சறுக்கு விமானம் 865
r சறுக்கு விமானம் 865 இக்கருவியில் கிடைநிலையிலும் செங்குத்து நிலை யிலும் உள்ள முள்கள் விமானம் ஓடுபாதையின் மையத்திலிருந்து எவ்வளவு விலகி உள்ளது என்பதை உணர்த்துகின்றன. ஓடுபாதையின் மையம் பற்றிய தகவல் வான் அலைகளின் மூலம் அனுப்பப்படுகிறது. இரட்டை அதிர்வெண் ஒலிபரப்பியின் மூலம் ஓர் அலையை ஓடுபாதை மையக் கோட்டின் இடப்புறமும் மற்றதை ஓடுபாதை மையக்கோட்டின் வலப்புறமும் செலுத்த முடிகிறது. இந்த இரு வான் அலைகளும் சறுக்குப் பாதை காட்டியில் ஈர்க்கப்பட்டுச் செங்குத்து நிலையில் உள்ள முள்ளின் நிலையை அறுதியிடு கின்றன. இம்முள்ளின் நிலையிலிருந்து ஓடுபாதையின் மையக் கோட்டில் இருந்து எந்தப் பக்கம் எவ்வளவு தொலைவு விலக்கம் உள்ளது என்பதை எளிதில் கணிக்கலாம். இதே முறையில் மற்றுமோர் இரட்டை அதிர் வெண் ஒலிபரப்பி வாயிலாகக் கிடைமட்ட நிலையில் உள்ள முள்ளை நகர்த்துவதன் மூலம் சறுக்குக் கோணம் அறுதியிடப்படலாம். சரியான முறையில் இக்கருவி பயன்படுத்தப்பட்டால் ஏறக்குறைய ஓடு பாதைக்கு 0.8கி.மீ. வரையிலும், தரையில் ருந்து சுமார் 60 மீ. உயரம் வரையிலும் விமானத்தைத் துல்லியமாகச் சரியான சறுக்குப் பாதையில் நகர்த்திச் செல்ல முடியும். இந்தத் தொலைவு வந்ததும் சாதாரண நேரடிப் பார்வை மூலமாகவே எஞ்சிய தொலைவைக் கடந்து ஓடு பாதையில் இறங்கிவிட முடியும். வயி. அண்ணாமலை நூலோதி. A. C. Kermode, Mechanics of Flight. Himalayan Books, New Delhi, 1982. சறுக்கு விமானம் எந்திர ஆற்றலற்ற விமானம் சறுக்கு விமானம் (glider) எனப்படுகிறது. காற்றிலும் கனமாண பறப்பை முதலில் நிகழ்த்த உதவியது சறுக்கு விமானம். இதன் தொடக்க கால வடிவமைப்புடன் எந்திர ஆற்றல் ஊட்டப்பட்டுச் சில மாற்றங்கள் செய்தே தற்கால விமானங்கள் வடிவமைக்கப்பட் டுள்ளன. மிகுதிறன் கொண்ட சறுக்கு விமானங்கள் மிதவை விமானம் என்றும் வழங்கப்படும். சறுக்கு விமானத்திற்குத் தேவையான உந்து ஆற்றல் காற்றுப் போக்கின் வேகத்திலிருந்தோ, புவிஈர்ப்பு விசையில் இருந்தோ பெறப்படுகிறது. பறத்தல் வகைகள். சறுக்கு விமானம் மேலேறு தல், சறுக்குதல் என இருவகையில் பறக்கவல்லது. உயரமான இடத்திலிருந்து கீழ்நோக்கி இறங்கு தல் சறுக்குதல் எனப்படும். உயரமான இடம் பெரும் பாலும் மலையின் உச்சியர்கவோ ஒரு சரிவின் உயர்ந்த இடமாகவோ இருக்கும். காலங்களில் தொடக்க மனிதனின் தசைத்திறன் மூலமே பட்டம் விடுவது போல் சறுக்கு விமானங்களுக்குத் தேவையான முடுக் கம் பெறப்பட்டு விமானம் வானில் செலுத்தப்பட்டது. பிற்காலத்தில் நீண்டு சுருங்கும் கயிற்றின் உதவியுடன் சுவண் விமானம் முறையில் வானில் செலுத்தப் பட்டது. விமானத்தின் சறுக்குக் கோணம் சரிவின் கோணத்தைவிட மிகுதியாக இருந்தால் சரிவின் நீளத்தை விட மிகு தொலைவு பறக்க முடியும். சில ஏற்புடைய சூழ்நிலைகளில் விமானம் கீழ் இறங்குவதற்குப் பதிலாகக் காற்றில் மேலே ஏறத் தொடங்கும். இவ்வகை நிகழ்வு மேலேறுதல் எனப் (அ) அ.க.9-55 (ஆ) படம் 1. வானூர்தி (அ) கீழிறங்கும்போது (ஆ) பறக்கும்போது