792 சமவெளிகள்
792 சமவெளிகள் உருவாகலாம். இந்நிலப்பரப்பைச் சமவெளி (pene plain) என்பர். சீரடிமட்டச் சமவெளிப் பரப்பின் நடுவில் தோன்றும் சிறு குன்றுகள் அவற்றின் பாறைகளின் கடினத் தன்மையால் அரிப்பை எதிர்த்து உருவாகின்றன. இக்குன்றுகளை மொனாட்நாக் என்பர். இறுதிக் கட்டத்தை அடைந்த ஓர் ஆறு புவி மேலோட்டில் ஏற்படும் மாறுதல்களால் மீண்டும் தொடக்க நிலையை அடைவதும் உண்டு. இது மறு தோற்றம் (rejuvenation) எனப்படும். சீரடிமட்டச் சமவெளிப் பரப்பு, ஈரப்பதநிலை காணப்படும் பகுதியில் முழு அளவில் உருவாகிறது. நில உலக வெப்பமண்டலப் பகுதியில் கடும் மழைக்காலமும் வறண்ட கோடைக் காலமும் மாறி மாறி வரும் சூழ்நிலையில் சாவன்னா Savanna) சமவெளிகள் உருவாகின்றன. மிகவும் குளிர்ச்சியான காலநிலை காணப்படும் துருவப் பகுதி களில் சற்றே சரிந்த குன்றுகளும் பள்ளங்களும் உள்ள சமவெளிகளைக் காணலாம். படிவுச் சமவெளிகள். பள்ளமான நிலப்பரப்புகளில் படிவுகள் குவிக்கப்படுவதாலும் சமவெளி உருவாவது உண்டு. இவ்வாறான சமவெளிகளைப் படிவுச் சம வெளிகள் என்பர். படிவுக் குவிப்பு ஆறுகள். பனி ஆறு கள், காற்றின் புவியமைப்பில் ஏற்படும் மாற்றங்களால் உருவாக்கப்படும். ஏரிகளிலும் படிவுச் சமவெளிகள் உருவாக வாய்ப்பு உண்டு. இவை முறையே ஆற்றுச் சமவெளி, பனி ஆற்றுச் சமவெளி, காற்றுச் சமவெளி, ஏரிச்சமவெளி எனப்படுகின்றன. ஆற்றுச்சமவெளி கள் ஆற்றுப் படுகையின் எப்பகுதியில் தோன்று கின்றனவோ அவற்றைப் பொறுத்து மேல், நடு, கீழ் ஆற்றுச் சமவெளிகள் என அறியப்படுகின்றன. ஆறு குறிஞ்சி நிலத்திலிருந்து மருத நிலத்திற்கு வரும் பொழுது ஆற்று வெள்ளத்தின் வேகம் குறைவதால் பளுவான படிவுகள் அங்குக் குவிக்கப்படுகின்றன. மேலாற்றுச் சமவெளியை உருவாக்கு கிறது.இப்படிவுக் குவிப்பு, விசிறி வடிவத்தில் அமை வதால் இது விசிறி வண்டல் (alluvial fan) எனப்படு கிறது. ஆற்றின் நடுப்படுகையில் வெள்ளத்தால் கரை புரண்டு ஓடும் ஆற்று வெள்ளம் வடியும் பொழுது வண்டல்மண் குவிக்கப்படுவதால் சமவெளிகள் வாகின்றன. இது வெள்ளச் சமவெளி எனப்படுகிறது. இப்பகுதியில் மணல்மேட்டுச் சமவெளி, இரு கரைகளையடுத்து உருவாகிறது. ஆறு கடலோடு கலக்கும் இடத்தில் உருவாகும் கழிமுகப்பரப்பு. கீழாற்றுச் சமவெளியாகும். உரு ஆற்றிள் படம் 5. கலிஃபோர்னியாவில் மோஜேவ் பாலைவனத்தில் காணப்படும் விசிறி வடிவ வண்டல் சமவெளி.