பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/165

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

157


'தமிழ்க் களஞ்சியம்' மணவையார்

மு. அறிவானந்தம்

வளர்தமிழ்ச் செல்வர் மணவை முஸ்தபாவின் பல தரப்பட்ட நூல்களில் தனிச் சிறப்புடைய நூல்களாக விளங்குபவை கலைக் களஞ்சிய நூல்களும் அறிவியல் களஞ்சிய அகராதிகளுமாகும். இவை அமைப்பிலும் பொருள் உள்ளடக்கத்திலும் தனிச் சிறப்பும் தனித்துவமுடையனவாகும்.

இவரது களஞ்சிய நூல்களுள் மூன்று குறும் (மினி) கலைக் களஞ்சியங்களாகும். அவையாவன :

1. சிறுவர் கலைக் களஞ்சியம்

2. இளைஞர் இஸ்லாமியக் கலைக் களஞ்சியம்

3. இளையர் அறிவியல் களஞ்சியம் இவர் ஐந்து கலைச் சொல் களஞ்சிய அகராதிகளையும் உருவாக்கியுள்ளார். அவையாவன :-

1. அறிவியல் கலைச் சொல் களஞ்சியம் (முதற்பகுதி)

2. அறிவியல் கலைச் சொல் களஞ்சியம் (இரண்டாம் பகுதி).

3. மருத்துவ, அறிவியல், தொழில் நுட்பக் கலைச் சொல் களஞ்சிய அகராதி