பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/136

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

123

கலைச் சொல்லாக்கத்தில மணவையாரின பங்கும் பணியும்


பணியும், அவர் வெளியிட்டுள்ள கலை சொற்களஞ்சியங்களும் நமக்கு எடுத்துரைக்கின்றன.

தமிழுணர்வு

தமிழ்த் தொண்டு, தமிழ்ச் சமுதாயத் தொண்டு என்ற சிந்தனை மணவையாரின் பரம்பரையிலேயே ஊறிப்போன பண்பாடு என்பது அவரது வரலாற்றினைப் புரட்டுவோர்க்கு எளிதில் புலப்படும். 'காலம் தேடிய தமிழனின் அறிவியல் தமிழ் வரலாறு' என்ற நூலில் இடம் பெற்றுள்ள செய்தி வருமாறு: மணவையாரின் தந்தையார் தம் இறுதிக் காலத்தில் அவரையழைத்து ஒரு வாக்குறுதியைப் பெற்றுக் கொண்டார். "நீ பெற்ற கல்வித் திறமையால் பெறும் பயன்களை நீ மட்டும் அனுபவிப்பதை நான் விரும்பவில்லை. நீ எதிர்காலத்தில் உனக்காகவும் மற்றவர்களுக்காகவும் என வாழ்வதையே நான் பெரிதும் விரும்புகிறேன். நீ சம்பாதிக்கும் வருமானத்தில் பாதி உனக்கு; மீதமுள்ள பாதி மற்றவர்கட்கு உனக்குள்ள சக்தியில் பாதி உனக்கு; மீதி மற்றவர்கட்கு. இப்படி உனக்குப் பாதி, சமுதாயத்துக்குப் பாதி என நீ ஒருத்தனாவது நம் குடும்பத்தில் வாழ வேண்டும் என்பதுதான் என் ஒரே ஆசை. தணியாத தாகம். என் அறிவுரைப்படி இனி நீ வாழ்ந்தால் உன் சந்ததியும் அப்படியே வாழும். ஒரு நல்ல சந்ததியினை உருவாக்கிய பெருமையும் என்னைச் சாரும்" எனக் கண்ணீர் மல்க தன் மகனைச் சான்றோனாக்கிய பெருமைக்குரிய அத் தந்தை கேட்டுக் கொண்டது வீண் போகவில்லை. மணவையாருக்கு இயற்கையாகவே இருந்த தமிழ்ச் சமுதாயத் தொண்டு மனப்பான்மைக்கு இந்நிகழ்ச்சி மேலும் ஒரு தூண்டுகோலாக அமைந்தது. தன் தந்தையார் தன்னிடம் உறுதிமொழி பெற்றது போன்று, வேறு ஒரு சூழ்நிலையில் தன் மகனிடம் உறுதிமொழி வாங்கினார் மணவையார். தம் செல்ல மகன் டாக்டர் செம்மல் சையத்