பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/813

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமவெளிகள்‌ 793

சமவெளிகள் 793 பனியாறுகள் ஓடுகின்ற பகுதிகளில் உருவாக்கப் படும் சமவெளிகள் தனித்தன்மை வாய்ந்தவையாகும். இப்பனியாறுகள் பெரும் பாறாங்கல்லிலிருந்து சிறு களிமண் வரை பலவகைப்பட்ட பருமனுள்ள பாறைத் துகள்களை மலைகளிலிருந்து தாழ்வான பகுதிகளுக்கு எடுத்துச் செல்கின்றன. பனியாற்றின் வேகம் குறை யும்பொழுதோ அவை உருகும்பொழுதோ. இப் பாறைத்துகள்கள் படிவங்களாகக் குவிக்கப்பட்டுப் பனியாற்றுச் சமவெளிகள் உருவாக்கப்படுகின்றன. காற்று ஒரே திசையில் நீண்ட நாள் வீசிக்கொண் டிருக்கும் நிலப்பரப்புகளில் காற்றுச் சமவெளிகள் உருவாக வாய்ப்பு உண்டு. காற்று, சிறு மணல் துகள் களை எடுத்துச் செல்லும் அளவிற்கு ஆற்றல் வாய்ந்தது. அவ்வாறு எடுத்துச் செல்லப்படும் மணல் துகள்கள் படியும்பொழுது சமவெளிகள் உருவாகின் றன. சகாரா பாலைவனத்தில் இவ்வாறு உருவாகும் சமவெளிகளைக் காணலாம். மணல் பரல்கள் மிகவும் சன்னமாக இருப்பின் காற்றுக் கால்வண்டல் (loess) என்னும் படிவு உருவாகிறது. இவ்வகைப் படிவு சிறு மேடுகளாகவும் திண்டுகளாகவும் தோன்றினாலும் சமவெளிகளையும் உருவாக்கும். குலசேகரன்பட் டினத்தின் அருகிலும் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதி யிலும் இவ்வாறான சமவெளிகள் தோன்றியுள்ளன. படம் 6. கலிஃபோர்னியாவிலுள்ள சாவு பள்ளத் தாக்குச் சமவெளி