பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/881

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சவான்னா 861

சவான்னா 861 ஈரமான வற்றில் 3 மீ. உயரம் வரை இருக்கும். சவான்னாக்களில் வறண்ட சவான்னாக்களைவிட மரங்கள் மிகுதியாக இருக்கும். பெரும்பாலான சவான்னாக்களில் புற்கள் கொத்துக் கொத்தாக வளர்ந்திருக்குமேயல்லாமல் தரை முழுமையும் மூடித் தொடர்ச்சியாகக் காணப் படா புல் தொகுப்புகளுக்கிடையே அஸ்ட்ரேசி, மைமோசேசி, சீசல்பினியேசி, ஃபேபேசி குடும்பங் களைச் சார்ந்த தாவரங்கள் காணப்படும். மேலும் அக்கேசியா மரங்களும், பனைவகை மரங்களும் ஆங்காங்கே வளர்ந்திருக்கும். மரங்களின் வளர்ச்சி வறட்சியால் பாதிக்கப்படு கிறது. வறட்சிக் காலம் தொடங்கும்போது புற்கள் வளர்ச்சி குன்றி உலர்ந்து பழுப்பு நிறமடையும். பெரும்பாலான மரங்களில் இலைகள் உதிரத் தொடங்கும். வறட்சியைத் தாங்கும் மரங்கள் மட்டுமே தொடர்ந்து வாழ்கின்றன. மேலும் வறட்சிக் காலங்களில் நெருப்பு எளிதில் பரவிப் பெரும்பாலான மரக்கன்றுகளை அழித்து விடுகின்றது. அதிக வேர் களையுடைய புற்கள் மழைக்காலத்தில் தொடர்ந்து துளிர்த்துப் பசுமையாகின்றன. சில சவான்னாக்களில் மண், நீர்வடியும் தன்மை ஆகியவை குறைவாக இருப்பதால் புற்கள் மட்டுமே வளர்கின்றன. மரங்கள் தோன்றுவதில்லை. பெரும்பாலான சவான்னாக்களின் மண் செங்களிமண் வகையைச் சார்ந்தது. இவ்வகை மண் வறட்சியான காலத்தில் பாறை போன்று இறுகிக் காணப்படும். பலவகை விலங்குகள் சவான்னாக்களில் வாழ் கின்றன. மான், வரிக்குதிரை, ஒட்டகச் சிவிங்கி, யானை, காட்டு எருமை முதலியன கூட்டங் கூட்டமாக ஆஃப்ரிக்கச் சவான்னாக்களில் வாழ் கின்றன. சிறுத்தைப் புலி, கழுதைப்புலி, சிங்கம், வேறு பல ஊனுண்ணிகள் காணப்படுகின்றன. பல வகை எலிகள், பறவைகள், ஊர்வன, பூச்சிகள் இவ் வகைப் புல்வெளிகளில் இயல்பாகவே காணப்படு கின்றன.(படம் 1) சவான்னாவை மரங்களையுடைய சவான்னா என்றும், புதர்ச் செடிகள் உள்ள சவான்னா என்றும் இரு வகையாகப் பிரிக்கலாம். ஒவ்வொன்றையும் என்றும் பசுமையானவை, இலையுதிர் தன்மை யுடையவை என்று மேலும் பிரிக்கலாம். ஒருசாரார் சவான்னாவை முள் சவான்னா, உண்மையான சவான்னா.சவான்னாக் காடுகள் என மூன்று வகை களாகப் பிரிக்கிறார்கள். உண்மையான சவான்னாக்களில் ஸ்டெப்பிகள் போன்ற புல்வெனிகள் அடங்கும். இவற்றைப் பிரேசில் நாட்டவர் காம்போ (compo) என்கின்றனர். 1. காடு 2. சவான்னா 2 1 3 3. மரங்களையுடைய சவான்னா 4. குறுஞ்செடிகளையுடைய சவான்னா