பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/895

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சஜிட்டா 875

0 22345 5 7 98 10 3 சஜிட்டா 875 படம் அ சஜிட்டாலின் குறுக்குவெட்டுத் தோற்றம் 1. தடித்த தோல் 2.மேல் தோல் 3.அடி நரம்பு 4 நீள் தசைகள் 5. உடற்குழிப் புறத்திசு 6.விந்துப்பை ? சூல குழல் 8 இல் சுரப்பி 9. குடல் 10. குடல்தாங்கி . அவற்றின் உடலைச் சமநிலையில் நிறுத்தவே பயன் படுகின்றன. முண்டப் பகுதிக்கும் வால் பகுதிக்கும் இடையில் வெளிப்படையாக எவ்விதப் பிரிவும் தெரிவதில்லை. இவ்விரண்டு பகுதிக்கும் இடையில் அடிப்பகுதியில் மலவாய் காணப்படும். வாலைச் சுற்றி வால் துடுப்புக் caudal fin) காணப்படுகிறது. உடல்சுவர், கியூட்டி கிள், மேல்தோல், தாங்குஞ்சவ்வு, நான்கு நீள் போக்குத் தசைகள், உடற் குழிச்சவ்வு ஆகியவற்றைக் கொண்டது. தலையில் மேல்தோல் குற்றிழைச் செல்கள் முட்டை வடிவத்தில் தடித்துக் காணப்படும். இதற்கு, குற்றிழை வளையம் எனப்பெயர். இது கீட்டோனேத்தாவுக்குரிய சிறப்புப் பண்பாகும். சஜிட்டா ஒரு செல் உயிரிகளையும் கடின ஒட்டுக் கணுக்காலிகளின் இளவுயிரிகளையும் உண வாகக் கொள்கிறது. உணவு செரிமானம் ஆவதற்குத் தகுந்தவாறு உணவுப்பாதை நீண்டு காணப்படுகிறது. நரம்பு மண்டலம் ஒரு மூளை நரம்பணுத் திரளையும் பக்க நரம்புகளையும் கொண்டது. ஒரு வயிற்றுப்புற நரம்பணுத் திரளும் நரம்புகளுடன் காணப்படும். ஆனால் இரத்த ஓட்ட மண்டல உறுப்புகளோ, கழிவு நீக்க உறுப்புகளோ இவ்வுயிரியின் உடலில் காணப் படுவதில்லை. அண்டச் சஜிட்டா இருபால் உயிரி (hermaphrodite) ஆகும். ஓரிணை விந்தகமும்,ஓரிணை சுரப்பியும் உள்ளன. விந்தகங்கள் சிறியனவாக முண்டப் பகுதியின் அடிப்பகுதியிலும் அண்டச் சுரப்பிகள் பெரியனவாக முண்டப்பகுதியின் மேல் பகுதியிலும் அமைந்துள்ளன. இவற்றில் தற் கருவுறுதல் (self fertilization) உடலின் உள்ளேயே நடைபெறும். சுருவுற்ற முட்டைகள் அண்ட நாளங்கள் (oviducts) மூலம் வெளியேற்றப்படுகின்றன. பிறகு 7 8 10 11 12 13 14 15 17 16 1. வாயி 2. உணவு க்குழல் 3. உணவுக்குழல் இணைப்பு 4. கீழ் நரம்புச் செல்திரள் 5. 10. பக்கத்துருப்புகள் 6. சூலகம் 7. 8 இல் குழல் 9. குடல் 11 கழிவுத்துளை 12. குதம் 13. வித்தகம் 14. வால் குழி 15, 16, விந்துக்குமிழ்கள் 17 வால்துடுப்பு இரண்டு நாளுக்குள் பிளவுப் பெருக்கம் (cleavage) அடைந்து, சிறு சஜிட்டா போன்ற உருவைப் பெற்று, பின்பு முட்டையின் வெளிச் சவ்வைக் கிழித்துக் கொண்டு சிறு உயிரியாக வெளியே வருகிறது. 1 செ.மீ. நீளம் உடைய இவ்வுயிரி சில நாள்களில் வளர்ந்து முதிர் உயிரி ஆகிறது. மு. சாகுல் ஹமீது