பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/868

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

848 சலமாண்டர்‌

848 சலமாண்டர் ஆகியவற்றின் மொத்த எண்ணிக்கை அடிப்படையில் மேற்கூறிய எண் குறிப்பு அமைகிறது. ஒரு துர அங்குலத்தில் 74 பாவு நூல்களும், 66 நிரப்பு நூல் களும் உள்ளன. 74X66 என்பதை 74+66=140 எனக் குறிப்பிடுவர். மெட்ரிக் அளவில் மேற்கூறிய 140 வகையை 65 எனக் குறிப்பிட வேண்டும். ஏனெனில், ஒரு சதுர செ.மீ.க்கு 29 பாவு நூல்களும் 26 நிரப்பு நூல்களும் ம் உள்ளன.29×26 அல்லது 29+26 =55 எனக் கணக்கிடல் வேண்டும். இவற்றுள் 140 வகை, உயர் திடமும் வனப்பும் கொண்டவை. இழைச் சிணுக்கு எண் கூடுதலாக ஆக, நெசவு சீராகவும் நெருக்கமாகவும், எளிதில் தேய்மான முறாமலும் இருக்கும். எனவே படுக்கை விரிப்புகளும், தலையணை உறைகளும் 140 வகைச் சல்லாத் துணியிலிருந்தே பெரும்பாலும் தயாரிக்கப்படுகின்றன ணையாக நிறுவப்பட்ட (curded) பருத்தி அல்லது பருத்தி பல் எஸ்டர் கலப்பின இழைகளிலிருந்து சாதாரண நெசவு வாயிலாக உருவாக்கப்படும் சன்ன மற்ற துணியான மஸ்லின் காரிக்கனாகவும் (unblea- ched) தயாரிக்கப்படுகிறது. -மே.ரா.பாலசுப்பிரமணியன் நூலோதி. B.P. Corbman, Fabric, Sixth Edition. pany, Singapore, 1985. சலமாண்டர் Textiles-Fibre to McGraw Hill Book Com- உருவத்தில் பல்லியைப் போன்ற, தீங்கற்ற, அஞ்சும் இயல்புடைய இது தவளை. தேரை முதலிய இருவாழ்வியினத்தைச் சேர்ந்தது. பொதுவாக இது மிகச் சிறியதாக இருந்தாலும் ஒரு சில 150 செ.மீ. நீளத்தில் பெரியவையாயும் உள்ளன. இது குளிர் இரத்த விலங்கு, சூழ்நிலைக்கேற்ப இதன் உடல் வெப்பம் மாறும். உடல் மேல்தோல் ஈரப்பதமுள்ளதாகவும் கொழகொழப்பாகவும் இருக் கும். நான்கு கால்களும் ஒரு நீண்ட வாலும் உண்டு. வாலிலோ, காலிலோ ஒரு பகுதி துண்டிக்கப்பட்டால் மீள உருவாக்கும் தன்மை பெற்றது. நன்னீர் நிலைகள், குளம் குட்டை, சிற்றோடை முதலிய வற்றில் கற்களுக்கடியிலோ, மட்கும் கட்டைகளினடி யிலோ, சிறு குடைவுகளிலோ வாழ்ந்து புழு பூச்சி, மெல்லுடலி, இளவுயிரிகளைத் தின்று வாழ்கின்றது. ய பொதுவாக இளவேனிற் காலத்தொடக்கத்தில் பெண் சலமாண்டர் முட்டையிடுகிறது. முட்டை களை ஒன்றன்பின் ஒன்றாகத் தொகுதியாகவோ தொடராகவோ இடும். முட்டைகளிலிருந்து வரும் இளவுயிரிகள் வளர் உருமாற்றம் அடையும்வரை சுவாசிக்கின்றன. செவுள்களால் ஆக்சலாட்டில் போன்ற ஒரு சில சலமாண்டர்களில் வெளிச் செவுள்களுள்ள இளவுயிரி நிலை, வாழ்நாள் முழுதும் நிலைத்திருக்கும். எனினும் தைராய்டு ஹார்மோனை தற்கு ஊசிமூலம் செலுத்தினால் முழு வளர் உரு மாற்றம் விரைவில் நடைபெற்று முதிர் சலமாண்டரா கிறது. கருமைநிறப் புறத்தோலில் மஞ்சள் புள்ளிகள் கொண்ட வட அமெரிக்கப் புள்ளிச்சலமாண்டர் 15 செ.மீ. நீளமுடையது. இது பிடிபட்டால் தோலி விருந்து வெண்மையான நீர்மம் வெளிப்படுகிறது. சிறிய உயிரிகளுக்கு இது நஞ்சாகும். இத்தன்மையால் எதிரிகளிடமிருந்து எளிதாகத் தப்பிவிடும். தவளை தேரை முதலிய இரு வாழ்விகளை எளிதில் இனம் காணலாம். சலமாண்டர்கள் பல்லி யைப் போன்றே உள்ளன. நீரிலேயே வாழ்வதால் பெரும்பாலானவற்றை நீர்ப்பல்லி எனவும் குறிப் பிடுவர். ஆனால் பல்லிகள் ஊர்வன வகுப்பைச் சேர்ந்தவை. இருவாழ்வி வகுப்பில் அடங்கியுள்ள அனைத்தும் இருவாழ்வு நடத்துவன அல்ல. ஒரு சில நீரிலும் வேறு சில தரையிலும் வாழ்கின்றன. பல சலமாண்டர் களின் உடல் மருங்கில் விலா வரிப்பள்ளங்கள் (lateral grooves) உள்ளன. மருங்குக்கோட்டு நரம்பு மண்டலச் செல்கள் வேதியுணர்வு உறுப்புகளாக, நீரின் அழுத்த உணர உதவுகின்றன. ஏனைய இருவாழ்வி களைவிடச் சலமாண்டரின் செவிப்புலன் உணர்வு ரளவிற்கு வளர்ச்சியுற்றுள்ளது. மீன்கள் மிகுந்துள்ள இடங்களில் சலமாண்டர் காணப்படுவதில்லை. ஒரு பொந்துகளில் வாழ் அளவை சில சலமாண்டர்கள் கின்றன. சிறு நடை சில சலமாண்டர்களில் அகக் கருவுறுதல் பெறுகிறது. விந்தணுக்கள் நிறைந்த பையை ஆ ண் நீரில் விட்டுச்செல்லும். பெண் சலமாண்டர் இதைத் தன் பொதுப்புழையில் (cloaea) எடுத்து வைத்துக் கொள்ளும். வேண்டும்போது கருவூட்டல் நடை பெறும். கருவுற்ற முட்டைகள் நீரிலோ, தரையிலோ விடப்பட்டுப் பெண் சலமாண்டர்களால் பாதுகாக்கப் படும். சில சலமாண்டர்களில் சிறப்பாக ராட்சத சலமாண்டர்களில் முட்டைகளைப் பாதுகாப்பதில் ஆண் பெரும்பங்கு கொள்கிறது. முட்டையிலிருந்து வரும் இளவுயிரி முதிர் உயிரி யின் உருவத்தை ஒத்துள்ளது. வளர் உருமாற்றம் (metamorphosis) முட்டைக்குள்ளோ நீரின் வெளிப் புறமோ நடைபெறும். சில நீர்வாழ் இளவுயிரிகள் முதிர்நிலையடைந்த பிறகும் புறச் செவுள்களைக் கொண்டுள்ளன. சலமாண்டிரிடே குடும்பத்தில் ஹைனோபிடே, கிரிப்டோபிராங்கிடே என பிரிவுகள் உண்டு.