பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/874

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

854 சலித்தல்‌

854 சலித்தல் ணிற்கும் அதற்கான சல்லடையின் துளைகளின் பரப்பு, வேதிப் பொருளியல் நூல் முறையில் கொடுக் கப்பட்டிருக்கும். இத்துளைகள் எப்பொழுதும் சதுர மாக இருக்கும். கம்பிகளைக் கிடைமட்டத்திலும் நேர்வாட்டத்திலும் வைத்து இத்துளைகள் உருவாக் கப்படுகின்றன. வலை எண் அதிகமாக அதிகமாகச் சல்லடைத் துளைகளின் எண்ணிக்கை அதிகமாகவும், துளைகளின் பரப்புக் குறைவாகவும் இருக்கும். எனவே சிறிய துகள்களைச் சலிப்பதற்கு அதிக வலை எண் உள்ள சல்லடைகளைப் பயன்படுத்த வேண்டும் என்பது தெளிவாகிறது. 4-400 வரை வலை எண ணுடைய சல்லடைகள் வணிக முறையில் கிடைக் கின்றன. பொருள்களின் அளவை அறியும் முறை ஆய்வுச் சல்லடைகள். 3-0.0015 அங்குலம் அள வுள்ள பொருள்களின் உருவ அளவை அறியப் பயன் படும் சல்லடைகளுக்கு ஆய்வுச் சல்லடைகள் என்று பெயர். இவற்றின் பரப்பை நூல்களிலிருந்து அறிய லாம். பொருள்களின் உருவ அளவை அறியும் ஆய்வில் தரம் நிர்ணயிக்கப்பட்ட சல்லடைகளை (standardised ம் Serecns) ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்குவர், குறைந்த பரப்புடைய துளை அடங்கிய சல்லடை கீழும், அதிக அளவுள்ள சல்லடைகள் மேலும் அடுக்கப்படும். இவ் வடுக்குச் சல்லடைகளின் மேல் கலவை கொட்டப்பட்டு 20 நிமிடங்களுக்கு எந்திரத்தின் மூலமாகக் குலுக்கப் படும். பின்பு ஒவ்வொரு சல்லடையிலும் இருக்கும் பொருள்களின் சதவீதம் மொத்த நிறையின் அடிப் படையில் கண்டறியப்படும். அனைத்துச் சல்லடை களிலும் சலிக்கப்பட்ட பொருள்கள் அடியில் உள்ள தட்டில் தங்கிவிடும். சல்லடைகள் வலை எண் 150 க்கு மேல் உள்ள பயன்படுத்தப்படுவதில்லை. அத்தகைய சிறிய துகள் களின் அளவை அறிய வேறு சிக்கனமான முறைகள் உள்ளன. வலை எண் 48 க்கும் வலை எண் 4க்கும் இடையில் உள்ள பொருள்களைப் பிரித்தெடுப்பதற்கு நுண்துகள் சலித்தல் (fine screening) என்றும் அதை விட அதிகமான எண் உடைய சலித்தல் முறைக்கு அதி நுண்துகள் சலித்தல் என்றும் பெயர். சலித்தலுக்குப் பயன்படும் கருவிகள். பெருமள விலான சல்லடைகளில் துகள்கள், ஈர்ப்பு ஆற்றல் மூலமாக விழுகின்றன. சில முறைகளில் சல்லடை களின் வழியாகத் தள்ளப்படுகின்றன. மிகச்சிறிய பொருள்கள் குலுக்கல், அதிர்தல், சுழற்றுதல் மூல மாகப் பிரித்தெடுக்கப்படும். கிரிஸ்வி சல்லடை. இணையாக வைக்கப் பட்ட ஒரே அளவிலான இரு கம்பிகளை உடையது. இவற்றிற்கு இடையே சீரான இடைவெளி உடைய குறுக்குக் கம்பிகள் உள்ளன. கம்பிகள் மாங் கனீஸ், எஃகின் மூலமாகச் செய்யப்படுகின்றன. வை பாறைகளைக் கரைக்கும் தொழிற்சாலைகளில் தொடக்க நிலை அரைப்பானில் பயன்படுகின்றன. இவை நிலையாகவோ, அதிரும் தன்மையுடனோ இருக்கலாம். (அ) சல்லடைகள் மரத்தைப் அளவுச் பிரிக்கும் சல்லடைகள் பட்டை செலுத்தல் ரப்பர் பரு துகள்களைத் தாங்கும். செலுத்தல் பந்து (ஆ சல்லடை D ARA ARABASARAA Jas. at 4040000__2. 09.264 SD.D. - நழுவு தாங்கி படம் 1. சல்லடை வகைகள் (அ) டிராமல் வகை (ஆ) சுழலும் வகை அதிரும் சல்லடை. இச்சல்லடைகளில் எந்திர விசை அல்லது மின்விசையைக் கொண்டு அதிர்வு உண்டாக்கப்படுகிறது. 1 நிமிடத்திற்கு 1800-3600 அதிர்வு உண்டாக்கப்படும். ஒரு சல்லடை 12 அங்குல அகலமும் 24 அங்குல நீளமும் கொண்டிருக்கும். இது இயங்க 1/3 குதிரைத்திறன் தேவை. 48 அங்குல அகலமும் 120 அங்குல நீளமும் கொண்டதாயின் 4 குதிரைத்திறன் விசை தேவை. சுழலும் சல்லடை. இச்சல்லடைகள் உருளை வடிவமானவை. இவ்வுருளை வடிவச் சட்டத்தைச் சுற்றித் துளை செய்யப்பட்ட தகடுகள் பொருத்தப் பட்டிருக்கும். உருளையின் இரண்டு முனைகளும் திறந்திருக்கும். உருளை சற்றுச் சாய்ந்தாற்போல் வைக்கப்பட்டிருக்கும். சலிக்கப்பட வேண்டிய பொருள் மேற்புறத்தில் கொட்டப்படும். சல்லடை