பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/834

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

814 சயனோ எத்திலேற்றம்‌

814 சயனோ எத்திலேற்றம் தூய ஹைட்ரஜன் சயனைடு எளிதில் ஆவியாகும் நீர்மம். இதன் கொதிநிலை 26°C. ஹைட்ரஜன் சயனைடு மற்றும் பிற சயனைடு களும் நச்சுத்தன்மை வாய்ந்தவை. உடனடியாக மரணத்தை விளைவிக்கும் தீமையுடையவை; மர ணத்தை உண்டாக்க 100-200 மி.கி. அளவு போது இவற்றின் வளிமங்களைச் மானது. சுவாசிப்ப தாலோ, வாய் வழியாக இவற்றை உட்கொள்வ தாலோ இரத்தம் ஆக்சிஜனை எடுத்துச் செல்லும் சைட்டோகுரோம் சுவாச நொதிகளை வலிமை இழக்கச் செய்து ஏனைய திசுக்களுக்கு ஆக்சிஜனைக் கொண்டு செல்வதைத் தடுக்க, மரணம் கிறது. நேரிடு இடைநிலை உலோக அயனிகளுடன் சேர்ந்து சயனைடு அயனி பல்வேறு வகை அணைவுச் சேர்மங் களை (co-ordination compounds) உண்டாக்குகிறது. எடுத்துக்காட்டாகத்தங்கம், வெள்ளி, இரும்பு ஆகிய வற்றுடன் சயனைடு அயனி கொடுக்கும் அணைவுச் சேர்மங்களைப் பின்வருமாறு குறிப்பிடலாம். (Au(CN),] [Fe(CN)6]* [Ag(CN)₂] இச்சேர்மங்கள் வேதியியலில் பெருமளவில் பயன்படு கின்றன. தங்கம், வெள்ளி போன்ற உயர் உலோ கங்கள் சயனைடு முறையிலேயே அவற்றின் தாது விலிருந்து பிரித்தெடுக்கப்படுகின்றன. நன்கு பொடி யாக்கப்பட்ட தாது சோடியம் அல்லது பொட்டா சியம் சயனைடுடன் சேர்க்கப்படுகிறது. இதனால் உலோகங்கள் சயனைடுடன் கூடி அணைவு அயனி உண்டாக்குகின்றன. இதிலிருந்து தூய உலோகத்தைப் பெற அவை துத்தநாக தூளுடன் சேர்த்து ஓடுக்கப்படுகின்றன. வெள்ளி முலாம் பூசும்போது மிகையளவில் சயனைடு அயனிகள் உடனிருக்க மின்னாற் பகுப்புச் செய்வதால் எதிர் முனையில் வைக்கப்பட்டிருக்கும் உலோகத்தின் மீது மிக மெல்லிய படலம் படிகிறது. புகை கால்சியம் சயனைடு, பரவலாகப் பூச்சிக்கொல்லி யாகவும், தானிய சேமிப்புக் கிடங்குகளில் யூட்டியாகவும் (fumigant) பயன்படுகிறது. நன்கு பொடியாக்கப்பட்ட நிலையில் காற்றிலுள்ள ஈரப்பத னால் பாதிப்படைந்து ஹைட்ரஜன் சயனைடை வெளிவிடுகிறது. உலோகங்களைக் கடினமாக்கவும் சயனைடுகள் பயன்படுகின்றன. இரும்பு அல்லது எஃகு பொருள் களை உருகிய சோடியம் அல்லது பொட்டாசியம் சயனைடும் சோடியம் குளோரைடு அல்லது கார்ப னேட்டும் கரைந்த கரைசலில் முக்கி எடுக்கும்போது கடினமாகும். 750°C வெப்பநிலைக்கு மேல் மேற் பரப்பில் இருக்கும் சயனைடு சிதைவடைந்து கரிப் படிவை உண்டாக்குகிறது. சயனைடில் இருக்கும் நைட்ரஜனும் உலோகங்களின் கடினத்தன்மைக்குக் காரணமாக உள்ளது. இது இரும்பு மற்றும் அதன் உலோகக் கலவைகளுடன் வினைபுரிந்து நைட்ரைடு களை உண்டாக்குகிறது. யாக்கப்பட்ட ஹைட்ரஜன் சயனைடைச் சோடியம் அல்லது பொட்டாசியம் ஹைட்ராக்சைடுடன் நடுநிலைப் படுத்துவதால் சோடியம் சயனைடு அல்லது பொட்டாசியம் சயனைடைப் பெறலாம். நடுநிலை கரைசலை மிகக் கவனமாக உலர்த்த வேண்டும். கால்சியம் சயனைடு பெரும்பாலும் கால் சியம் சயனமைடிலிருந்தே பெறப்படுகிறது. கால்சியம் சயனைமடைக் கார்பன், சோடியம் குளோரைடு ஆகியவற்றுடன் சேர்த்து 1000°C க்கு வெப்பப்படுத்து வதால் து விளைகிறது. சயனோ எத்திலேற்றம் த. தெய்வீகன் இது ஓர் அக்ரிலோ நைட்ரைல் (CH-CH-CN) சேர்க்கை வினையாகும். தீ- சயனோ எத்தில் (--CH,CH,CN) தொகுதியை, பிணையுறு ஹ்ைட்ர ஜனைக் கொண்ட ஹைட்ரஜன் அணுவுடன் வினைப் படுத்திச் சேர்ப்பதாகும். இவ்வினையைப் பின்வரு மாறு குறிப்பிடலாம்: ZH + CH2=CH-CN ZCH2CH2CN சயனோ ஹைட்ரஜன் புரோமைடு, ஹைட்ரஜன் குளோரைடு, ஹைட்ரஜன் சயனைடு ஆகியவற்றால் எத்திலேற்றம் நடைபெறச் செய்யலாம். 1 AsH, - BH, -CH, மேலும் - NH, OH, - PH, இதனை SH ஆகிய வினைபடு தொகுதிகளைக் (functional groups) கொண்ட சேர்மத்தைக் கொண்டும் நடத்த லாம். இதனால் விளையும் விளைபொருள்கள் சாதாரணமாக நைட்ரைல் சேர்மங்கள் ஈடுபடும் நீரேற்றம். நீராற்பகுப்பு போன்ற வினைகளில் மேலும் ஈடுபடுகின்றன. ZCH2CH2CN ZCH2CH2CONH2 ZCHCH,CN→ ZCH,CH,COOH ZCH2CH2CNZCH2CH2CH2NH₂ இதுவரை 1200 க்கும் மேற்பட்ட சேர்மங்கள் சயனோ எத்திலேற்றத்தால் தயாரிக்கப்பட்டுள்ளன. சயனோ எத்தில் தொகுதியை ஒரு கரிமச்சேர்மத்தில் நுழைப்பதால் சேர்மங்களின் நீர் வெறுக்கும்