சயனைடு 813
பண்பைப் பெற்றுள்ளன. ஃபுல்மினேட்டுகளில் உள்ள அணுத்தொகுதி அமைப்பாவது -ONC ஆகும். ஹைட்ரஜன் சயனைடு மற்றும் தயோசயனிக் அமிலங்கள் போல, சயனிக் அமிலமும் இரண்டு மாற்றியங்களாகக் காணப்படும். HO-C=N ப H-N=C=0 II இந்த மாற்றியம் I சயனிக் அமிலம் என்றும், மாற்றியம் II ஐசோசயனிக் அமிலம் என்றும் குறிப்பிடப்படும். கார மற்றும் காரமண் உலோகங்களுடன் அமிலங்கள் சயனேட் மற்றும் ஐசோசயனேட்டாகக் காணப்படுகின்றன. இவற்றின் அமைப்புகளாவன [N=C-0] மற்றும் [O=C=N} ஆகும். வுறுப்புகள் நீரில் கரையும் இயல்புடையவை. இவ் கன உலோகங்களின் சயனேட்டுகள் சகபிணைப்புத் தன்மையை மிகுதியாகப் பெற்றுள்ளன. மேலும் நீரில் கரைவன அல்ல; சயனேட்டுகளின் முக்கிய பயன் அவை கரிமச் சேர்மங்கள் தொகுப்பில் பயன் படுவதாகும். அம்மோனியம் சயனேட் எளிதில் யூரியாவாக இடமாற்றம் அடைகின்றது. NHOCN – NH, CON கார உலோக சயனைடுகளை நேரடியாக ஆக்சிஜன் கொண்டு ஆக்சிஜனேற்றம் செய்து கார உலோக சயனேட்டுகளைத் தயாரிக்கலாம். பி.ஈ.எம்.லியாகத் அலிகான் சயனைடு 813 இரும்புத்தாது, அப்படைட், ஸ்பின் ஆகியவை மிகச் சிறிய அளவில் இருக்கக்கூடும். கார சயனைட் (alkali syenite), கார-கண்ண் சயனைட் (alkali lime syenite), ஃபெல்ஸ்பதாய் டல் சயனைட் (felspathoidal syenite) என்று சயனைட் பாறைகள் மூன்று விதமாகப் பிரிக்கப் பட்டுள்ளன. கார சயனைட். இவ்வகையான பாறையில் கார ஃபெல்ஸ்பார் மிகவும் அதிகமாகக் காணப்படும். பிள ஜியோகிளேஸ் ஃபெல்ஸ்பார் இல்லை. இத்துடன் சிறிதளவு குவார்ட்ஸ் காணப்பட்டால் அப்பாறை நார்மார்கைட் (normarkite) எனப்படும். இதே வகையில் குவார்ட்ஸ் இல்லாமல் நெஃபிலின் கனிமம் காணப்பட்டால் அப்பாறையை, புளாஸ்கைட் (pulaskite) என்பர். கார சுண்ண சயனைட். இவ்வகையில், பிளஜி யோகிளேஸ் ஃபெல்ஸ்பார் பொட்டாசியம் ஃபெல்ஸ் பாரைவிட இருமடங்கு காணப்படும். பொதுவாக ஆலிகோகிளேஸ் அல்லது ஆண்டிசின் கனிமம் இருக்கும். ஃபெல்ஸ்பதாய்டல் சயனைட் இப்பாறையின் வேதிப்பண்பை நோக்கினால் சோடியம் மிகுந் துள்ளமை தெரியவரும். இப்பாறையில் ஃபெல்ஸ்ப தாய்டல் குழுவைச் சேர்ந்த கனிமங்கள் மிகுதியாக இருக்கும். சோடாலைட், அனால்சைட் ஆகிய ஃபெல்ஸ்பதாய்டல் கனிமங்கள் பெருமளவில் இருப் பின் சயனைட் பாறைகள் சோடாலைட்-சயனைட், அனால்சைட் -சயனைட் எனப்படும். ந. சந்திரசேகர் நூலோதி. WE. Ford, Dana's Text Book of Mineralogy, Fourth Edition, Wiley Eastern Limited, New Delhi, 1985. சயனைட் இது ஒரு வகை அனற்பாறை (intermediate igneous rock} ஆகும். இதன் துகள்கள் ஒரே அளவில் இருக்கும். இது வெளிறிய நிறமுடையது. இதன் மணிகள் (granules) நடுத்தர அளவில் இருக்கும். சயனைட் (syenite) பாறைகளில் ஃபெல்ஸ்பார் கனிமங்கள் பெரிதும் காணப்படும். இக்கனிமங்களில் கார ஃபெல்ஸ்பார் எனப்படும் ஆர்த்தோகிளேஸ், ஆல்பைட் என்பவை பெருமளவில் இருக்கக் லாம். குவார்ட்ஸ் எனப்படும் பளிங்கு இப்பாறையில் பொதுவாகக் காணப்படுவது இல்லை. காண கிய ஹார்ன்பிளண்ட், ஆகைட், பயோடைட் ஆகி கனிமங்கள் குறைவாக இருக்கும். மிகவும் சிறிய அளவில் குவார்ட்ஸ், பிளஜியோகிளேஸ் சில சயனைட் பாறையில் காணப்படும். சிர்க்கான். சயனைடு சயனைடுகள் என்பன CN கொண்ட தொகுதியைக் காண்ட சேர்மங்களாகும். எ.கா. பொட்டாசியம் சயனைடு (KCN), கால்சியம் சயனைடு Ca(CN)}z! } ஹைட்ரோசயனிக் அமிலம் (HCN). பொதுவாக, $ கனிம சயனைடுகள் குளோரைடுகளைப் பெருமளவில் ஒத்திருக்கின்ற றன. சயனைடு தொகுதியைக் கொண்ட கரிமச் சேர்மங்கள் நைட்ரைல்கள் (nitriles) என்று வழங்கப்படுகின்றன. எ. கா. அக்கரைலோநைட்ரைல் { CH,CHCN ) இச்சேர்மம் நெகிழி, செயற்கை ரப்பர், நூலிழைகள் தயாரிப்பிற்கு மூலப்பொருளாக விளங்குகிறது. ஹைட்ரஜன் சயனைடு வலிவு குறைந்த அமிலம். இதன் அயனியாக்க மாறிலி 1,3×10-9 (18 Cஇல்).