பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/840

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

820 சர்க்கரைவள்ளிக்‌ கிழங்கு

820 சர்க்கரைவள்ளிக் கிழங்கு உற்பத்தி செய்யும் திறன் கொண்ட விதைகளை வரிசையாக 50 செ.மீ. விதைத்து முளைத்தபின்னர் நாற்றுக் குத்துகளில் நல்ல செழிப்பான ஒரு நாற்றை மட்டும் விட்டுவிட்டு ஏனையவற்றைக் களைந்துவிட வேண்டும். ஒரு ஹெக்டேருக்கு 10 கி.கி. விதை தேவைப்படும். விதைக்கு முன்பாக விதைகளை நீரில் 12 மணி நேரம் ஊறவைத்து விதைப்பதன் மூலம் முளைப்புத்திறனை அதிகரிக்க இயலும். தொடக்கத்தே தோன்றும் களைகளால் சர்க் கரைப் பீட்ரூட் பாதிக்கப்படக்கூடுமாதலால் முதல் இரண்டு மாதங்களில் களைகள் இல்லாமல் இருப்பது நல்லது. இரண்டாம் மேலுரம் வைத்தபின்னர் மண் அணைப்பது பயனளிக்கும். ஒரு ஹெக்டேருக்குத் சாம்பல் தழைச்சத்து 120 கி.கி, மணிச்சத்து 80கி.கி, சத்து 100கி,கி தேவைப்படும். தழைச்சத்து உரங் களை விதைக்கும்போதும், செடிகளைக் கலைத்து விடும்போதும், மண் அணைக்கும்போதும் மூன்று பங்காகப் பிரித்து அளிக்க வேண்டும். டிசம்பர் மாதத்திற்குப் பின் உரமிடுவதைத் தவிர்க்க வேண்டும். உரமிட்ட பின்னர் நீர் பாய்ச்சுவது இன்றியமை யாதது. நீர்ப்பற்றாக்குறையும், மிகுதியாக நீர் பாய்ச்சுதலும் விளைச்சலைப் பாதிக்கும். க சர்க்கரைப் பீட்ரூட் இளம் பயிராக இருக்கும் போது வெட்டும் புழுக்களால் (cut worms) சேதப் படுத்தப்படும். இதை உடனுக்குடன் கட்டுப்படுத்தா விடில் பேரழிவு விளையக்கூடும். பூசணம், நச்சுயிரி, பாக்டீரியா போன்ற நுண்ணுயிரியாலும் இப்பயிர் தாக்கமுறும். இதில் நாற்றழுகல் (seedling rot) நோய் குறிப்பிடத்தக்கது. இது ஸ்கிலிரோஷியம் ரால்ஃப்சி (Sclerolium rolfsii) ரைசாக்டோனியா சோலானி (Rhizoctonia solan) ஆகிய நுண்ணுயிரி களால் ஏற்படுகிறது. தக்க பூசணக்கொல்லிகளுடன் விதைகளை நேர்த்தி செய்து விதைப்பதால் இந் நோயிலிருந்து பயிரைக் காப்பாற்றலாம். கிழங்குகள் முற்றியவுடன் பயிர் வரிசையின் ஊடே நாட்டுக்கலப்பையால் உழுது கிழங்குகளைப் பெயர்த்து எடுக்க வேண்டும். கிழங்குகளில் ஒட்டிக் கொண்டிருக்கும் மண்ணை நீக்கி,தழைப் புகுதியையும் அப்புறப்படுத்த வேண்டும். கிழங்குகளை நீரில் கழுவக் கூடாது. அவ்வாறு செய்தால் விரைவில் கெட்டு விடும். கிழங்குகளுடன் இலைப்பகுதியும் இருந்தால் சர்க்கரை அளவு குறைந்துவிடக்கூடும். கிழங்குகள் அறுவடையான 48 மணி நேரத்துக்குள் சர்க்கரை ஆலைகளுக்கு அனுப்பப்பட வேண்டும். பீட்ரூட் சர்க்கரை தவிர பீட்ரூட் கூழ் பீட்ரூட் பாகு போன்றவையும் பயன்படுவதால் இப்பயிர் மிகு வருவாய் தரும். சக்காரம் மாப்பிள் சர்க்கரை. இது ஆசர் (Acer saccharum) ஆசர் நைக்ரம் (Acer nigrum) என்ற இருவகை வடஅமெரிக்க மரங்களிலிருந்து எடுக்கப்படுகிறது. இம்மரங்களிலிருந்து ரப்பர் பால் வெட்டி எடுப்பது போல் மரப்பட்டைகளைக் கீறிச் சாறு சேகரித்துத் தூய்மை செய்து சர்க்கரை தயாரிக்கிறார்கள். தென்னை. பனை. ஈச்சைச் சர்க்கரை. தமிழ் நாட்டின் பல பகுதிகளிலும் தென்னை, பனை, ஈச்சைகளின் மஞ்சரித் தண்டை வெட்டி அதன் சா ற்றைக் காய்ச்சி,கருப்பட்டி, வெல்லம், சர்க்கரை, சுற்கண்டு முதலியன தயாரிக்கிறார்கள். -கே.ஆர். பாலச்சந்திரகணேசன் இரா. கேசவன் . நூலோதி. H. Nearing and S. Nearing, The Muple Sugar Book, The John Day Company. New York, 1950; Thompson C. Homer and William C. Kelly, Vegetable Crops, Tata McGraw - Hill Publishing Co. Ltd, London, 1978. சர்க்கரைவள்ளிக் கிழங்கு இது அமெரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள், நியூசிலாந்து நாடுகளிலும் இந்தியாவில் கேரளம். தமிழ்நாடு ஆகிய மாநிலங்களிலும் பெருமளவில் பயிராகின்றது. இதன் தாவரவியல் பெயர் ஐபோமியா பட்டாடஸ் [Ipomoea batatas) ஆகும். அறுமயத் தாவரமான இது வெப்ப, மிதவெப்பமண்டலங்களில் 75°C வெப்பமும். ஆண்டு மழையளவு 30-50 அங்குலமும், நல்ல சூரிய வெளிச்சமும் உள்ள டங்களில் நன்றாக வளரும். வளர் இயல்பு. இது 5 மீட்டர் வரை தரைமேல் படரும் கொடியாகும். இதன் அனைத்துப் பகுதி களிலும் பால் (latex) காணப்படும். கணுக்களிலிருந்து வேற்றிட வேர்கள் தோன்றும். அவை பருத்து, ஒரு செடிக்குச் சுமார் 10 கிழங்குகள் வீதம் காணப் படும். கிழங்குகளின் வெளித்தோலும், உள்புறமும் வெண்மை, பழுப்பு, இளஞ்சிவப்பு ஆகிய நிறங்களில் இருக்கும். இலைகள். ஒரே கொடியில் தனியிலைகளும், அங்கை மடல்களோடு கூடிய இலைகளும் உள்ளன; திருகு இலையொழுங்கு; இலையடிச் செதில் இல்லை; நீண்ட இலைக் காம்பின் மேற்பகுதியில் பள்ளமும், அடிப் பகுதியில் 2 தேன் சுரப்பிகளும் உள்ளன. தனியிலை இதய வடிவாகும்; கூர், அல்லது மழுங்கிய நுனி: அங்கை நரம்பமைப்பு உடையது. மஞ்சரி. இலைக் கோணத்தில் தனியாக அல்லது சைம் வகை மஞ்சரியாக உள்ளது. பூக்கள். நீண்ட பூக்காம்பு; செதில்கள் கொண்ட இருபால் பூக்கள் : ஆரச்சமச்சீருடையவை.