862 சவுக்கு
862 சவுக்கு என்று ஆஃப்ரிக்காவிலுள்ள சவான்னாவை எங்ளர் என்பார் மரமற்ற புல் வான்னா, புதர்ச் சவான்னா பிரிக்கிறார் (படம் 2). கேப் குடியிருப்பிலுள்ள சவான்னா துணை வெப்ப மண்டலச் சவான்னாவாகும். இங்குள்ள தாவரங்கள் எப்பொழுதும் பசுமையாக இருக்கும். இந்தியச் சவான்னாக் காடுகளை இந்திய மேல் வண்டல் சவான்னா. வட இந்தியக் கீழ் வண்டல் சவான்னா (கங்கைச் சமவெளியிலும், பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கிலும் காணப்படுபவை) என்றும், வறண்ட சவான்னா (இலையுதிர் காடுகளில் காண்பவை), துணை னெப்ப மண்டல நீலகிரிச் சவான்னா (நீலகிரி மலைச்சரிவுகளில் உள்ளவை) என்றும் பிரித்துள்ளார்கள். இந்தியச் சவான்னாக் காடுகளில் முதல் வகை சால் மரங்கள் (Shorea robusta), லாகர்ஸ்ட்ரோமியா பார்விஃ புளோரா (Lagerstromia Parviflora) லான்னியா கிராண்டிஸ் (Lansa grandis) அடினா கார்டின் போலியா (ddina cordifolia) மலபாரிக்கம் பாம்பாக்ஸ் ஆகிய மரங்களும், அந்திஸ்டீரியா ஜைகான்ஸியா (Anthistiria gigantia) சாக்கரம் நாரிஜா (Saccharum nareja) ஆண்ட்ரோபோகான் நார்டஸ் (Andropogon nardus) முதலிய புற்களும் சாதாரணமாகக் காணப்படுகின்றன. இரண்டாம் வகையில் முதல் வகைத் தாவரங் களுடன் எரியாந்தஸ் (Erianthus) புற்களும் உள்ளன. மூன்றாம் வகையில் ஃபோனிக்ஸ்( Phoenix) களும் முள்களையுடைய புதர்ச்செடிகளும் சாதாரண மாகக் காணப்படுகின்றன. வகையில் மரங் டால்பெர்ஜியா நான்காம் வாட்டிஃபோலியா ( Dalbergia latifolia), அனோகீஸஸ் லாட்டிஃபோலியா (Anogeissus laripolia), பில்லாந்தஸ் எம்பிளிகா (Phyilanthus emblica) வெண்ட்லாண்டியா (Wendlandia) முதலிய மரங்களையும் 2.5மீ. உயரம் வளர்ந்துள்ள புல்வகைகளையும் காணலாம். கா. ராஜசேகரன் நூலோதி G S.Puri et al. Forest Ecology. Vol I. Oxford and 1BH Publishing Company, New Delhi, 1982. சவுக்கு இதன் தாவரவியல் பெயர் காசுவரினா ஈக்யுசிட்டி ஃபோலியா வின் (Casuarina equisetifolia Linn) என்ப தாகும். எனினும் குப்ரசஸ் போன்ற விதை மூடாத்தாவரங்களையும் பலர் சவுக்கு என்றே குறிப் பிடுகின்றனர். மேலும், உதகை, கொடைக்கானல் போன்ற மலைப்பகுதிகளிலுள்ளோர் அக்கேசியா டியல்பேட்டா (Acacia (Acacia dealbata) அ.டிகரன்ஸ் {A.dscurrens) போன்றவற்றையும் சவுக்கு என்கிறார் கள். உண்மையான சவுக்கு, புதர்ச் செடிகளாசுவோ மரங்களாகவோ வாழும் வறள் நிலத்தாவரமாகும். சவுக்கின் தண்டு கணு, இடைவெளி எனும் பகுதிகளைக் கொண்டிருந்தாலும் கணுப்பகுதியில் ஏனைய தாவரங்களைப் போல் நன்கு வளர்ச்சியுற்ற இலைகள் இல்லை. கணு க்களில் செதிலிலைகள் seale leaves) மட்டுமேயுண்டு. மேலும் கணு டை வெளிப் பகுதியில் நீள் வாக்கிலமைந்த மேடு பள்ளங் களிருக்கும். சவுக்கின் தண்டமைப்பு ஈக்யுசிட்டம் (Eguisetum) என்னும் பெரணித் தாவரங்களை ஒத்திருப்பதால் சவுக்கிற்கு காசுவரினா ஈக்யுசிட்டி ஃபோலியா என்று பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. மேல் கி அடுத்தடுத்து ஒன்றின் மேலொன்றமைந்த கணு டைப்பகுதியிலுள்ள நீளமேட்டில் பள்ளங்கள் மாறி மாறி அமைந்திருக்கும். அதாவது கீழ்க்கணுவின் இடைப்பகுதியிலுள்ள பள்ளத்திற்கு நேரே கணுவிடையில் மேடு இருக்கும். அதற்கு மேல் உள்ள கணுவில் பள்ளமிருக்கும். கணுவில் ஒவ்வொரு மேட் டிற்கும் நேராக ஒரு செதிலிலை இருக்கும். பொது வாசு ஒரு கணுவில் 4-12 செதிலிலைகளுண்டு. இவை உறை போன்று தோற்றமளிக்கும். இலைகள் குறு யிருப்பதால் ஒளிச்சேர்க்கையைத் தண்டே செய் கின்றது. இதைத் தண்டின் குறுக்கு வெட்டமைப்பைக் கொண்டு நிறுவலாம். மேலும் தண்டு வறட்சியான பகுதிகளில் வாழ்வதற்கேற்ற பல தக அமைவுகளைக் கொண்டுள்ளது. தண்டின் சுணு டைப் பகுதியின் மேடு வெட்ட பள்ளங்களுக்கேற்றவாறு குறுக்கு மைப்பும் மேடுபள்ளங்களும் காணப்படும். பள்ளங்களி லுள்ள புறத்தோலில் கா காற்றுத் துளைகள் (stomata) அமைந்துள்ளமையையும் அவை பல தூவிகளால் பாதுகாக்கப்பட்டுள்ள மையையும் காணலாம். இத் தூவிகள் காற்றுத் துளைகள் மூலம் நீராவிப் போக்கு நடைபெறுவதைக் கட்டுப்படுத்துகின்றன. மேலும் மேட்டுப் பகுதிகளில் புறத் தோலின் உட்பகுதியில் பாலிசேடு பாரன்கைமா செல்கள் அமைந்துள்ளன. இவற்றில் பசுங்கணிகங்கள் மிகுந்திருப்பதால் தண் டின் மூலம் ஒளிச்சேர்க்கை எளிதாக நடைபெறு கிறது. தண்டில் இரு வட்டங்களில் அமைந்துள்ள காற்றுக் குழாய்த் தொகுப்புகளில் உள் வட்டத்தைச் சேர்ந்தவையும் வெளிவட்டத்தைச் சேர்ந்தவையுமாக மாறி மாறி அமைந்துள்ளன. ஆண் மலர்கள் ஸ்பைக் மஞ்சரியில் அமைந் துள்ளன. இம்மஞ்சரிகள் கிளைகளின் நுனியில் செங் குத்தாக காட்கின் (catkin) மஞ்சரி போன்று அமைந் திருக்கும். மஞ்சரியின் கணுக்களிலுள்ள பூவடிச் செதில்கள் (bract) ஒன்றோடொன்று பக்கவாட்டில் ணைந்து குவளை போன்ற அமைப்பைத் தோற்று