பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/175

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மு. அறிவானந்தம்


இவ்விதழ் அச்செய்திகள் தமிழிலும் உடனுக்குடன் சொல்ல வேண்டிய கட்டாயச் சூழல். இதனால் ஒவ்வொரு இதழிலும் வெளிவரும் கட்டுரைகளைத் தமிழில் தரும்போது அதில் வரும் கலைச் சொற்களுக்கான தமிழ் நேர்ச் சொற்களை உடனுக்குடன் உருவாக்கிச் சொல்லவேண்டிய தவிர்க்க முடியா நிலை. எனவே அறிவியல் முதலாக உள்ள அத்தகைய தமிழ்க் கலைச் சொற்களை உருவாக்கம் செய்வதில் வல்லவராக - தனித்திறன் பெற்ற சொல்லாக்க வல்லுநராகப் பரிணமித்துள்ளார்.

தென் மொழிகள் புத்தக டிரஸ்ட், அறிவியல் நூல்களையும் தொழில் நுட்ப நூல்களையும் அதிக அளவில் வெளியிட்டபோது அவற்றைத் தயாரித்துப் பதிப்பிக்கும் பொறுப்பேற்றிருந்த மணவையார் அந்நூல்களுக்காக பல நூறு அறிவியல், தொழில் நுட்பக் கலைச் சொற்களைத் தமிழில் உருவாக்கிப் பயன்படுத்திய பட்டறிவு அறிவியல் கலைக் சொல் களஞ்சிய அகராதிகளை உருவாக்க பேருதவியாய் அமைந்ததெனலாம்.

இவரது கலைச் சொல் களஞ்சியங்கள் ஒரு புதுவகையான நூல்களாகும். எதிலும் தனக்கென ஒரு தனித்துவப் போக்கைக் கையாண்டு புதியன புனையும் போக்குடைய மணவையார் இதிலும் தனித்துவமுடைய புதுமையைப் புதுக்கியுள்ளார் என்றே கூற வேண்டும்.

இவரால் உருவாக்கப்பட்ட கலைச் சொல் களஞ்சியங்கள் அனைத்தும் அகராதிப் போக்கையும் கலைக் களஞ்சியங்களுக்குரிய அடிப்படையையும் ஒருங்கே கொண்டவைகளாக அமைந்துள்ளன.

அகர வரிசையில் அமைந்துள்ள ஆங்கில அறிவியல் கலைச் சொல்லுக்கு நேர்த் தமிழ்க் கலைச் சொல்லைச்