பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/820

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

800 சமார்ஸ்கைட்‌

800 சமார்ஸ்கைட் சமார்ஸ்கைட் ஓர் ஆக்சைடு கனிமம். இதில் யுட்ரியம், எர்பியம், சீரியம், யுரேனியம், கால்சியம், இரும்பு, காரீயம், தோரியம், கொலூம்பியம், டாண்ட்டலம் டைட்டேனியம்,காரீயம் ஆகியவை சேர்ந்துள்ளன. X, Ce, U, Ca, Fe, Pb, Th) (Nb, Ta, Ti, Sn), Ox} . இக்கனிமத்தில் ரேடியம், நைட்ரஜன், ஹீலியம் முதலியன மிகச் சிறிய அளவில் உள்ளன. சமார்ஸ் கைட் (samarskite) ஒரு கதிரியக்கக் கனிமம் ஆகும். இதன். படிசு அமைப்பு, செவ்வகத் தொகுதியைச் சேர்ந்தது. இதன் படிக அச்சுகளின் விகிதம் 0.5456:1:0.5177. படிகங்களில் பெரும் பாலானவை செவ்வகப் பட்டகங்களாக விளங்கு கின்றன. சில படிகங்கள் செவ்விணை வடிவு, குறுயிணை வடிவு (100) அல்லது (010) வடிவுகளைக் காண்டு தட்டையாகவும், வேறு சில குறுஇணை வடிவப் படிகங்களாகவும் (010) நீண்டுள்ளன. இப்படிகங்களின் முகங்கள் கரடுமுரடானவை. a:b:c - சமார்ஸ்கைட் திண்மங்களாகவும், சில துகள் களாகவும் காணப்படும். திண்மங்களாகக் கிடைக்கும் போது இக்கனிமத்தை அடையாளங் காண்பது எளிதன்று. இது நொறுங்கக்கூடியது. சமார்ஸ் கைட்டில் (010) கனிமப் பிளவுகள் முழுமையற்று வளை - முறிவுகளாகக் காணப்படும். இதன் கடினத் தன்மை 5.6: ஒப்படர்த்தியான 6.6 5.8 வேதித் தன்மைக்கு ஏற்றவாறு மாறுபடும். இது அரக்கு (பிசின்) மிளிர்வும், கண்ணாடி அல்லது மின்மினி மிளிர்வும் கொண்டுள்ளது. இதன் புதிய உடைந்த பகுதிகளில் குறை உலோக மிளிர்வு காணப்படும். இக்கனிமம் வெல்வெட் போன்ற கறுப்பு நிறம் உடையது. சில சருகு நிறம் உடையன. மாறுதல் அடைந்த சில புறத்தே பழுப்பு நிறத்துடன் இருக்கும். இதன் தூள் நிறம் கறுப்பு அல்லது கருஞ்சிவப்பு ஆகும். இக்கனிமம் ஒளி புகாத் தன்மை உடையது. மெல்லிய துணுக்குகளாக உள்ளபோது ஒளி கசியும் ன்மையைப் பெற்றிருக்கும். இது அமிலத்தில் எளிதில் கரைவதில்லை. த கதிரியக்கத் தன்மையின் தாக்குதல் காரணமாக, சமார்ஸ்கைட்டின் அணு அமைப்புச் சிதைவுபட்டிருக் கும். இதன் ஒளியியல் பண்புகள் அனைத்துத் திசைகளிலும் மாறுபாடின்றி ஒரே விதமாக இருப் பதைக் காணலாம். இதன் ஒளிவிலகல் எண் 2,21 ஆகும். நுண்ணோக்கி கொண்டு பார்க்கும்போது இக்கனிமம் வெளிறிய அல்லது ருண்ட சருகு நிறத்திலிருக்கும். சில ஒளிபுகாத் தன்மையுடன் ருண்டே காணப்படும். சமார்ஸ்கைட் எளிதாக நீர்ம வேதியியல் மாற்றம் (hydration) அடைகிறது. இம்மாற்றத்தால் இதன் மாற்றமடைந்த புறப்பகுதி மஞ்சள், கருஞ் சமார்ஸ்கைட் சிவப்பு அல்லது சருகின் நிறத்திலிருக்கும். மாற்றத்தின் விளைவாகச் சில சமார்ஸ்கைட்டுகள் முழுமையும் பொய்யுருக் கொண்டுள்ளன. இதை வேதியியல் ஆய்வு செய்த சிலர் இதில் நீரும் இருப்பதைக் கடுள்ளனர். ஆனால் இந்த நீர் கனிமத்தில் இயல்பாக இருப்பதன்று. மாற்றத்தின்போது இக்கனி மத்துடன் சேர்ந்ததே ஆகும். இவ்வாறே வேதி ஆய்வில் காணப்படும் சிலிக்கான் டை ஆக்சைடும் மாற்றத்தின் போது சமார்ஸ்கைட்டுடன் சேர்ந்ததே யாகும். சமார்ஸ்கைட்டுடன் கொலும்பைட் என்னும் கதிரியக்கக் கனிமம் கிடைக்கிறது. இதனுடன் மோனோசைட், மேக்னடைட், சிர்க்கான், பெரில், அபிரகம் (கறுப்பு), யுரானினைட், அபிரகம் (வெள்ளை), எஸ்ச்சினைட், ஆல்பைட், டோபாஸ். கார்னெட் முதலியனவும் சேர்ந்து கிடைக்கின்றன. பல இடங்களில் கொலும்பைட் படிகங்களும் சமார்ஸ் கைட் படிகங்களும் இணையாகச் சேர்ந்து வளர்ந் துள்ளன. இடங்களில் யுரேனியத்தின் நுண் படிகங்கள் சமார்ஸ்கைட்டுடன் இணை வளர்ச்சி பெற்றுள்ளமையையும் காணலாம். சில பெக் சமார்ஸ்கைட் பெரும்பாலும் கிரானைட் மடைட பாறைகளில் கிடைக்கிறது. சில டங்களில் கருஞ்சிவப்பு நிறமுடைய ஃபெல்சுபார்களில் கிடைக் கிறது. இக்கனிமம் உருப்பொருளாகவும் கொழி படிவாகவும் காணப்படுகிறது. சமார்ஸ்கைட் சோவியத் ஒன்றியக் குடியரசின் யூரல் மலையின் தென்பகுதியிலுள்ள மியாஸ்க் என்னு மிடத்தில் பெக்மடைட் பாறைகளில் கிடைக்கிறது. நார்வேயில் மோஸ் பகுதியிலுள்ள அன்னிரோஃடு என்னுமிடத்தில் தெற்கே இங்கிலாந்துப் பகுதியிலும், ஸ்வீடனிலுள்ள நோதேம்ஸ் சுரங்கத்திலும், போர்னி