பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/171

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மு அறிவானந்தம்

163


அச்சொற்கள் உணர்த்தும் பொருளை ஆசிரியர் ஆங்காங்கே குறிப்பிடத் தவறவில்லை.

'செய்வன திருந்தச் செய்' எனும் கொள்கையை உயிர் மூச்சாகக் கொண்ட மணவையார் இஸ்லாமியச் செய்தியாக இருப்பதாலும், இளையோர்க்குரியதாக அமைவதாலும் எந்தத் தவறும் இடம் பெற்றுவிடக் கூடாது என்பதற்காக பன்னூலாசிரியர் எம்.ஆர்.எம். அப்துற்-ரஹீம், மெளலவி எம். அப்துல் வஹ்ஹாப் சாஹிப், 'ஜமாத்துல் உலமா' ஆசிரியர் மெளலவி அபுல் ஹஸன் ஷாதலி முதலிய மார்க்க ஞானச் செல்வர்களால் சரிபார்க்கப்பட்டு, சீர்மை செய்த பின்னரே நூலாக்கியுள்ளார் என்பது இந்நூல் எல்லா வகையிலும் செப்பமாக அமைய வேண்டும் என்பதில் இவர்க்குள்ள அக்கறையையும் ஆர்வத்தையும் காட்டுகிறது.

இந்நூலுள் கணிசமான எண்ணிக்கையில் தமிழ்நாடு தொடர்பான வலிமார்கள், சூஃபிகள், புலவர்கள் பலரும் இடம் பெற்றுள்ளதோடு, அவர்களின் சாதனைகளும் அவர் தம் வாழ்க்கை வரலாறு வழியே விளக்கிக் கூறியிருப்பது சிறப்பானதாகவுள்ளது.

இளையர் அறிவியல் களஞ்சியம்

முன்னதாக மணவையார் எழுதி வெளியிட்ட இரு கலைக் களஞ்சியங்கள் வெவ்வேறு பொருள் வகையைச் சேர்ந்ததாகும். இவர் எழுதி வெளியிட்ட மூன்றாவது கலைக் களஞ்சியமான "இளையர் அறிவியல் களஞ்சியம்" பல்வேறு வகைகளில் தனித்தன்மை மிக்கதாக விளங்குகிறது. இக்களஞ்சிய உருவாக்கத்திற்கான காரணத்தை விளக்கும் மணவையார்,

"தமிழ்ப் பல்கலைக்கழக அறிவியல் களஞ்சியங்கள் இதுவரை ஒருசில தொகுதிகள் வெளிவந்திருந்தாலும்