பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/862

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

842 சல்‌ஃபேட்‌

842 சல்ஃபேட் மிக்கவை. பொதுவாக இவ்வகைச் சேர்மங்கள் தொகுக்கப்பட்டுப் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன. இவை எண்ணற்ற வினைகளுக்கு உட்படுகின்றன. இவ வினைகள் அனைத்திலும் எதிர் அயனிகள் அல்லது காரங்களால் கந்தகத்துடன் ணைந்துள்ள குளோ ரின் அணு இடம் பெயரச் செய்யப்படுகிறது. காட்டாக. சயனைடு அயனி அமீன்கள், அல்க்கீன்கள், அசெட்டிலீன்கள் முதலியவற்றால் பதிலீடு செய்யப் படுகிறது. சல்ஃபீனைல் குளோரைடு வகைச் சேர்மங்களுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு டிரைகுளோரோமெத் தேன் சல்ஃபீனைல் குளோரைடு ஆகும். இது பெர் குளோரோ மெத்தில் மெர்காப்ட்டால் (PMM) எனப் படும். இதன் வாய்பாடு CICSC1; கார்பன் டைசல்ஃ பைடை கட்டுப்பாடான சூழ்நிலையில் குளோரி னேற்றம் அடையச் செய்வதன் மூலமாக இதைத் தயாரிக்கலாம். மற்றொரு சேர்மமான 2,4-டை நைட்ரோ பென்சீன் சல்ஃபீனைல் குளோரைடு பரவ லாகப் பயன்படும் ஒரு காரணி ஆகும். இதன் வாய் பாடு (NO),C,H,SCI. இச்சேர்மம் அல்க்கீன்களுடன் சேர்க்கை வினைக்கு உட்பட்டுக் கூட்டு வினைப் பொருள்களைத் (adducts) தரும். இதன் மூலமாக அல்க்கீன்களைக் கண்டறியலாம். அமீன்களுடன் இவை வினைப்பட்டுச்சல்ஃபீனைமடுகளை உண்டாக்கு கின்றன. சில சல்ஃபனமைடுகள் ரப்பரைக் கடினப் படுத்தப் (vulcanizing) பயன்படுகின்றன. பி ஈ.எம். லியாகத் அலிகான் சல்ஃபேட் இது சல்ஃப்யூரிக் அமிலத்தின் எதிரயனி ஆகும். இதன் வாய்பாடு 80,2- சல்ஃப்யூரிக் அமிலத்தில் இரண்டு இடம் பெயரத்தக்க ஹைட்ரஜன் அயனிகள் உள்ள மையால் சல்ஃபேட் உப்பாகவும். பைசல்ஃபேட் உப்பாகவும் இது அறியப்பட்டுள்ளது. பெரும்பாலான சல்ஃபேட் உப்புகள் நீரில் கரையும் தன்மையைப் பெற்றுள்ளன; ஆனால் வெள்ளி, பாதரசம் (I) காரீயம், ஸ்ட்ரான்சியம், பேரியம், கால்சியம் சல்ஃ பேட்டுகள் இதற்கு விதிவிலக்கு ஆகும். ஒரு கந்தசு அணுவையும், நான்கு ஆக்சிஜன் அணுக்களையும் கொண்ட இவ்வயனியைப் பண்பறி பகுப்பாய்வில் எளிதில் கண்டறியலாம். இந்த அயனிக் கரைசலுடன் பேரியம் குளோரைடு கரைசலைச் சேர்த்தால், வெண்மையான வீழ்படிவாகப் பேரியம் சல்ஃபேட் கிடைக்கும். ச்சல்ஃபேட் உப்பு, அடர் ஹைட்ரோ குளோரிக் அமிலக்கரைசலில் கரையாது. எடையறி பகுப்பாய்வின் மூலமாகவும் துல்லிய மாக சல்ஃபேட் அயனியை எடையறியலாம். இங்கும் இந்த அயனி பேரியம் சல்ஃபேட்டாகவே வீழ்படிவாக் கப்படுகிறது. ஏனெனில் சல்ஃபேட் உப்புகளில் இவ்வுப்பே மிகக் குறைந்த கரைதிறனைப் பெற்றுள்ளது. ஹைட்ரோகுளோரிக் அமிலத் தயாரிப்பின் போது. பெருமளவில் சோடியம் சல்ஃபேட் துணைப் பொ ருளாகக் கிடைக்கிறது. இது காகித அட்டைகள். கண்ணாடி போன்றவற்றின் தயாரிப்பில் பயன்படு கிறது. Sp இனக்கலப்பால் இது உண்டாவதால் நாள்முகி வடிவுடையது. நான்முகியின் மையத்தில் கந்தக அணு அமைந்துள்ளது. அதன் நான்கு மூலை களிலும் நான்கு ஆக்சிஜன் அணுக்கள் அமைந்துள்ளன. பி.ஈ.எம், லியாகத் அலிகாள் சல்ஃபைட் இது சல்ஃபியூரஸ் அமிலம் என்ற நிலையற்ற ஓர் அமிலத்தில் இருந்து பெறப்பட்ட எதிர் அயனி ஆகும். இதன் வாய்பாடு S0,-,சல்ஃபியூரஸ் அமிலத்தில் இரண்டு இடம் பெயரத்தக்க ஹைட்ரஜன் அயனிகள் உள்ளமையால், சல்ஃபைட் உப்பாகவும். பைசல்ஃ பைட் உப்பாகவும் இது அறியப்பட்டுள்ளது. இந்த அயனியில் கந்தகம் + 4 ஆக்சிஜனேற்ற நிலையில் இருப்பதால். அது எளிதில் ஒடுக்கமடைந்து சல்ஃ பைடு அயனியாக மாறலாம். சல்ஃபைட் லிருந்து எளிதில் சல்ஃபர் டை ஆக்சைடு வளிமம் வெளியேற்றப்படுவதன் மூலமாக இந்த அயனி பண் பறி பகுப்பாய்வில் கண்டறியப்படுகிறது. இந்த அயனியின் உப்புக் கரைசலை அமிலப்படுத்தும்போது பின்வருமாறு சல்ஃபர் டைஆக்சைடு வெளியேற்றப் படுகிறது. அயனியி 2H + + SO, [H, SO,] → H,O + SO, 1 ய இதன் கார உலோக உப்புகளும். அம்மோனியம் உப்புகளும் தவிர ஏனையஸ் மிக அரிதாக கவே நீரில் கரையும். இதன் முக்கிய உப்பான சோடியம் சல்ஃபைட் சாயத் தொழிலில் பெரிதும் பயன் படுகிறது. மேலும் நிறம் நீக்கியாகவும் பண்டங்களில் காப்புப் பொருளாகவும் (preservative) பயன்படு கிறது. தனித்த இணை எலெக்ட்ரானை அயனி பெற்றுள்ளமையால் பிரமிடு கொண்டுள்ளது. சல்ஃபோனமைடு ந்த வடிவைக் பி.ஈ.எம். லியாகத் அலிகான் கரிம கந்தகச் சேர்மங்களில் ஒரு வகையே சல்ஃபோ னமைடு சேர்மங்களாகும். இவ்வகைச் சேர்மங்களின்