78 குழாய்த் தொடர்
78 குழாய்த் தொடர் வழங்கு மையம். கூடுவகைக் குழாய் அமைப்பு நீரேற்று நிலையம்- தொட்டி மற்றக்குழாய்கள் நீர் தேவைப்படும் இடங்களின் . வரம்புகள் அழுத்த ஆய்வுப்பகுதி வான சுமையின் ஊகப்பகுதி A செறிவா படம் 1. நீர் வழங்கு அமைப்பு உள்ளன. கௌகாத்தி -பிரவுனி என்ற இடத்தில் உள்ள குழாய்த் தொடர் சுமார் 1150 கிலோ மீட்டர் தொலைவு உள்ளது. இக்குழாய்த் தொடர்கள் கசிவு இல்லாதவையாகவும் பொருள்களைக் கடத்தத் தேலையான அழுத்தத்தைத் தாங்கக் கூடியவை யாகவும் இருக்க வேண்டும். முதலில் நீர்மத்தை வேகமாக உந்தித் தள்ளுவதற்கு மிகுந்த அழுத்தம், நீர்மம் இறைக்கும் எந்திரத்தின் மூலம் கொடுக்கப் படும். மிகு தொலைவு செல்லச் செல்ல இந்த அழுத்தம் குறைந்து கொண்டே வரும். இந்த அழுத்த இழப்பு ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு இத்தனை மீட்டர் எனக் கணக்கிடப்படும். குழாய்த் தொடரில் நீர் அனுப்புவதாக இருந்தால் அதில் அழுத்தம் சிறும அளவு ஒரு சதுர சென்டி மீட்டர் பரப்புக்கு 1.5 கிலோகிராம் இருக்க வேண்டும். நீர்மத்தைக் கடத்தத் தேவையாள அழுத்தம் குறையும்போது மீண்டும் இறைக்கும் எந்திரத்தால் மிகுதியான அழுத்தம் கொடுக்க வேண்டும். நீர்த் தொட்டிகளை உயரமான இடத்தில் கட்டினால் அந்த உயரத்தினால் ஏற்படும் அழுத்தமே தேவை யான வேகத்தில் நீரை அனுப்பிவிடும். இந்த உயரத்தைப் புவி ஈர்ப்பு அழுத்த உயரம் என்று கூறலாம். இந்த முறையில் குடிநீர் வழங்குதல், பாசன நீர் வழங்குதல், சாக்கடை நீர்ச் சேகரிப்பு முதலிய குழாய்த் தொடர்கள் அமைக்கப்படுகின்றன. இக்குழாய்கள் பல மூலப்பொருள்களால், விட்டம் 1-900 செ.மீ வரையுள்ள பல அளவுகளில் தயாரிக்கப்படுகின்றன. எஃகு உருக்கு. வார்ப்புக் கற்காரை, பக்குவப்படுத்தப்பட்ட களிமண், அலு மினியம், தாமிரம், பித்தளை, கல்நார், மரம், நெகிழி