பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/858

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

838 சரிவு விலக்க முறை

838 சரிவு விலக்க முறை . குழாயுடன் (sighting tube) சீராகக் குறியிடப்பட்ட செங்குத்தான வில் வளைவுடன் (graduated vertical arc) மட்டக் குமிழையும் கொண்டது. 45° கோணத் தில் தொலை நோக்குக் குழாயில் வைக்கப்பட்டுள்ள கண்ணாடி, குறியிடப்பட்ட கம்பியையோ, ஒரு புள்ளியையோ நோக்கும்போது அதே சமயத்தில் குமிழையும் பார்ச்சு உதவுகிறது. செங்குத்து வளைவை நகர்த்தும்போது, குமிழி நோக்கும் புள்ளிக்கு ணையாக மையத்திற்குக் கொண்டு வரப் படுகிறது. அப்போது வளைவில் செங்குத்துக் கோணம் அளக்கப்படும். அளக்கப்படும் இடம் மலைப்பகுதியாக இருந்து. அச்சரிவான நிலத்தில் கிடைமட்டத் தொலைவை அளக்க வேண்டுமானால் சரிவு அளவி ஒன்றே மிகச் சிறந்தது. பார்வைக் குழாய் வழியே சரிவான நிலத் தைப் பார்க்க முடியும். அக்குழாய், செங்குத்துக் கோணங்கள் குறிக்கப்பட்ட ஒரு வில் போன்று வளைந்த அளவுத் தகடு பொருத்தப்பட்டிருக்கும். இந்த வில் வளைவு அளவுத் தகடு. நீர்மத்துடன் கூடிய குமிழ்க் குழாய் ஒன்றுடன் ணைக்கப்பட் டிருக்கும். பார்வைக் குழாயினுள்ளே 45 கோணத்தில் அமைக்கப்பட்டுள்ள, பிம்பம் காட்டும் சுண்ணாடி காண்போருக்குக் குமிழ்க் குழாயிலுள்ள குமிழ் இருக்கும் நிலையைக் காட்டும். அதே நேரத்தில் காண்போர் முன் பகுதியில் உள்ள கிடைமட்ட இழையையும் அளவீடு செய்ய வேண்டிய இடத் தையும் காண முடியும். சரிவான நிலத்தின் ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு ள்ள செங்குத்துக் கோணத்தை அளவீடு செய்ய,பார்வைக் குழாயின் வழியாக அந்த இடத்தைக் கிடைமட்ட இழையுடன் ஒன்றியிருக்குமாறு பார்த்துக் கொண்டே குமிழ்க் குழாயில் உள்ள குமிழ் நடுப்பகுதியில் நிற்குமாறு ல்வளைவுத் தகட்டைக் கவனமாக நகர்த்திக் கொண்டு வர வேண்டும். ஓர் இடத்தில், அளவீடு செய்ய வேண்டிய இடம் கிடைமட்ட இழையுடன் இணைந்து ஒன்றி, குமிழ் நடுப்பகுதியில் நின்றால் அப்போது வில் வளைவுத் தகடு காட்டும் கோணமே இரு இடங்களுக்கும் இடையே உள்ள செங்குத்துக் கோணமாகும். சரிவு கோணங்கள் அளந்த பின்னர் அவற்றின் உதவியால் சரிவு நீளத்தை அளவீடு செய்ய முடியும். 6 சரிவு நீளத்தைக் கணக்கிட்ட பின்னர் அதிலி ருந்து கிடைமட்ட நீளத்தை அளவீடு செய்யலாம். இப்பணிக்குப் பெரிதும் பயன்படுவது சரிவு அளவி ஆகும். இத்துடன் குறிப்பிட்ட கோணத்திற்குச் சரிவு நீளம், கிடைமட்ட நீளம் ஆகியவை கணக்கி டப்பட்டு, பட்டியலாகத் தொகுக்கப்பட்டு இச்சரிவு அளவியுடன் இணைத்து வைக்கப்பட்டிருக்கும். பட்டியல் மூலம் தேவையான நீளத்தைப் பெற முடியும். இதே சரிவு அளவிக் கருவியில் வளைவுத் தகடு 0* கோணத்தில் இருக்குமாறு அமைத்து அக்கரு வியையே தள உயரம் அளக்கவும் பயன்படுத்தலாம். சரிவு அளவி, முக்கியமான சரிவு கோணங்களை அளப்பதற்குப் பயன்படுகிறது. சரிவான பரப்பில் வைக்கப்பட்டால் (எடுத்துக்காட்டாசு, சாலைத் தளத்தில்) அப்பரப்பின் சரிவான கோணத்தை அளக்கிறது. வளைவை 0° கோணத்தில் வைப்பதால். கை மட்டமாகப் (hand level) பயன்படுத்தலாம். ஏ.எஸ்.எஸ். சேகர் ரா. சரசவாணி நூலோதி. Francis H. Moffitt, Surveying, Seventh Edition, Harper & Row Publishers, New York, 1982. சரிவு விலக்க முறை தூண், சுவர், உத்திரம், தளம் போன்ற பல உறுப்பு களால் கட்டடம் அமைக்கப்படுகிறது. அதே போல் இரும்பு, மரம் ஆகியவற்றால் கட்டப்படும் அமைப்பு களும் பல உறுப்புகளால் கட்டப்படுகின்றன. அத்த கைய உறுப்பு ஒவ்வொன்றும் ஆய்வகங்களில் சோதனைக்குட்படுத்தப்பட்டு வலிமை அறியப்பட்ட பின்னரே பயன்படுத்தப்படுகிறது. இவ்வுறுப்புகள், அவற்றின் மீது ஏற்றப்படும் பளுவினால் அடையக் கூடிய மாற்றங்களை, அவற்றின் திருப்புத் திறனைக் கணக்கிடுவதன் மூலம் அறியலாம். அவ்வாறு திருப் புத் திறனைக் கணக்கிடும் முறைகளில் ஒன்று சரிவு விலக்க முறை (slope-deflection method) ஆகும். ஒரு கட்டட அமைப்பின் மீது பளு ஏற்றப்படும் போது அதன் பல உறுப்புகளிலும் தொய்வு ஏற் படும். அதனால் உறுப்புகளின் பல பகுதிகளில் விலக்கம் ஏற்படுகிறது. இந்த விலக்கத்தின் அளவு, ஓர் எல்லைக்கு மேல் அதிகரித்தால் கட்டட அமைப்பு உடைந்துவிடும். ஆதலால் விலக்கத்தின் அளவைக் கண்டுபிடித்து அதைக் குறிப்பிட்ட அளவுக்குள் இருக்குமாறு அமைக்க வேண்டும். விலக்கம், கட்ட டங்களில், மேற்புறச் சாந்துப் பூச்சில் கீறல் விழாத அளவிற்குள்ளும், பாலங்களில், கண்ணுக்குத் தெரி யாத அளவிற்குள்ளும், அதிர்வை அளிக்காத அள விற்குள்ளும் இருக்கலாம். ஓர் உறுப்பின் திரிபுத் திறன், அதன் தொய்வுத் திறன், அச்சு விசை, வெட்டுந்திறன் அல்லது வெட்டு வலிமை ஆகியவற்றின் கூட்டுத் தொகை ஆகும். பளுவைக் கொண்டு அதைப் பகுதி வகையிடல் செய்தால், பளு உள்ள திசையில் ஏற்படக்கூடிய