பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குழல்‌ அழற்சி 71

படம் 3. மூச்சுக்குழாய் மூச்சுக் கிளைக் குழாய் ஆய்வுக் கருவிகள் 1. முச்சுக்கிளைக் குழாய் ஆய்வி 2. மின் ஒளி குமிழ் செலுத்தி 3. உறிஞ்சான் உலோக முனை 4. அயல்பொருள் அகற்றும் சாமணங்கள் 5. மின் ஆற்றல் ஊட்டி உணவுக்குழாய் அகநோக்கி. பெரியவர்களுக்கு ணவுக்குழல் மேல்முன் பற்களிலிருந்து 15 செ.மீ. தள்ளித் தொடங்கி 40 செ.மீ. தள்ளி இரைப்பையுடன் சேரும். இந்தக் குழலின் நீளம் 25 செ.மீ. ஏழு வயதுக் குழந்தைக்கு வாயிலிருந்து 10 செ.மீ. தள்ளித் தொடங்கி 27 செ. மீ. தள்ளி படம் 4 உணவுக்குழாய் ஆய்வி 2. மின் ஒளி குமிழ் செலுத்தி

  • திசு எடுக்கும் சாமணம் 4, மின் ஆற்றல் ஊட்டி

குழல் அழற்சி 71 இரைப்பையுடன் சேரும்; இந்தக் குழலின் நீளம் 17 செ. மீ. உணவுக்குழலின் உட்பக்கத்தை இந்த அக நோக்கியால் பரிசோதிக்கலாம். அப்போது உணவுக் குழலின் பகுதியில் எங்காவது சுருக்கம் இருந்தால் அகநோக்கியை நிறுத்திவிட வேண்டும். இல்லை யெனில் உணவுக்குழலின் சுவரில் அகநோக்கி பட்டுக் கிழிந்து விடலாம். அது உயிருக்குக் கேடு தரும். உடல் உறுப்பு அமைப்பில் மூச்சுக்குழாய் பிரியும் இடத்திலும், பெருந்தமனி வளைந்து போகும் இடத் திலும் உணவுக்குழலின் உள்ளே சிறிது அழுத்தப்பட்டி ருக்கும். இது சுருக்கம் அன்று. அதனால் ஆய்வியை உணவுக்குழலின் உள்ளே இந்த இடங்களைத் தாண்டியும் செலுத்தலாம். உணவுக்குழலில் சிக்கி இருக்கும் வெளிப்பொருள் கிளை எடுக்கவும், புற்றுநோய் அறிகுறி இருந்தால் சோதனைக்குத் திசு எடுக்கவும், அமிலம் காரத்தி னால் உணவுக்குழல் சுருங்கி இருந்தால் அந்த இடத்தை மெதுவாக விரிக்கவும் இந்த அசுநோக்கி உதவுகிறது. - டி. எம். பரமேஸ்வரன் குழல் அழற்சி சிறு இரத்த நாளங்களும் தோலும் குழல் அழற்சியால் (angitis) பாதிக்கப்படுகின்றன. முதலில் இது நாளங் களில் புண்ணாகத் தோன்றும். காயங்கள் . முதலில் இரத்த நாளச் செல்களின் மென்மைத் தன்மையைத் தாக்குகின்றன. பெரிய காயங்களால், நார்ப் புரதமும், நுண்தட்டுச்செல்களும் நாளங்களில் தேக்கம் அடைகின்றன. நாளங்களின் சுவர்கள் பாதிக்கப்படுகின்றன. எனவே அரிப்பு, நாளங்களின் அழற்சி, இரத்த ஓட்டம் தடைப்படல் என்னும் விளைவுகள் உண்டாகின்றன. இவை யாவும் அழற்சியின் அறிகுறிகளாகும். குழல் கிரேக்க மொழியில் அக்கியான் (agge1on). என்றால் இரத்த நாளம் என்று பொருள். ஐடிஸ் (itis) என்றால் அழற்சி என்று பொருள். இரத்த நாளம் அல்லது குழல் அழற்சி என்றாலும், நிண நாளங்களும் பாதிக்கப்படலாம், லுயூபஸ் எரிதிமடசோசிஸ் என்ற நோய் நிலையில் மிகச்சிறிய நாளங்களும் பாதிக்கப் படலாம். -சாரதா கதிரேசன் நூலோதி. Arthur Macnalty The British Medical Dictionary, The Caxton publishing Co. London, 1961.