860 சவான்னா
840 சவான்னா கள் வெடித்தல் இவற்றைச் சான்றாகக் குறிப் பிடலாம். அ. சங்கரன் நூலோதி.P.S. Verma and V.K. Agarwal Cell Biology, Genetics, Evolution & Ecology, S. Chand & Co Ltd,, New Delhi, 1983. சவான்னா & இது ஒரு வகைப் புல்வெளி, சவான்னாவில் (savanna) ஆங்காங்கே மரங்களும், புதர்ச்செடிகளும் காணப் படும். பெரும்பாலான சவான்னாக்கள் வெப்ப நாடு களின் பாலைவனங்களுக்கும், மழைக்காடுகளுக்கும் இடையே அமைந்துள்ளன. மித வெப்ப மண்டலப் பகுதியிலுள்ள சில புல்வெளிகளும் சில சமயங்களில் சவான்னா எனப்படும். சவான்னா ஆஃப்ரிக்கா, ஆஸ்திரேலியா. இந்தியா, தென் அமெரிக்கா ஆகியவற்றில் பரவிக் காணப்படுகிறது. அதாவது எங்கெல்லாம் ஒவ்வோர் ஆண்டிலும் மழைக்காலமும், வறட்சிக் காலமும் மாறி மாறி வருகின்றனவோ அங்கெல்லாம் இவ்வகைச் சவான்னாக்கள் காணப்படுகின்றன. பெரும்பாலான சவான்னாக்கள் ஆண்டிற்கு 75-100 செ.மீ. மழையைப் பெறும். ஆனால் ஒரு சில குறைந்த அளவே (சுமார் 25 செ.மீ.) மழையையும் வேறு சில 150 செ.மீ. மழையையும் பெறுகின்றன. வறண்ட சவான்னாக்களில் புற்கள் மிகக் குறைந்த உயரம் வளர்கின்றன. ஈரமான சவான்னாக்களில் புற்கள் மிகு உயரம் வளர்கின்றன. மிக ஈரமான படம் 1. சவாள்ளாக் காடுகளிலுள்ள விலங்குகள்