பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/892

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

872 சனி

872 சனி தற்போது சனிக்கோளின் எந்தக் காந்தப்புலன்கள் பற்றியும் தெரியவில்லை. வியாழனை விடத் தன் துருவத்தில் அதிக தட்டையாக உள்ளது (வியாழனின் 6% தட்டைத் தன்மையுடன் ஒப்பிட இதன் தட்டை 10%). துருவ விட்டம் 10,8000 கி.மீ. வியாழனில் வெளிமண்டலத் தின் குறியீடுகள் போல் அவ்வளவு தெளிவாக இதன் வெளிமண்டலம் இல்லாததால் இதன் சுழற்சிக் காலத் தைச் சரியாகக் கணக்கிடுவது சுடினமாக உள்ளது. வியாழனைப்போல ஒத்த கதிர்வீச்சு வெளிப் பாடு ல்லை. எனவே தெளிவான விவரங்களை வரைய இயலவில்லை. பொதுவாக ஒத்துக்கொள்ளப் பட்ட சுழற்சிக்காலம் 10 மணி 14 நிமிடம். ஆனால் வியாழனைப்போல நடுவரையில் அதிக திசைவேகம் உள்ளது. கோளின் அகலாங்கு அதிகமாக, இதன் சில திசைவேகம் குறைகிறது. துருவத்தில் 11 மணி இதன் கழற்சிக் காலம். இக்கோளின் அதிவிரைவான சுழற்சியின் காரணமாக அதன் பரப்பில் புள்ளிகள் (கறைகள்) பிற குறிகள் இருந்தமையால் பட்டைபட்டையாக இதன் வெளி மண்டலத் தோற்றம் தெரிகிறது. சில வேளைகளில் பெரிய வெண்புள்ளிகள் தெரிகின்றன. அவை அளவில் பல ஆயிரக்கணக்கான கி.மீ. அகலம் உடையன. ஆனால் அவை 1.5 ஆண்டுகளுக்கு மேல் நிலைத்தவையல்ல. அதன் வெளி மண்டலத்தின் பொது நிறம் மஞ்சள். வியாழனைவிடச் சற்று வெளிறிய நிறம். நிறமாலையின் பிரிவுகளைக் கண்ணுற்றபோது பல கலவைத் தொகுப்புகள் வெளிமண்டலத்தில் உள்ளமை தெரிய வரும் (அட்டவணை 2). இதில் அம்மோனியா இருப்பது தெளிவாகத் தெரியவில்லை. பெரும்பாலும் இருக்கக்கூடும். ஏனெனில் வியாழ னின் மேகத்தைவிட அடர்த்தியான மேகக் கூட்டங்கள் அமைய அம்மோனியா ஐஸ் காரணமாக இருக்கிறது. வளையங்கள். நடுவரைத் தளத்திலேயே இதைச் சுற்றி அமைந்திருக்கும் அழகிய மூன்று வளையங்கள் க்கோளின் தனித்தன்மை ஆகும் (அட்டவணை 3). உள்ளடக்கிய, கோளின் பரப்பிற்கு அருகே அமைந்த C வளையம் கிரேப் வளையம் (crape ring) ஆகும். புற வளையம் வளையம் A காசினியின் கோட்டம் (Cassini division) இதில் அடங்கியுள்ளது. இவ்விரு மிக உள், புற வளையங்களுக்கு இடைப் பட்ட அதிக வெளிச்சமுடைய பொலிவு வளைய மான B, நடுவரையாக உள்ளது. தொலை நோக்கி யில்லாமல் சனியின் வளையங்களைப் பிரித்தறிதல் யலவில்லை. 1610 இல் கலிலியோ தான் முதன் முதலில் இவ்வளையங்களைக் கண்டார் எனலாம். தெளிவின்மை காரணமாக அவருக்கு இதன் தோற்றம் பெரிய மையக் கோளின் இருமருங்கிலும் இரு சிறிய துணைக் கோள்கள் தொற்றிக்கொண்டு உள்ளமை போலக் காணப்பட்டது. எனவே, இவர் காதுடன் கூடிய கோள் எனச் சனியைக் குறிப்பிட்டார். 1655இல் கிறிஸ்டியன் ஹியூஜன் என்னும் வானியல் அறிஞர் கலிலியோ பார்த்த காது தான் சனிக் கோளைச் சுற்றி அதன் நடுவரைத் தளத்தில் அமைந்த பொலிவு வெளிச்ச வளையம் எனக் கண்டார். 1675இல் காசினி என்னும் பிரான்ஸ் நாட்டு வானியல் அறிஞர் சனியின் வளையத்தை ஒரு கறுப்புக்கோடு இரு மைய வட்டப்பகுதிகளாகப் பிரிப்பதைக் கண்டார். அந்தக் கோடு காசினியின் கோட்டம் எனப்பட்டது. 1850 இல் ஜார்ஜ் பிரண்ட் என்னும் வானியல் அறிஞர் சனிக்கோளுக்கு அருகிலேயே வெளிச்ச வளையத்திற்கு உட்புறம் மெலிதான பிரிவு வளையம் இருக்கக் கண்டார். புற A வளையம் 16,400 கி.மீ. அகலமானது. அதற்கு அடுத்துக் காசினியின் கோட்டம் 5700 .. அசுலமானது. அதற்கு உட்புறம் பொலிவு வெளிச்ச வளையமான நடு வளையம் 26,666 கி.மீ அகலமானது. இதற்கு உட்புறமுள்ள மிகு உள்வளையம் 16,000 கி.மீ. அகலமான, னது. இந்த மெலிதான மிகு உள்வளையம் பாண்டின் வளையம் அல்லது கிரேப் வளையம் எனப்படும். வெளிச்ச வளையம் B யையும் கிரேப் வளையம் A யையும் பிரிக்கும் குறுகிய கோட்டம் 160 கி.மீ. அகலமானது. புறவளையம் C இன் உள்ளே குறுகிய டைவெளி தென்படும். இதை என்கேயின் கோட்டம் (Encke's division) என்பர். இது 10 கி.மீ. அளவை விட அதிகமில்லாத மிக மெல்லிய வளையம். நிற மாலைச் சோதனையின்படி கோளை விட்டுத் தாலைவில் செல்லச்செல்ல வளையத்தின் வேகம் அதிகரிக்கிறது. வளையத்தின் ஊடே விண்மீன்கள் காணப்படுவதால் இவ்வளையம் சிறு சிறு துகள் களால் ஆனது. வளையத்தில் உள்ள இடைவெளி, சனியின் ஏனைய துணைக்கோள்களின் திணிக்கப்பட்ட சலனத் தால் ஈர்க்கப்பட்டு விலகும் துகள்களின் மறைவால் ஏற்படும். 30-300 கி.மீ. வரை விட்டமுடைய துகள்கள் இவ்வளையங்களில் காணப்படுகின்றன. வை ஒளிமயமாகக் காட்சி தருவனவாதலின் பனிக் கட்டிகளால் ஆனவை என்றே தெரிகிறது. வளையத் தின் அதிகப் பொலிவுக்குத் திண்மப் பனிக்கட்டியை விடப் பனிபடர்துகள்களே காரணமாக இருக்கக் கூடும். தற்போது வளையம் எவ்வாறு ஏற்பட்டது என்ப தற்கான மூலம் பற்றித் தெளிவான முடிவு எடுக்கப் படவில்லை. இக்கோள் உருவானபோது இதைச் சுற்றி வரும் வகையில் உருவான துணைக்கோள்கள் அண்மையில் வந்தபோது தாய்க் கோளின் ஈர்ப்பு