பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/145

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர். இராதா செல்லப்பன்

137

ஆங்கிலச் சொல்லுக்கு இணையாக, தமிழில் வழக்குச் சொல் இருக்கும் போது அதனையும் சேர்த்துத் தருகிறார்.

adenoid

மூக்கடித் தசை வளர்ச்சி

மூக்கடியான்

ague

முறைக் காய்ச்சல்

Phobia என்பதற்கு நேராக அச்சம், வெறுப்பு என்ற சொற்களைப் பலரும் கையாளும் நிலையில் மருள். என்ற அழகான இன்னும் பொருத்தமான சொல் இந்நூலில் ஆளப் பட்டுள்ளது.

agrophobia - திடல் மருட்சி

அச்சம் என்பதைவிட, மருள், மருட்சி என்பதே Phobia என்பதற்கு மிகவும் பொருத்தமானதாகத் தோன்றுகிறது.

புதிய தமிழ்ச் சொற்களை அறிமுகப்படுத்தும்போது, பழக்கமான ஆங்கிலச் சொல்லையும் பிறையடைப்பிற்குள் தரும் உத்தி கையாளப்படுகிறது. Hormone உட்சுரப்பு இயக்கு நீர் (ஹார்மோன்).

புதிய சொல்லாக்கங்களும் இவர்தம் களஞ்சியத்திற்கு மெருகூட்டுகின்றன. காட்டாக, காசடுக்கு என்ற சொல்லை கூறலாம்.

Rouleaux - காசடுக்குச் சிவப்பணுக்கள். நாணய அடுக்குப் போன்று இரத்தத்திலுள்ள இரத்தச் சிவப்பணுக் களின் வரிசை என்று விளக்கம் தரப்பட்டுள்ளது.

ஆங்கிலத்தில் வழக்குச் சொற்களாக இருக்கும் சில. கலைச் சொற்கள் பொருளேற்றப்பட்டு, கலைச் சொற்களாக உள்ளன. காட்டாக, Fixation என்ற சொல்லைக் காட்டலாம். இச்சொல் மருத்துவத் துறையின் இரு பிரிவுகளில் இடம் பெறுகிறது. ஒன்று கண் தொடர்பான மருத்துவத் துறை