குவிபடுகை 61
முன்கால்14 தேதற்கு ஏற்ற தக வமைப்பும் பெற்றுள்ள. உவ்விரு உயிரினங்களும் வெவ்வேறு வகை வரிசைகளைச் சேர்ந்த பாலூட்டிகளாயிரும் ஒரே வகையான சூழலுக் கேற்ப ஒரே தக ஞாப்பைப் பெற்றுள்ளன. இது ஒரு குளி-படிமம் செர்வாகும். பறக்கும். வௌவால். முதுகெலுர்பிகளிலும் பறவை. ரடேக்ட்டைல் (pterodactyle ) றுப் போன பறக்கும் ஊர்வன ஆகிய வற்றிலும் மாறுபட்டு அமைந்துள்ள முன்கால்களே இறக்கைளாக ரெயல்படுகின்றன. இவற்றின் பின் கால்கள் மரத்தைப் பற்றித் தாவுவதற்கு ஏற்றவாறு சிறியவையாகவும், வலியை குறைந்தனவாகவும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். மேலும் வால் சிரியதாக இருப்பதையும் திசை திரும்பும் கருவியாகப் பயன்படுவதையும் காணலாம். இவை யாவும் பறப்பதற்கேற்றவாறு தோன்றிய தகவமைப்பு களாகும். நிலத்தில் வேகமாக ஓடும் விலங்கினங்கள் அனைத்திலும் காணும் நீண்ட கால்களும் எண்ணிக்கைக் குறைவும், குவி-படிமலர்ச்சியின் காரண மாசுத் தோன்றியவையேயாகும். விரல் மீன்களைப் பிடித்துத் தின்னும் பழக்கத்திற் கேற்றவாறு, முதலைகள், ஃபைட்டோசார்கள் (phy- tosaurs), இக்தியோசார்கள் (ichthyosaurs). பிளீசியோ சரர்கள் (plesiosaurs), அற்றுப்போன பறவைகள், வேறுசில பாலூட்டிகள் ஆகியவற்றின் படிமலர்ச்சி யின்போது அவற்றின் வாய் உறுப்பு அமைப்பில் மாற்றங்கள் ஏற்பட்டுப் பற்களுக்குரிய நீண்ட தாடைகள் தோன்றியுள்ளன. இத்தகைய வாத்தின் தட்டையான கரண்டி போன்ற அலகு, பாலிடான் (polydon) என்னும் மீனிலும், பிளாட்டிபஸ் (platypus) என்னும் பைப்பா லூட்டியிலும் வேறுசில பறவை களிலும் காணப்படுகிறது. இது சேற்றிலுள்ள சிறிய உயிரிகளை வடிசுட்டிப் பிடிப்பதற்கு ஏற்ற தகவமைப்பாகும். தவளை, தூக்கணாங்குருவி. வௌவால்களில் காணப்படும் அகன்ற வாய், பூச்சிகளைப் பிடிப்பதற்கான தகவமைப்பாகும். ஒரு புழைப்பாலூட்டி. எறும்பு தின்னியாகிய மிர்மிக்கோபியஸ், முள்ளுடை எறும்பு தின்னியாகிய எக்கிட்னா (echidna), பெரிய எறும்பு தின்னியாகிய மிர்மிக்கோஃபேகா (myrmecophaga) கேப் எறும்பு தின்னியாகிய ஆசிக்ட்டெம்பஸ் (ocyctempus), செதி லுடைய எறும்பு தின்னியாகிய அலங்கு (pangolin) ஆகியவை வெவ்வேறு விலங்கின் பிரிவுகளைக் சேர்ந் தவை. ஆனால் எறும்புகளைத் தின்னும் பழக்கத்திற் கேற்றவாறு நீண்ட முகவாய், நீளமான ஈரப்பசை யுடைய நாக்கு. இரண்டு பெரிய உமிழ்நீர்ச் சுரப்பிகள். கூரிய நகங்களையுடைய விரல்கள், பாதுகாப்பான உடல் உறை ஆகிய பொதுவான தகவமைப்புகளைப் பெற்றுள்ளன. குவிபடுகை 1 குகைகளில் வாழும் விலங்கினங்களுக்குப் போது மான உணவும், ஒளியும் கிடைக்காத காரணத்தால், நிறமி இழப்பு, பார்வை குறைதல் ஆகியவற்றை ஈடு செய்யும் பொருட்டு ஏனைய உணர் உறுப்புகள் சிறப்பாக வளர்ச்சியுற்றுள்ளன. இவ்வாறே பாலை வனத்தில் வாழும் உயிரினங்களில், அவை வாழும் கடுமையான சூழலுக்கேற்ப மண் நிறத்தோடு ஒத்த சாம்பல் உடல், நுண்ணிய முள், செதில், நச்சுத் தன்மை ஆகிய தகவமைப்புகள் காணப்படு கின்றன. இவையும் குவி-படிமலர்ச்சிக்கு எடுத்துக்காட் டாகும். மேலும் ஆழ் கடல் பகுதிகளில் காணப்படும். மீன்களின் ஒளி உமிழ் தன்மையும் (bioluminescence } இத்தகைய குவி - படிமலர்ச்சித் தகவமைப்பாகும். குவி படிமலர்ச்சி பல்வகை உயிரினங்களில் செயலொத்த அமைப்புகளைத் தோற்றுவிப்பதோடு. மேற்போக்கான ஒத்த அமைப்புகளைத்தோற்றுவிக்கும் தொடக்க நிலைப் படிமலர்ச்சிப் போக்கினையும் காட்டுகிறது. என்பது பிரியே (Pirie) என்பாரின் கருத்தாகும். சூழ்நிலைக் காரணிகளின் விளைவால ஏற்படும் குவி - படிமலர்ச்சி உயிர்ப் படிமலர்ச்சியின் முன்னோடியாகும். சி.சௌ.தாமோதரன் குவிபடுகை பாறை மடிப்புகளிலுள்ள படுகைகள் அச்சை நோக்கிச் சாய்ந்தும், இறங்கியும் காணப்படுவது குவிபடுகை synclinal bed) ஆகும். குவிபடுகைகள் சமச்சீராகவும், சீரற்றும் (asymmetrical). தலைகீழாகவும், சாய்ந்தும் காணப்படும். மேலும் இவை நீளமான போக் வ க்கு புறவமைப்பு கட்டகக் குவிபடுகைக்கும் விளக்கப்படத்திற்கும் உள்ள தொடர்பைக் காட்டும் படம்.