பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 குழந்தைப்பருவ நோய்கள்‌

68 குழந்தைப்பருவ நோய்கள் 10 12 வயது ஆகும் வரையே அளிக்கப்படுகின்றன. நன்கு முன்னேறிய நாடுகளில் குழந்தைப் பாது காப்பும், குழந்தை நலத்திற்காக உருவாகும் திட்டங் களும் அவர்கள் பருவம் அடைந்த பின்னரும் தொடர் கின்றன. குழந்தை மருத்துவ வ இயலில் சுரு தோன்றிய காலம்தொட்டு பன்னிரண்டு குழந்தை வயது அடையும் வரை உள்ள காலத்தைப் பல பருவங் களாகப் பிரிக்கிறார்கள். குழந்தையின் பிறப்புக்கு முற்பட்ட பருவம் சினை (ovum): கருத்தரித்த நாளிலிருந்து 14 நாள் வரை ; கரு (embryo): 14 நாள் முதல் 9 வாரம் வரை; ( foetus) : 9 வாரம் முதல் பிறப்பு வரை, குழந்தையின் பிறப்பைச் சார்ந்த பருவம் கரு உருவாகிய 28 வாரத்திலிருந்து குழந்தை பிறந்த பின் 1 வாரம் வரை குழந்தையின் பிறப்புக்குப் பிற்பட்ட பருவம் பசுங்குழவி (new born) - முதல் 4 வாரங்கள் குழவி (infancy) - முதல் ஆண்டு மழலைப் பருவம் (toddler) - 1-3 வயது வரை பாலப் பருவம் (pre school child) - 3-6 வயது பிள்ளைப்பருவம் வரை (school age child) - 6-12 சிறுவன், 6-10 சிறுமி உலகின் முதல் குழந்தை நல வல்லுநர்களாகச் கருதப்படும் காஸியப்பாவும் ஜீவகாவும் இந்தியர்களே. இவர்கள் சி.மு 6 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் கள். இவர்களின் குழந்தைப் பாதுகாப்பு, குழந்தை நோய்கள் பற்றிய கருத்துக்கள், தற்போதைய குழந்தை நலம் பற்றிய முன்னேறிய கருத்துகளை ஒத்துள்ளன. கிரேக்க நாட்டைச் சேர்ந்த ஹிப்போகிரேட்டஸ் முன்னேறிய மருத்துவத்தின் தந்தை ஆவார் (கி.மு. 460-370). இவர் தம் வாழ்வின் பெரும் பகுதியைக் குழந்தைகளைக் கூர்ந்து ஆராய்ந்து அவர்களுக்கு ஏற்படும் நோய்களைப் பற்றி விரிவாக வெளியிடச் செலவிட்டார். முதன் முதலில் குழந்தைகள் நூல் என்ற பெயரில் குழந்தைகளின் நோயைப் பற்றித் தாமஸ் போயர் என்பார் கி.பி. 1545 இல் ஆங்கிலத்தில் எழுதினார். தினார். அண்மைக் காலத்தில் குழந்தை நல மருத்துவ யல் பெரு மளவில் முன்னேறியுள்ளது. சுவயம்ஜோதி குழந்தைப்பருவ நோய்கள் கருப்பையில் பாதுகாக்கப்பட்ட குழந்தை, பிறந்த வுடன் பல்வேறு மாற்றங்களை எதிர்நோக்குகிறது. முதல் அழுகையின் போதே நுரையீரல் விரிந்து செயல் படத் தொடங்குகிறது. சுவாசமண்டலத்தில் ஏதாவது பிறவிக் குறைபாடிருந்தால் சுவாசத்தடை ஏற்படு கிறது. ஹயலின் மென்தோல் (hyaline membrane) ஈர நுரையீரல் நோயியம் (wct lung syndrome), நுரை யீரல் விரிவடையா நிலை அல்லது மிகை விரிவு இவற்றால் பல்வேறு நோய்கள் உண்டாகின்றன. கருப்பருவத்திலிருக்கும் குழந்தையின் நுரையீரல் வேலை செய்யாமலே இரத்தச் சுற்றோட்டம் நடை பெறும். குழந்தை பிறந்ததும் இதயத்தில் உள்ள மாற்றுப்பாதை அடைபட நுரையீரல் வழியே ரத் தச் சுற்றோட்டம் நடைபெறுகிறது. இதயக் குறை பாட்டில், மாற்றுப் பாதை அடைபடா நிலையில் பல்வேறு று தய நோய்கள் உண்டாகின்றன. பிறந்த குழந்தையிடம் காணப்படும் மஞ்சள் காமாலை நோய். ஈரல் வளர்ச்சியின்மையையும் நோயையும் சுட்டிக்காட்டுகிறது. அரிதாக இரத்தத் தில் ஏற்படும் இரத்த அணுக்களினாலும் மஞ்சள் காமாலை நோய் தோன்றலாம். குழந்தைப்பருவத்தில் பாக்டீரியா மற்றும் தொற்று நுண்ணுயிரிகள் கொப் பூழ்க்காயம் வழியாகவும் நுரையீரல் வழியாகவும் உடலில் நுழைகின் ன்றன. வை நுரையீரல் அழற்சி, மூளை உறை அழற்சி, எலும்பு அழற்சி, சிறுநீரக அழற்சி, உட்செவி, தோல் அழற்சி ஆகியவற்றை உண் டாக்குகின்றன. வைரஸ் நுண்ணுயிர் தாக்குவதால் ரூபல்லா. எக்கோ வைரஸ், காசாக்கி வைரஸ், மின்னோவைரஸ் முதலியவை மூளை, மூளை உறை, நுரையீரல், இதயம், ஈரல், கண்வில்லை. போன்ற வற்றைத் தாக்குகின்றன, பாரம்பரிய சிபிலிஸ் நோய், குழந்தைகளின் கண்மூளை போன்றவற்றைத் தாக்கும். செரிமான மண்டலத்தில் தோன்றும் பல்வேறு பிறவிக் குறைபாடுகளாகிய, குடல் துளையற்றமை மெக்கோனியம் அடைப்பு இரைப்பையில் பைலோரஸ் தசைப் பெருக்கம் குடல் மாறுபாடான சுற்று வளை யத்துடன் கூடிய கணையம் இரட்டைக் குடல்மற்றும் பக்கப்பை, குடல்செருகல், நேர்குடல் மற்றும் குதிச் சுருக்கம் அல்லது துளையின்மை மெக்கலின் பை, பக்கப்பைக் கொப்பூழ் தோன்றாமை பிரிமென்தோல் பிதுக்கம் ஆசியவை குழந்தைகளைப் பாதிக்கும் குடல் நோய்களாகும். இரத்தத்தில் புரோத்திராம்பின் அளவு குறைந்து காணப்படும்போது இரத்த உறைதல் சரிவர நடப்ப தில்லை. இதனால் குருதிவாரி இரத்தப்போக்கு, வாந்தி, மலத்தில் இரத்தம் போதல், மூட்டுகளில் இரத்தம் சேர்தல் ஆகியவற்றுடன் குழந்தைகளில்