866 சளி
86 சளி வளர்ப்புச் சோதனை படம் 2, தொங்கும் வானூர்தி படும். காற்றுவிசையின் செங்குத்து உறுப்பு விமானத் தின் சறுக்கு வேகத்தைவிட மிகுதியாக இருக்கும் போது மேலேறுதல் நிகழ்கிறது. சரிவில் மட்டும் இது நிகழ்வதால், சரிவு மேலேறுதல் என்று வழங்கப் படும். புவியெங்கும் நிறைந்து இருக்கும் வெப்பக் கவிழ் போக்கைப் பயன்படுத்தி மேலேறும் முறைஉருவாக்கப் பட்டு வெப்பக் கவிழ்வு மேலேறுதல் என்று வழங்கப் படுகிறது. இதற்கென்று வடிவமைக்கப் பட்ட கருவியின் உதவியோடு வெப்பக் கவிழ்வு நிகழும் இடங்களை எளிதில் கண்டறிந்து பயனடைய லாம். இம்முறையின் பயனாகச் சரிவுகளின் தேவை இல்லாமல் உலகின் எப்பகுதிக்கும் சறுக்கு விமானம் பறக்கமுடிகிறது. ஒரே பறப்பில் சுமார் 750 கி.மீ கடக்கலாம். பயன்பாடு. பயிற்சிக்கு உரிய சறுக்கு விமானங்கள் எளிய, உறுதியான கட்டமைப்பும் குறைந்த வேகமும் உடையலை. இவற்றில் ஒருவர் அல்லது இருவர் அமரலாம். பறத்தலுக்குத் தேவையான அனைத்துக் கட்டுப்பாட்டு இயக்கங்களையும் எளிதில் கற்க உதவும் வண்ணம் வை வடிவமைக்கப்படுகின்றன. பறத்தலின் வேகமோ கடக்கும் தொலைவோ முக்கிய மாகக் கருதப்படுவது இல்லை. இதன் ஒரே குறிக் கோள் விமானிகளுக்குப் பயிற்சி அளிப்பதுதான். விமானத்தை எவ்வாறு இயக்குவது என்பதை ஆபத் தற்ற வேகத்தில் கற்பிப்பதே இதன் சிறப்பு நோக்க மாகும். வயி, அண்ணாமலை நூலோதி.D. Anderson. JR, Introduction to Flight, McGraw-Hill Book Company, New York, 1978. சளி வளர்ப்புச் சோதனை மூச்சுப் பாதைகளிலிருந்து இருமல் மூலமாகவோ தொண்டைச் செருமல் மூலமாகவோ வெளிப்படு வதைச் சளி (sputum) என்பர்.சளி, மூக்கு, மேல் தொண்டை, மூச்சுக்குழல், மூச்சுக் கிளைக்குழல், மூச்சுச் சிற்றறை எனப் பல இடங்களிலிருந்து வருவ தால் அதில் உமிழ் நீர், இரத்தம், சீழ், எபிதிலியச் செல்கள், நெகிழ்வு இழைகள், நுரையீரலின் சிதைந்த பகுதிகள், நுண்ணுயிரிகள், போன்றவை காணப்படலாம். காளான்கள் சளி இரத்தம் கலந்த நுரையுடனோ (நுரையீரல் வீக்கம்) கறுப்புநிறங் கொண்டோ (நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களில்), இரத்தம் கலந்தோ (காச நோய்), முட்டைக் கரு போன்று மஞ்சள் நிறமாகவோ (மஞ்சள் காமாலை). அடர் பச்சை நிறமாகவோ (குளோரோமா அல்லது ஈரல் சீழ்க் கட்டி, நுரை யீரலுள் உடைந்தால்), சீதமும் சீழும் கலந்தோ, முத்துப் போன்றோ(ஆஸ்த்துமா நோயில் காணப்படும் கர்ச்மேன் சுருள் வளையங்கள்), உலர் பழச்சாறு போன்றோ, சீழ் கொண்டோ (நுரையீரல் சீழ்க் கட்டி). சிவப்பு ஜெல்லி போன்றோ (நுரையீரல் புற்றுநோய்), இரும்புத்துரு நிறமாகவோ (நுரையீரல் அழற்சி), மஞ்சள் நிறமாகவோ (மஞ்சள் காமாலை அல்லது ஈரல் கட்டி நுரையீர லின் உள் வெடித்த போது) இருக்கலாம். ஆகவே சளியின் நிறம், மணம், திட்பம் ஆகியவற்றைக் கொண்டு நுரையீரலின் நோயை அறுதியிடலாம். சளியின் கட்டியான ஒரு துளியைக் கண்ணாடித் தகட்டில் வைத்து அதன் மேல் ஒரு மூடு கண்ணாடியை 1.ஊட்ட ஊடகத்தில் காச நுண்ணுயிரிகள்