சன்னல் 869
சன்னல் 869 சன்னல் ஒரு கட்டடச் சுவரிலுள்ள திறப்பு, சன்னல் (window) எனப்படும். சூரிய ஒளி, காற்று முதலியவை உள்ளே செல்வதற்கு இது பயன்படுகிறது. முற்காலத்தில் சன்னல் அமைப்பின் வகை, அளவு, அதைச் சுற்றி யுள்ள வேலைப்பாடுகள் முதலியவை மிகுதியாகக் காணப்பட்டன. பழங்கால நாகரிகக் கட்டடங்களில் சன்னல்கள் பயன்படுத்தப்பட்டன. மத்தியத்தரைக் கடல் சார்ந்த (mediterranean) பகுதிகளில் சூரிய ஒளி மிகுதியும் தேவைப்படாமையால் சன்னல்களின் தேவை குறைவாகும். அவை மரபு வழியாக மிகச் சிறிய அளவிலேயே காணப்படுகின்றன. சன்னல்கள் ரோமானியக் கட்டடக்கலையில் வட்டமாகவும், அவற்றைச் சுற்றி வெளிப்புற வேலைப் பாடுகளுடனும் காணப்பட்டன. ரோமானியக் காலத்தில் சக்கரச் சன்னல்களும் காணப்பட்டன. பொதுவான பயன்பாடுகளுக்குக் கூர்முகட்டுச் சன்னல் கள் பயன்படுத்தப்பட்டன. நாகரிகம் வளர வளரச் சன்னல்கள் மிகப் பெரிய அளவில் வளைவுகளுடனும், கண்ணாடியுடனும் அமைக்கப்பட்டன. 12ஆம் நூற்றாண்டின் தொடக் கத்தில் வண்ணக்கண்ணாடிகளும் ஓவியங்கள் வரையப்பட்ட கண்ணாடிகளும் சன்னல்களில் பயன் படுத்தப்பட்டன. பொதுக் கட்டடக்கலையில், இடை நிலைக்காலத் தொடக்கத்தில் (earliest medieval) சன்னல்கள் சிறியனவாகவும். கண்ணாடிகளற்றும் காணப்பட்டன. பின்னர் வீடுகளில் பெரிய அளவில் சன்னல்கள் அமைக்கப்பட்டன. இச்சமயத்தில் பல கோணத் தொங்கற் பலகணி வடிவச் (oritl window) சன்னல்கள் பெரும்பான்மையாக வழக்கத்திற்கு வந்தன. 16 ஆம் நூற்றாண்டில் வில் வடிவச் (bow> window) சன்னல்கள் வழக்கத்திற்கு வந்தன: 17 ஆம் A படம் 1. வளைவுகளைக் கொண்ட மூன்று திறப்புடைய சன்னல்