H + RCH (NH) COO- (காரத்தன்மை உடைய நிலை) [H+] [RCH(NH,+) COO-} (RCH (NH,) COOH] [H+] [RCH (NH, ) COO-] (RCH (NI,+) COO-] சமமின் புள்ளியின்போது அயனியாதல் படுத்துகிறது. காரநிலை (pH₁) அமில் நிலை அயனியாதலைச் சமப் எனவே, [RCH (NH,+) COOH} = {RCH (NH,COO–} ஆகவே. pH = {pK, + pK) 2 ஒரு புரோட்டீன் மூலக்கூறின் மேல் காணப் படும் மின்னேற்றம், வெவ்வேறு pH மதிப்புகளின் போது புரோட்டீனின் கரைதிறனைப் பாதிக்கிறது. pH குறைவாக இருக்கும்போது மூலக்கூறு நேர் மின் னேற்றம் உடையதாகவும் இருக்கும். புள்ளியின்போது மின்னேற்றம் பூஜ்யமாகிவிடுவ தால், புரோட்டீன் கரைசலிலிருந்து வெளிவரத் தொடங்கும். சமமின் வெவ்வேறு பொருள்களின் சமயின் புள்ளி வெவ்வேறாகும். காட்டாக, இரத்தப் பிளாஸ்மாவி லுள்ள அல்புமினின் சமமின் புள்ளி 4.7 ஆகும். தானியத்தில் உள்ள செயின் (zein) 6.2 என்ற மதிப்பைக் கொண்டுள்ளது. ஆகவே கூழ்ம நிலையி லுள்ள ஒரு பொருளை னங்காணுவதில் சமமின் புள்ளி பயன்படுகிறது. மேலும், புரோட்டீன் போன்ற பொருளைப் பிரித்தெடுப்பதிலும் உதவுகிறது. மிகு வலிமையுடைய இன்சுலின் தயாரிப்பை இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம். சமமின் புள்ளி குவித்தல் என்ற முறையில், ஒரு கூழ்மப் பொருளின் பிரிகை ஊடகத்தில் pH குறைந்த அளவில் படிப்படியாக மாற்றப்படும். ஒரு மின் புலத்தில் சமமின் புள்ளியை pH அடையும் போது, பொருள் மூலக்கூறுகள் அனைத்தும் ஓரிடத்தி லேயே குவிந்துவிடுகின்றன. இம்முறை மூலம் புரோட்டீன்களின் சிறிதளவு பன்மைத் தன்மையை யும் (heterogenity) ஆராய முடியும். எனினும் சமமின் புள்ளியின் மதிப்பு, துகள்களின் பருமன், பிற பொருள்களின் சுலப்பின்மை, பிற அயனிகள் செறிவு ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும். எல்.ஆர் இலக்குமண சர்மா நூலோதி.J.P. Greenstein and M. Winitz, The Chemistry of the Amino Acids, Wiley Eastern Ltd, New York, 1961. சம வெப்பநிலை நிகழ்வு மாறா வெப்பநிலையில் வளிமம் ஒன்றின் அழுத்தம் மற்றும் பருமனில் ஏற்படும் மாற்றம் சம வெப்பநிலை நிகழ்வு (isothermal process) எனப்படும்.