பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/846

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

826 சரளை

826 சரளை டாலஸ் (talus) என்புடன் உராயும் மூட்டுப் பகுதியும் அதன் கீழ் ஒரு குழிந்த பகுதியும் காணப்படும். என்பு எளிதில் தொட்டு உணரக்கூடிய தோல் அடியில் உள்ள தலைப் பகுதி உட்பகுதியான நளக அல்லது டிபியா என்புடன் (tibia) ஒரு மூட்டை ஏற் படுத்துகிறது. மூட்டுப் பகுதியைச் சுற்றி மூட்டு இணையம் இணைந்துள்ளது. வெளி முழங்கால் மூட்டு இணையமும் (lateral ligament of knee) இதில் ணைந்துள்ளது. தொடையின் இருதலைச் தசை நாண் (biceps femoris) பகுதி இத்துடன் இணைந் துள்ளது. சோலியஸ் தசை (soleus muscle) பின்புற மும், பெரோனியஸ் வாங்கஸ் தசை பக்கவாட்டிலும் தொடரும். பொதுப் பெரோனியல் நரம்பு அல்லது வெளிப் பாப்லிட்டியல் நரம்பு கழுத்துப் பகுதியைச் சுற்றி முன்புறம் வருகிறது. சரவென்பின் கழுத்துப் பகுதி முறியும்போது இந்நரம்பு பாதிக்கப்பட்டுப் பாதத்தை மேல்நோக்கித் தூக்க முடியாமல் செய்யும். இதை விழுந்த பாதம் (foot drop) என்பர். தண்டுப் பகுதியில் மூன்று விளிம்புகளும் மூன்று பக்கங்களும் காணப்படும். மூன்று பக்கங்களிலிருந்தும் பாதத்தை மேல்நோக்கித் தூக்க உதவும் எக்ஸ்டென் சார் தசைகள் முன்புறத்திலிருந்தும், பெரோனியல் 1 2 3 6 சரவென்பின் பல்வேறு வளர் நிலைகள் 1 பிறப்பில் 2 3 3-4 ஆம் ஆண்டு முதலாண்டு 4 15-17 ஆம் ஆண்டுகளில் இணைதல் 517-19 ஆம் ஆண்டுகளில் இதல் 6 பத்தொன்பதாம் ஆண்டு தசைகள் பக்கவாட்டிலிருந்தும், பாதத்தைக் கீழ் நோக்கி வளைக்க உதவும் மடக்குந் தசைகள் பின்புற மிருந்தும் உருவெடுக்கின்றன. சரவென்பு அரிதாகக் காணப்படாமல் இருக்க லாம். எடையைக் கடத்த அல்லது தாங்க உதவாததால் இந்த என்பு ஒட்டு அறுவைக்குப் பயன் படும். கழுத்தைச் சுற்றி உள்ள பொதுப்பெரோனியல் நரம்பு, என்பு முறிவில் பாதிக்கப்படலாம். இது கணுக்கால் மூட்டை வலிமைப்படுத்துவதுடன் வாமலும் பாதுகாக்கிறது. நழு மா.ஜெ.ஃபிரடெரிக் ஜோசப் நூலோதி, Peter L. William's and Roger War- wick, Gray's Anatomy. Thirtysixth Edition, Chur- chill Livingstone, New York, 1980. சரளை ஆன் இது ஒருவகை உருண்டையான துகள்களால் படிவாகும். இதன் துகள்கள், மணல் துகள்களை விடப் பெரியவை. உருண்டையான பெரிய துகள்கள் குவிந்த படிவுகளே சரளை (gravel) எனப்படும். சரளையின் துகள்கள் 2-32 மி. மீ. வரை இருக்கும். துகள்களின் குறுக்களவை அடிப்படையாகக் கொண்டு, சரளைகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. 2-4 மி.மீ. வரையானவை நுண் சரளை எனப்படும். 4-8 மி.மீ. அளவுள்ளவை சிறுசரளை எனவும், 8.16 மி.மீ. அளவுள்ளவை பெருஞ்சரளை எனவும். 16-32மி.மீ வரையுள்ளவை பருசரளை எனவும் உட்டன் (udden) என்பாரால் வகைப்படுத்தப்பட்டுள்ளன. சிலர் சரளையை வேறு வகையாகவும் பகுத்துக் கூறுவர். வில்மன் என்பார் களத்தில் பின்பற்றுவதற்கு ஏற்றதொரு பாகுபாட்டைக் கூறியுள்ளார். அவர் 50%க்கு மேல் கூழாங்கற்களால் ஆனவற்றைச் சரளை என்றும் 25-50% கூழாங்கற்களும் 50-75% மணல் துகள்களும் கொண்டவற்றை மணற்சரளை என்றும் பெயரிட்டார். இதே அடிப்படையில் 25% குறை வான கூழாங்கற்களை உடைய மணலைச் சரளை மணல் (pebbly sand) என்றும் குறிப்பிட்டுள்ளார் சரளையின் துகள்கள் பொதுவாக உருண்டை யான உருவம் உடையவை. இருப்பினும் இவற்றின் வடிவம் மூலப் பாறைகளைப் பொறுத்துச் சற்றே மாறுபடும். பலகை (slate) போன்ற மெல்லிய படிவுப் பாறைகளிலிருந்து தோன்றியவை தட்டையான கூழாங்கற்களாக உள்ளன. ஆனால் கிரானைட் போன்ற திண்ணிய பாறைகளிலிருந்து உண்டானவை பெரிதும் சம அளவு உருண்டைகளாகக் காணப்படு கின்றன. கடலரிப்பால் உண்டானவை, ஆறுகளால் உண்டானவற்றைவிடத் தட்டையாக உள்ளன.