பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/154

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

146

தமிழில அறிவியல இலக்கியமும் மணவையார் சிந்தனையும்


கருத்தை வெளிக்காட்டுகிறது என்று சுட்டுகின்ற ஆசிரியர் நாளிதழில் வெளிவந்த செய்தி ஒன்றைச் சுட்டிக் காட்டுகிறார். Hundred Rail Sleepers Were Washed என்ற ஆங்கிலச் செய்தித் தலைப்பு "இரயில் தண்டவாளத்தில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த நூறு பேர் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டனர் என்று முற்றிலும் தவறாக மொழி பெயர்க்கப்பட்டதற்குக் காரணம் Rail Sleepars என்பதற்கு "தண்டவாள குறுக்குக் கட்டைகள் என்பதற்குப் பதிலாக இரயிலில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் என்று சொல்லுக்குச் சொல் மொழி பெயர்த்ததால் வந்த பிழையே. இதை பெயர்கள், குறியீடுகள் போன்ற ஒரு சில இடங்களில் மட்டுமே கடைப்பிடிக்க வேண்டுமென்றும், மற்ற இடங்களில் மரபினை ஒட்டியே மொழி பெயர்க்க வேண்டுமென்றும் கூறுகிறார்.

(2) வரையறையற்ற மொழிபெயர்ப்பு (Free Translation)

கதை, இலக்கியங்களை மொழி பெயர்க்க இதுவே சிறந்த உத்தியாகும். மூலக் கரு சிதையாமல் எந்த மொழியில் பெயர்க்கப்படுகிறதோ அந்த மொழியில் மரபுக்கேற்ப பழமொழிகள், மரபுத் தொடர்கள், உத்தி, மொழி நடை ஆகியவற்றைச் சேர்த்து மூல நூலைப் படிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துவதே வரையறையற்ற மொழி பெயர்ப்பு என தெளிவுபடுத்துகிறார் மணவையார்.

(3) பொது மக்களார்வ மொழிபெயர்ப்பு (Popular Translation)

செய்திப் பரிமாற்றத் துறையில் அதிகம் பயன்பட்டுவரும் இந்த மொழி பெயர்ப்பு சாதாரண படிப்பறிவுள்ளவர்களைக் கருத்தில் கொண்டு செய்யப்படும் மொழி பெயர்ப்பாகும். செய்திகளை மொழி பெயர்க்கும்போது மொழி