பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/115

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அமுதன் அடிகள்

107



இந்தியாவும் பாகிஸ்தானும் இரு நாடுகளாகப் பிரிந்த போதும் நடந்தது இதுதான். இந்துக்களும் இஸ்லாமியரும் மோதிக் கொண்டனர். வன்முறையும் அதன் விளைவாக இரத்த ஆறும் பெருக்கெடுத்தோடிய நாட்கள் அவை. அப்போதுகூட இந்து சமயமும் இஸ்லாமிய மார்க்கமும் மோதிக் கொள்ளவில்லை. அச்சமயங்களைச் சார்ந்து சிலரே மோதலுக்கும் வன்முறைக்கும் உயிர்க்கொலைக்கும் காரணமாக அமைந்தனர்.

அதன்பின் அமைதியாக வாழ்ந்துவந்த இந்தியரிடையே தற்காலத்தில் சமயங்களின் பெயரால் வன்முறை அவ்வப்போது இடம் பெறுவது நன்மனம் கொண்ட நாட்டு மக்களுக்குப் பெரிதும் வருத்தம் தருவதாகும்.

இந்தியப் பிரிவினையின்போது கூட அமைதிப் பூங்காவாகத் திகழ்ந்த தமிழகத்திலும் இன்று சமயத்தின் பெயரால் ஆங்காங்கே வன்முறை இடம் பெற்று வருகிறது என்பதை அனைவரும் அறிவர். எல்லாச் சமயத் தலைவர்களும் ஒற்றுமைக்காகக் குரல்கொடுத்தாலும் சமயத்தின் பெயரால் சில தன்னலவாதிகள் வன்முறையில் ஈடுபட்டுவருதல் கண்கூடு. இன்று சாதிகள் பெயராலும் வன்முறை இடம் பெறத் தொடங்கிவிட்டது. ஒரே சமயத்தைச் சார்ந்தவர்களிடையில் கூடச் சாதியின் பெயரால் வன்முறை இடம்பெறுவதும், ஒரே சாதியைச் சார்ந்தவர்களிடையில் கூடப் பல்வேறு கார ணங்களில் வன்முறைஇடம் பெறுவதும் இன்று நடைமுறை யாகிவிட்டன. தன்னலமே இத்தகைய குழப்பங்களுக்கும் வன்முறைக்கும் காரணமென்று தெளிவாகிறது.

இத்தகைய வன்முறைகளுக்கு முற்றுப் புள்ளிவைத் தாக வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டு அதற்கெனத் 'திருவருட் பேரவை’ என்னும் அமைப்பினை உருவாக்கி அயராமல் உழைத்து வந்தவர் அமரர் தவப்பெருந்திரு