பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/102

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94

சிறுவர் இலக்கியத்தில் மணவையார் பங்கு


அவர் எழுதியவற்றைப் படித்துப் பார்த்தால், குழந்தை இலக்கிய கோமான் ஆனார் என்று சொல்வதே பொருந்தும். தென் மொழிகள் புத்தக டிரஸ்ட்டுக்காக நாற்பத்தி மூன்று சிறுவர் நூல்களை மணவையார் பதிப்பித்தார். குழந்தை இலக்கிய விற்பன்னர்களில் எத்தனை பேருக்கு இந்த அரிய வாய்ப்புக் கிடைத்திருக்கும்? அவர்களின் எண்ணிக்கை இருகை விரல் எண்ணிக்கை அளவு இருக்கலாம். மண வையார் பதிப்பாசியார் மட்டுமா? படைப்பாசிரியரும்கூட! சிறுவர்களுக்காகச் சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், உரைச் சித்திரங்கள் முதலியன எழுதியுள்ளார். கால் நூற்றாண்டுக் காலத்துக்கு மேலாக வானொலியில் சிறுவர் நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார். இவற்றை நூல்களாகவும் வெளியிட்டுள்ளார். இவற்றைப் பார்க்கும்போது, படிக்கும் போது மணவை முஸ்தபா குழந்தை இலக்கியக் கோமான் என்பது உண்மையாகிறது உறுதியாகிறது

சிறுவர் இலக்கியச் செம்மல்

மணவையாரின் சிறுவர் இலக்கியச் சேவையின் ஒரு பகுதியான புனை கதையை இங்கே ஆய்ந்து பார்க்க விரும்புகிறேன். எனக்கு கிடைத்தவை நான்கு நாவல் நூல்கள்

அவை :

1.தெளிவு பிறந்தது

2. திருப்புமுனை

3. விழா தந்த விழிப்பு

4. சிறுவர்க்குச் சுதந்திரம்

இந்த நான்கு நூல்களும் 1989ஆம் ஆண்டிலேயே வெளி வந்தவை. எழுதப்பட்ட காலம் வேறு வேறாக இருக்கக் கூடும்.