பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/821

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமான எடை 801

சமான எடை 801 யோவில் கோடெச்யைச் சுற்றியுள்ள இடங்களிலும், மடகாஸ்கரில் அன்டனமலாசாவிற்கு அருகிலுள்ள பெக்மடைட்டுகளிலும், பெல்ஜியத்தில் கீவு என்னு மிடத்திலும், ஜப்பானில் இஷிகவாலிலும், பிரேசில் நாட்டிலும் இக்கனிமம் கிடைக்கின்றது. அமெரிக் காவில் கரோவினாவின் வடக்குப் பகுதியிலுள்ள வைஸ்மேன் அபிரகச் சுரங்கத்திலும், ஜோன்ஸ் நீர் வீழ்ச்சிப் பகுதிகளிலும், கொலராடோவில் ஓகியா நகரத்திற்கு அண்மையிலும், கலிஃபோர்னியா, கனடா ஆகிய இடங்களிலும் சமார்க்ஸ்கைட் கிடைக்கிறது. இந்தியாவில், ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள நெல்லூர் மாவட்டத்தில் கிடைக்கிறது. சமார்ஸ்கைட் மாற்றமடைந்ததன் விளைவாகச் சில கனிமங்கள் தோன்றுகின்றன என்றும், சில கனி மங்கள் இதனுடன் தொடர்புடையன என்றும் கருதப் படுகின்றன. அவை வியடிங்ஹோஃபைட் (vietingho- fite), ரோஹெர்சைட் (rogersite), பிளம்போநியோ பைட் (plumboneobite), ஹைட்ரோசமார்ஸ்கைட் (hydrosamarskite), வீகைட் (wikite) முதலியன வாகும். சமார்ஸ்கைட் கனிமம் சோவியத் ஒன்றியக் குடியரசைச் சார்ந்த கலோனல் வான் சமார்ஸ்கைக் என்பாரின் பெயரால் குறிப்பிடப்படுகிறது. இல. வைத்திலிங்கம் நூலோதி. W.E. Ford, Dana's Text Book of Mineralogy, Fourth Edition, Wiley Eastern Limited, New. Delhi, 1949. சமான எடை எந்தவொரு வேதிவினையிலும் வேதிப்பொருள்கள் அவற்றின் சமான எடைகளின் விகிதத்திலேயே வினை யுறுகின்றன.சமமான எடை (equivalent weight) எனும் சொற்றொடரின் வரையறை ஒரு குறிப்பிட்ட தனிமத்தையோ, சேர்மத்தையோ மட்டும் பொறுத்த தன்று. அத்தனிமத்தின் ஆக்சிஜேனேற்ற ஒடுக்க. அமில காரப் பண்புகளையும் பொறுத்தது. ஒரே பொருளின் சமான எடை வினைக்கேற்றவாறு மாறு படக்கூடும். எனவே சமான எடையின் வரையறை யைத் தனிமம், ஆக்சிஜனேற்றி, ஒடுக்கி, அமிலம், காரம்,உப்பு என ஒவ்வொரு பொருள் வகைக்கும் தனித்தனியே கூறவேண்டும். தனிமங்களின் சமான எடை . ஒரு தனிமத்தின் சமான எடை என்பது 1.008கி. ஹைட்ரஜன், 8கி. ஆக்சிஜன்,35.45 கி. குளோரின் அல்லது 12 கி. கார்பனுடன் வினையுறத் தேவைப்படும் அத்தனிமத் தின் எடையாகும். இத்தனிமங்களை அவற்றுடன் குறிப்பிட்டிருக்கும் எடையில் ஒரு சேர்மத்திலிருந்து வெளியேற்றுவதற்குத் தேவைப்படும் தனிமத்தின் எடையும் அதன் சமான எடையே ஆகும். அ.க.9- 51 23கி. சோடியம் 1.008 ஹைட்ரஜனுடன் மிகையளவின்றித்துல்லியமாக இணைகிறது. எனவே, சோடியத்தின் சமான எடை 23 ஆகும். 12கி, மக்னீ சியம் ஹைட்ரோகுளோரிக் அமிலத்திலிருந்து 1.008 கி.ஹைட்ஜனை வேளியேற்றுகிறது. எனவே, மக்னீ சியத்தின் சமான எடை 12 ஆகும். சமான எடை எனும் கருத்து வேதிக் கூடுகை விதிகளில் ஒன்றான ரிக்டரின் தலைகீழ் விகித விதி ( Richter's law of reciprocal proportions) எனும் விதியின் கிளைத் தேற்றமாகும். சமான ஒரு தனிமத்தின் எடையுடன் தொடர்புடையது. சமான எடை எடை அதன் ை அணு எடை ணைதிறன் ஒரே தனிமத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட இணைதிறன் மதிப்புகள் இருக்கக் கூடுமாதலால் ஒரு தனிமத்தின் சமான எடையும் அதன் இணைதிறனை ஒட்டி மாறுபடும். தாமிரத்தின் இணைதிறன் 1-ஆக இருக் கும்போது அதன் சமான எடை அணு எடைக்குச் சமமாகவும், இணைதிறன் 2 -ஆசு இருக்கும்போது அதன் சமான எடை அணு எடையில் பாதியாகவும் இருக்கும். திண்ம நிலைத் தனிமங்களின் வெப்பக் கொள்திறன் ஆகியவற்றையும், டியூலாங்-பிட்டிட் விதியையும் (Dulong and Petit's law) பயன்படுத்தி அத்தனிமங்களின் அணு எடை யைத் துல்லியமாக அறியலாம். எடை எடை. சமான ஆக்சிஜனேற்றி மற்றும் ஒடுக்கியின் சமான ஆக்சிஜனேற்றிகள் எலெக்ட்ரானைக் கவர்ந் தும், ஆக்சிஜன் ஒடுக்கிகள் எலெக்ட்ரானை ஈந்தும் செயல்படுகின்றன. தனிமம் அல்லது சேர்மத்தின் ஒரு மூலக்கூறு எத்தனை எலெக்ட்ரான்களைக் ஏற் கின்றதோ, அளிக்கின்றதோ, அவ்வெண்ணிக்கையால் அப்பொருளின் மூலக்கூறு எடையை வகுத்தால் கிடைக்கப் பெறுவது அப்பொருளின் சமான எடை யாகும். அமிலம் கலந்த பொட்டாசியம் பொமாங்க னேட் ஒரு வலிவுமிக்க ஆக்சிஜனேற்றி ஆகும். இச் சேர்மத்தின் மாங்கனீசின் ஆக்சிஜனேற்ற எண் + 7 ஆகும். இது வினையுற்ற + 2 ஆக்சிஜனேற்ற எண் கொண்ட Mn+ அயனியாக மாறுகிறது. Mn+ + 5e → Mn' + இம்மாற்றத்திற்கு 5 எலெக்ட்ரான்கள் தேவைப் படுகின்றன. எனவே KMnO⭑- ன் சமான எடை அதன் மூலக்கூறு எடை 5