பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/157

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராம்குமார்

149


தேவையான மொழியில் இரண்டொரு வரிகளில் படம் ஒடிக் கொண்டிருக்கும்போதே திரையின் அடிப்பகுதியில் தோன்றுமாறு அமைப்பர்.

(10) திரைப்பட மொழிமாற்ற பெயர்ப்பு (Dubbing Translation)

திரைப்படங்கள் தொலைக்காட்சிப் படங்களில் வரும் கதாபாத்திரங்கள் பேசும் உரையாடல்கள் வேற்று மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு பேசப்படும்போது பாத்திரத்தின் உதட்டசைவுகளுக்கு ஏற்ப உரிய சொற்கள் பயன்படுத்தப்பட வேண்டும். மூல மொழியில் பேசுவதற்கு எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்ளப்படுகிறதோ அதே அளவு நேரத்திற்குள் மொழி மாற்றம் அமையவேண்டும்.

(11) கருவி மொழி பெய்ர்ப்பு (Machine Translation)

கணினியின் துணைகொண்டு செய்யப்படும் இந்த வகையான மொழி பெயர்ப்புக்குத் தொடர்ந்து முயற்சிகள் நடைபெற்று வந்த போதிலும் நம்பிக்கையூட்டும் வெற்றி இன்னும் கிடைக்கவில்லை. ஜப்பானிய மொழி மற்றும் பிற ஐரோப்பிய மொழிகளில் ஒரளவு வெற்றியடைந்துள்ள இம்முறை இன்னும் தமிழ் - ஆங்கிலம், தமிழ்- பிறமொழிகளில் மிகவும் பின்னடைந்தே காணப்படுகிறது.

(12) சிறுவருக்கான மொழிபெயர்ப்பு (Translation for Children)

சிறுவருக்குப் புரியும் வகையில் மொழிபெயர்ப்பு செய்வது பற்றி ஆழமாக இதுவரை சிந்திக்கப்படவில்லை. வளரும் தலைமுறையினரின் அறிவுத் தாகத்தைத் தணிக்க மொழிபெயர்ப்பும் ஒரு சிறந்த கருவியாக அமையும், சொல்லும் முறை, நடை, சொற்களில் எளிமை ஆகியவை