66 குழந்தை-நரம்பு -தசைப் பாதிப்பு
66 குழந்தை- நரம்பு - தசைப் பாதிப்பு தைக்கு எதுவும் தெரியாது, உணவுக்குப் பின், இரைப்பையின் தசை இயக்கம் செரிமானப் பாதை யைத் தூண்டும்போது, மலக்குடல் நிரம்பி இருக்கும் போது, குடல்களின் இயக்கம். குதத்தின் உள் வால்வை அமுக்குவதால், குதம் மெதுவாகத் திறக்கிறது. நரம்பு அனிச்சை மூலம், பிழியும் உணர்வும் வயிற்றுத் தசைகளின் கீழ்நோக்கித் தள்ளும் அசைவும் உண்டாகின்றன. ஆகவே, குழந்தை தன் கட்டுப் பாடின்றி மலத்தை வெளியேற்றுகிறது. காலையில் உணவு உண்ட 5-10 நிமிடங்களில் மலங்கழிக்கும் உணர்வு தோன்றுகிறது. இதை மனத்தில் கொண்டு, பெற்றோர்கள் கழிப்பறைக்குக் குழந்தையை அழைத் துச் செல்லலாம். சில வாரங்கள் கழித்து, இந்தப் பழக்கம் நிலைபெற்ற கட்டுப்பாடாகிறது. இரண்டாம் வயதில், குழந்தை தானாகவே சரியான நேரத்தில் கழிப்பிடத்தை அடைகிறது. இதைப் பெற்றோர்கள் கவனித்து ஆவன செய்ய வேண்டும். நாளடைவில் குழந்தைகள் தங்கள் பெற்றோர்கள், செய்வதையே பின்பற்றுகிறார்கள். உடன்பிறப்புக்கள் 18-24 மாத வயதில், குழந்தைகள் நன்கு பழகி விடுகின்றனர். கழிப்பிடமோ, கழிப்புப் பெட்டியோ, கலமோ, உறுதியாகவும். தூய்மையாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் குழந்தை மலங்கழிக்க எளிதில் பழகும். குழந்தைகளின் உளவய நிலைப் படி, தாம் கழித்த மலத்தை, நீர் கொண்டு அகற்றுவதை விரும்புவதில்லை. உடனடியாக ஆகவே குழந்தைகள் கழிப்பிடத்தை விட்டு வெளி யேறிய பின், நீர் கொண்டு கழிப்புக் கலத்தை கழுவ வேண்டும். மலக்கழிப்புப் பயிற்சியில் வற்புறுத்தலே கூடாது. படிப்படியாகப் 'பழக்க வேண்டும். குழந்தைகளை ஆடை எதுவுமின்றி அங்குமிங்குமாக விளையாட அனுமதிக்க வேண்டும். பக்கத்திலேயே கழிப்புக் கலத்தை வைத்துவிட வேண்டும். அதைக் கண்ட வுடன் குழந்தைக்குத் தானாகவே சென்று மலங் கழிக்க முயலும் எண்ணம் தோன்றும். மலம் கடினமாக இருந்தால் அல்லது குதவாயில் கீறல்கள் காணப்பட்டால், மலங்கழிக்கும்போது வலி உண்டாகலாம். இவற்றையெல்லாம் பெற்றோர்கள் கவனத்தில் கொண்டு ஆவன செய்ய வேண்டும். குழந்தையின் ஒத்துழைப்பும், பெற்றோர்களின் இடைவிடாத கண்காணிப்பும் இருக்க வேண்டும். மு.ப.கிருஷ்ணன் நூலோதி. Dr. Benjamin Spock, Baby & Child Care, 5th Edition, Pocket Books Publication, New York, 1976. குழந்தைகளிடையே நரம்பு -தசைப் பாதிப்பு சிறுநீரின் நரம்பு மற்றும் தசைப் பாதிப்பால் பல்வேறு நோய்கள் உண்டாகின்றன. பிறவிக் காயங்களால் உண்டாகும் புய நரம்புப் பின்னல் பாதிப்பில் எர்ப்ஸ் வாதமும், 7 ஆம் சுபால நரம்புப் பாதிப்பில் முகச் சோர்வாதமும் உண்டாகின்றன. குழந்தைகளின் தண்டுவடம் வைரஸ் நோயால் தாக்கப்படும்போது இளம்பிள்ளைவாதம் உண்டாகிறது. பின்வரும் பல்வேறு நோய்களில் நரம்பும் தசை யும் பாதிக்கப்படும். அவை மையஸ்தினியா கிரேவிஸ். கழுத்தில் தண்டுவடக் காயங்கள், பிறவித் தசைப் பெருக்கம் அல்லது மாற்றம். கில்லியன் பாரி நோயியம், வார்டிங் ஹாப்மன் நோய், போலியோ மயலெடிஸ், பாலிமிக்ஸின் மருத்துவம் முதலியன. நோய்க்குறிகள். பாதிக்கப்பட்ட நரம்பு மற்றும் தசைத் தொகுதியைப் பொறுத்தும் மூளைப் பாதிப் பில் தீமிர் வாதமும். தண்டுவடப் பாதிப்பில் நான்கு அங்கவாதம், பக்கவாதம். ஈரங்கவாதம், ஓரங்களை தம், மூவங்கலாதம், முரட்டுவாதம் போன்ற பல்வேறு பாதிப்பும் உண்டாகும். பாதிக்கப்பட்ட தசை நலிந்து காணப்படுவதுடன் நரம்பின் பாதிப்பால் இயங்க முடியாமலும் போகும். மூட்டுகளும் நாளடைவில் பாதிக்கப்படும். கை கால்கள் சூம்பி விளங்காமலும் போகும். மூளைப் பாதிப்பில் மனவளர்ச்சி குன்று வதுடன் வலிப்பும், இசிவும் தோன்றும். அவ்வப்போது நாக்குக் குழறும். பேச்சில் தடுமாற்றம் உண்டாகும். நடை தளர்வதுடன் நிற்க முடியாமலும் போகும். சுவாசத்திற்கு உதவும் இக்குழந்தைகளுக்குள் விலா இடைத்தசை மற்றும் பிரிமென்தகடு பாதிப் பினால் நுரையீரலில் சுரப்புகள் தேங்க இரும முடி யாமலும் வெளியேற்ற முடியாமலும் போகலாம். முடி வில் சுவாசத் தடை தோன்ற மரணம் நிகழும். செயற்கை முறைச் சுவாசம் கொடுப்பதாலும் நுரையீரல் சுரப்பை உறிஞ்சி எடுப்பதாலும் சுவாசக் குழாயைத் துளையிடுவதாலும் நோயாளிகளைச் காக்கலாம். நரம்பு, தசைப் பாதிப்பிலிருந்தும் காப் பாற்றலாம். மா.ஜெ. ஃபிரடெரிக் ஜோசப் குழந்தைகளிடையே காணும் பொதுக் கோளாறு காய்ச்சல், நீர்க்கோப்பு, காது அழற்சி, மூச்சுமண்டல நோய்கள், காற்றுக் குழலழற்சி, ஒவ்வாமை, அடிநா (tonsil) அழற்சி, தோல் நோய்கள், தட்டம்மை போன்ற தோல் பொரிப்புடன் கூடிய நோய்கள்.